Wednesday, April 20, 2016

Maththeayu 19 | மத்தேயு 19 | Matthew 19

இயேசு  இந்த  வசனங்களைச்  சொல்லி  முடித்தபின்பு,  அவர்  கலிலேயாவை  விட்டு  யோர்தானுக்கு  அக்கரையான  யூதேயாவின்  எல்லைகளில்  வந்தார்.  (மத்தேயு  19:1)

iyeasu  intha  vasanangga'laich  solli  mudiththapinbu,  avar  kalileayaavai  vittu  yoarthaanukku  akkaraiyaana  yootheayaavin  ellaiga'lil  vanthaar.  (maththeayu  19:1)

திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்;  அவ்விடத்தில்  அவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  (மத்தேயு  19:2)

thira'laana  janangga'l  avarukkup  pinsen'raarga'l;  avvidaththil  avarga'laich  sosthamaakkinaar.  (maththeayu  19:2)

அப்பொழுது,  பரிசேயர்  அவரைச்  சோதிக்கவேண்டுமென்று  அவரிடத்தில்  வந்து:  புருஷனானவன்  தன்  மனைவியை  எந்த  முகாந்தரத்தினாலாகிலும்  தள்ளிவிடுவது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  19:3)

appozhuthu,  pariseayar  avaraich  soathikkavea'ndumen'ru  avaridaththil  vanthu:  purushanaanavan  than  manaiviyai  entha  mugaantharaththinaalaagilum  tha'l'lividuvathu  niyaayamaa  en'ru  keattaarga'l.  (maththeayu  19:3)

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  ஆதியிலே  மனுஷரை  உண்டாக்கினவர்  அவர்களை  ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார்  என்பதையும்,  (மத்தேயு  19:4)

avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  aathiyilea  manusharai  u'ndaakkinavar  avarga'lai  aa'num  pe'n'numaaga  u'ndaakkinaar  enbathaiyum,  (maththeayu  19:4)

இதினிமித்தம்  புருஷனானவன்  தன்  தகப்பனையும்  தாயையும்  விட்டுத்  தன்  மனைவியோடே  இசைந்திருப்பான்;  அவர்கள்  இருவரும்  ஒரே  மாம்சமாயிருப்பார்கள்  என்று  அவர்  சொன்னதையும்,  நீங்கள்  வாசிக்கவில்லையா?  (மத்தேயு  19:5)

ithinimiththam  purushanaanavan  than  thagappanaiyum  thaayaiyum  vittuth  than  manaiviyoadea  isainthiruppaan;  avarga'l  iruvarum  orea  maamsamaayiruppaarga'l  en'ru  avar  sonnathaiyum,  neengga'l  vaasikkavillaiyaa?  (maththeayu  19:5)

இப்படி  இருக்கிறபடியினால்,  அவர்கள்  இருவராயிராமல்,  ஒரே  மாம்சமாயிருக்கிறார்கள்;  ஆகையால்,  தேவன்  இணைத்ததை  மனுஷன்  பிரிக்காதிருக்கக்கடவன்  என்றார்.  (மத்தேயு  19:6)

ippadi  irukki'rapadiyinaal,  avarga'l  iruvaraayiraamal,  orea  maamsamaayirukki'raarga'l;  aagaiyaal,  theavan  i'naiththathai  manushan  pirikkaathirukkakkadavan  en'raar.  (maththeayu  19:6)

அதற்கு  அவர்கள்:  அப்படியானால்,  தள்ளுதற்சீட்டைக்  கொடுத்து,  அவளைத்  தள்ளிவிடலாமென்று  மோசே  ஏன்  கட்டளையிட்டார்  என்றார்கள்.  (மத்தேயு  19:7)

atha’rku  avarga'l:  appadiyaanaal,  tha'l'lutha’rseettaik  koduththu,  ava'laith  tha'l'lividalaamen'ru  moasea  ean  katta'laiyittaar  en'raarga'l.  (maththeayu  19:7)

அதற்கு  அவர்:  உங்கள்  மனைவிகளைத்  தள்ளிவிடலாமென்று  உங்கள்  இருதயகடினத்தினிமித்தம்  மோசே  உங்களுக்கு  இடங்கொடுத்தார்;  ஆதிமுதலாய்  அப்படியிருக்கவில்லை.  (மத்தேயு  19:8)

atha’rku  avar:  ungga'l  manaiviga'laith  tha'l'lividalaamen'ru  ungga'l  iruthayakadinaththinimiththam  moasea  ungga'lukku  idangkoduththaar;  aathimuthalaay  appadiyirukkavillai.  (maththeayu  19:8)

ஆதலால்,  எவனாகிலும்  தன்  மனைவி  வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி,  அவளைத்  தள்ளிவிட்டு  வேறொருத்தியை  விவாகம்பண்ணினால்,  அவன்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;  தள்ளிவிடப்பட்டவளை  விவாகம்பண்ணுகிறவனும்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மத்தேயு  19:9)

aathalaal,  evanaagilum  than  manaivi  veasiththanagnseythathinimiththameayan'ri,  ava'laith  tha'l'livittu  vea'roruththiyai  vivaagampa'n'ninaal,  avan  vibasaaragnseygi'ravanaayiruppaan;  tha'l'lividappattava'lai  vivaagampa'n'nugi'ravanum  vibasaaragnseygi'ravanaayiruppaan  en'ru  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  19:9)

அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  மனைவியைப்பற்றிப்  புருஷனுடைய  காரியம்  இப்படியிருந்தால்,  விவாகம்பண்ணுகிறது  நல்லதல்ல  என்றார்கள்.  (மத்தேயு  19:10)

avarudaiya  seesharga'l  avarai  noakki:  manaiviyaippat’rip  purushanudaiya  kaariyam  ippadiyirunthaal,  vivaagampa'n'nugi'rathu  nallathalla  en'raarga'l.  (maththeayu  19:10)

அதற்கு  அவர்:  வரம்பெற்றவர்களே  தவிர  மற்றவர்கள்  இந்த  வசனத்தை  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  (மத்தேயு  19:11)

atha’rku  avar:  varampet’ravarga'lea  thavira  mat'ravarga'l  intha  vasanaththai  eat’rukko'l'lamaattaarga'l.  (maththeayu  19:11)

தாயின்  வயிற்றிலிருந்து  அண்ணகர்களாய்ப்  பிறந்தவர்களும்  உண்டு;  மனுஷர்களால்  அண்ணகர்களாக்கப்பட்டவர்களும்  உண்டு;  பரலோகராஜ்யத்தினிமித்தம்  தங்களை  அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும்  உண்டு;  இதை  ஏற்றுக்கொள்ள  வல்லவன்  ஏற்றுக்கொள்ளக்கடவன்  என்றார்.  (மத்தேயு  19:12)

thaayin  vayit'rilirunthu  a'n'nagarga'laayp  pi'ranthavarga'lum  u'ndu;  manusharga'laal  a'n'nagarga'laakkappattavarga'lum  u'ndu;  paraloagaraajyaththinimiththam  thangga'lai  a'n'nagarga'laakkikko'ndavarga'lum  u'ndu;  ithai  eat'rukko'l'la  vallavan  eat'rukko'l'lakkadavan  en'raar.  (maththeayu  19:12)

அப்பொழுது,  சிறு  பிள்ளைகளின்மேல்  அவர்  கைகளை  வைத்து  ஜெபம்பண்ணும்படிக்கு  அவர்களை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்;  கொண்டுவந்தவர்களைச்  சீஷர்கள்  அதட்டினார்கள்.  (மத்தேயு  19:13)

appozhuthu,  si'ru  pi'l'laiga'linmeal  avar  kaiga'lai  vaiththu  jebampa'n'numpadikku  avarga'lai  avaridaththil  ko'nduvanthaarga'l;  ko'nduvanthavarga'laich  seesharga'l  athattinaarga'l.  (maththeayu  19:13)

இயேசுவோ:  சிறு  பிள்ளைகள்  என்னிடத்தில்  வருகிறதற்கு  இடங்கொடுங்கள்;  அவர்களைத்  தடைபண்ணாதிருங்கள்;  பரலோகராஜ்யம்  அப்படிப்பட்டவர்களுடையது  என்று  சொல்லி,  (மத்தேயு  19:14)

iyeasuvoa:  si'ru  pi'l'laiga'l  ennidaththil  varugi'ratha’rku  idangkodungga'l;  avarga'laith  thadaipa'n'naathirungga'l;  paraloagaraajyam  appadippattavarga'ludaiyathu  en'ru  solli,  (maththeayu  19:14)

அவர்கள்மேல்  கைகளை  வைத்து,  பின்பு  அவ்விடம்விட்டுப்  புறப்பட்டுப்போனார்.  (மத்தேயு  19:15)

avarga'lmeal  kaiga'lai  vaiththu,  pinbu  avvidamvittup  pu'rappattuppoanaar.  (maththeayu  19:15)

அப்பொழுது  ஒருவன்  வந்து,  அவரை  நோக்கி:  நல்ல  போதகரே,  நித்தியஜீவனை  அடைவதற்கு  நான்  எந்த  நன்மையைச்  செய்யவேண்டும்  என்று  கேட்டான்.  (மத்தேயு  19:16)

appozhuthu  oruvan  vanthu,  avarai  noakki:  nalla  poathagarea,  niththiyajeevanai  adaivatha’rku  naan  entha  nanmaiyaich  seyyavea'ndum  en'ru  keattaan.  (maththeayu  19:16)

அதற்கு  அவர்:  நீ  என்னை  நல்லவன்  என்று  சொல்வானேன்?  தேவன்  ஒருவர்  தவிர  நல்லவன்  ஒருவனும்  இல்லையே;  நீ  ஜீவனில்  பிரவேசிக்க  விரும்பினால்  கற்பனைகளைக்  கைக்கொள்  என்றார்.  (மத்தேயு  19:17)

atha’rku  avar:  nee  ennai  nallavan  en'ru  solvaanean?  theavan  oruvar  thavira  nallavan  oruvanum  illaiyea;  nee  jeevanil  piraveasikka  virumbinaal  ka’rpanaiga'laik  kaikko'l  en'raar.  (maththeayu  19:17)

அவன்  அவரை  நோக்கி:  எவைகளை  என்று  கேட்டான்.  அதற்கு  இயேசு:  கொலை  செய்யாதிருப்பாயாக,  விபசாரஞ்  செய்யாதிருப்பாயாக,  களவு  செய்யாதிருப்பாயாக,  பொய்ச்சாட்சி  சொல்லாதிருப்பாயாக;  (மத்தேயு  19:18)

avan  avarai  noakki:  evaiga'lai  en'ru  keattaan.  atha’rku  iyeasu:  kolai  seyyaathiruppaayaaga,  vibasaaragn  seyyaathiruppaayaaga,  ka'lavu  seyyaathiruppaayaaga,  poychsaadchi  sollaathiruppaayaaga;  (maththeayu  19:18)

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக;  உன்னிடத்தில்  நீ  அன்புகூருவதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்பவைகளையே  என்றார்.  (மத்தேயு  19:19)

un  thagappanaiyum  un  thaayaiyum  kanampa'n'nuvaayaaga;  unnidaththil  nee  anbukooruvathupoalap  pi'ranidaththilum  anbukooruvaayaaga  enbavaiga'laiyea  en'raar.  (maththeayu  19:19)

அந்த  வாலிபன்  அவரை  நோக்கி:  இவைகளையெல்லாம்  என்  சிறுவயதுமுதல்  கைக்கொண்டிருக்கிறேன்;  இன்னும்  என்னிடத்தில்  குறைவு  என்ன  என்றான்.  (மத்தேயு  19:20)

antha  vaaliban  avarai  noakki:  ivaiga'laiyellaam  en  si'ruvayathumuthal  kaikko'ndirukki'rean;  innum  ennidaththil  ku'raivu  enna  en'raan.  (maththeayu  19:20)

அதற்கு  இயேசு:  நீ  பூரண  சற்குணனாயிருக்க  விரும்பினால்,  போய்,  உனக்கு  உண்டானவைகளை  விற்று,  தரித்திரருக்குக்  கொடு,  அப்பொழுது,  பரலோகத்தில்  உனக்குப்  பொக்கிஷம்  உண்டாயிருக்கும்;  பின்பு  என்னைப்  பின்பற்றிவா  என்றார்.  (மத்தேயு  19:21)

atha’rku  iyeasu:  nee  poora'na  sa’rku'nanaayirukka  virumbinaal,  poay,  unakku  u'ndaanavaiga'lai  vit'ru,  thariththirarukkuk  kodu,  appozhuthu,  paraloagaththil  unakkup  pokkisham  u'ndaayirukkum;  pinbu  ennaip  pinpat'rivaa  en'raar.  (maththeayu  19:21)

அந்த  வாலிபன்  மிகுந்த  ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால்,  இந்த  வார்த்தையைக்  கேட்டபொழுது,  துக்கமடைந்தவனாய்ப்  போய்விட்டான்.  (மத்தேயு  19:22)

antha  vaaliban  miguntha  aasthiyu'l'lavanaayirunthapadiyaal,  intha  vaarththaiyaik  keattapozhuthu,  thukkamadainthavanaayp  poayvittaan.  (maththeayu  19:22)

அப்பொழுது,  இயேசு  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஐசுவரியவான்  பரலோகராஜ்யத்தில்  பிரவேசிப்பது  அரிதென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  19:23)

appozhuthu,  iyeasu  thammudaiya  seesharga'lai  noakki:  aisuvariyavaan  paraloagaraajyaththil  piraveasippathu  arithen'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  19:23)

மேலும்  ஐசுவரியவான்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பதைப்பார்க்கிலும்,  ஒட்டகமானது  ஊசியின்  காதிலே  நுழைவது  எளிதாயிருக்கும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மத்தேயு  19:24)

mealum  aisuvariyavaan  theavanudaiya  raajyaththil  piraveasippathaippaarkkilum,  ottagamaanathu  oosiyin  kaathilea  nuzhaivathu  e'lithaayirukkum  en'ru  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  19:24)

அவருடைய  சீஷர்கள்  அதைக்கேட்டு  மிகவும்  ஆச்சரியப்பட்டு:  அப்படியானால்,  யார்  ரட்சிக்கப்படக்கூடும்  என்றார்கள்.  (மத்தேயு  19:25)

avarudaiya  seesharga'l  athaikkeattu  migavum  aachchariyappattu:  appadiyaanaal,  yaar  radchikkappadakkoodum  en'raarga'l.  (maththeayu  19:25)

இயேசு,  அவர்களைப்  பார்த்து:  மனுஷரால்  இது  கூடாததுதான்;  தேவனாலே  எல்லாம்  கூடும்  என்றார்.  (மத்தேயு  19:26)

iyeasu,  avarga'laip  paarththu:  manusharaal  ithu  koodaathathuthaan;  theavanaalea  ellaam  koodum  en'raar.  (maththeayu  19:26)

அப்பொழுது,  பேதுரு  அவரை  நோக்கி:  இதோ,  நாங்கள்  எல்லாவற்றையும்  விட்டு,  உம்மைப்  பின்பற்றினோமே;  எங்களுக்கு  என்ன  கிடைக்கும்  என்றான்.  (மத்தேயு  19:27)

appozhuthu,  peathuru  avarai  noakki:  ithoa,  naangga'l  ellaavat’raiyum  vittu,  ummaip  pinpat'rinoamea;  engga'lukku  enna  kidaikkum  en'raan.  (maththeayu  19:27)

அதற்கு  இயேசு:  மறுஜென்மகாலத்திலே  மனுஷகுமாரன்  தம்முடைய  மகிமையுள்ள  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்போது,  என்னைப்  பின்பற்றின  நீங்களும்,  இஸ்ரவேலின்  பன்னிரண்டு  கோத்திரங்களையும்  நியாயந்தீர்க்கிறவர்களாகப்  பன்னிரண்டு  சிங்காசனங்களின்மேல்  வீற்றிருப்பீர்கள்  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  19:28)

atha’rku  iyeasu:  ma'rujenmakaalaththilea  manushakumaaran  thammudaiya  magimaiyu'l'la  singgaasanaththinmeal  veet'rirukkumpoathu,  ennaip  pinpat'rina  neengga'lum,  isravealin  pannira'ndu  koaththirangga'laiyum  niyaayantheerkki'ravarga'laagap  pannira'ndu  singgaasanangga'linmeal  veet'riruppeerga'l  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  19:28)

என்  நாமத்தினிமித்தம்  வீட்டையாவது,  சகோதரரையாவது,  சகோதரிகளையாவது,  தகப்பனையாவது,  தாயையாவது,  மனைவியையாவது,  பிள்ளைகளையாவது,  நிலங்களையாவது  விட்டவன்  எவனோ,  அவன்  நூறத்தனையாய்  அடைந்து,  நித்தியஜீவனையும்  சுதந்தரித்துக்கொள்ளுவான்;  (மத்தேயு  19:29)

en  naamaththinimiththam  veettaiyaavathu,  sagoathararaiyaavathu,  sagoathariga'laiyaavathu,  thagappanaiyaavathu,  thaayaiyaavathu,  manaiviyaiyaavathu,  pi'l'laiga'laiyaavathu,  nilangga'laiyaavathu  vittavan  evanoa,  avan  noo'raththanaiyaay  adainthu,  niththiyajeevanaiyum  suthanthariththukko'l'luvaan;  (maththeayu  19:29)

ஆகிலும்,  முந்தினோர்  அநேகர்  பிந்தினோராயும்,  பிந்தினோர்  அநேகர்  முந்தினோராயும்  இருப்பார்கள்  என்றார்.  (மத்தேயு  19:30)

aagilum,  munthinoar  aneagar  pinthinoaraayum,  pinthinoar  aneagar  munthinoaraayum  iruppaarga'l  en'raar.  (maththeayu  19:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!