Monday, April 18, 2016

Maththeayu 17 | மத்தேயு 17 | Matthew 17


ஆறுநாளைக்குப்  பின்பு,  இயேசு  பேதுருவையும்  யாக்கோபையும்  அவனுடைய  சகோதரனாகிய  யோவானையும்  கூட்டிக்கொண்டு  தனித்திருக்கும்படி  உயர்ந்த  மலையின்மேல்  போய்,  (மத்தேயு  17:1)

aa'runaa'laikkup  pinbu,  iyeasu  peathuruvaiyum  yaakkoabaiyum  avanudaiya  sagoatharanaagiya  yoavaanaiyum  koottikko'ndu  thaniththirukkumpadi  uyarntha  malaiyinmeal  poay,  (maththeayu  17:1)

அவர்களுக்கு  முன்பாக  மறுரூபமானார்;  அவர்  முகம்  சூரியனைப்போலப்  பிரகாசித்தது,  அவர்  வஸ்திரம்  வெளிச்சத்தைப்போல  வெண்மையாயிற்று.  (மத்தேயு  17:2)

avarga'lukku  munbaaga  ma'ruroobamaanaar;  avar  mugam  sooriyanaippoalap  piragaasiththathu,  avar  vasthiram  ve'lichchaththaippoala  ve'nmaiyaayit’ru.  (maththeayu  17:2)

அப்பொழுது  மோசேயும்  எலியாவும்  அவரோடே  பேசுகிறவர்களாக  அவர்களுக்குக்  காணப்பட்டார்கள்.  (மத்தேயு  17:3)

appozhuthu  moaseayum  eliyaavum  avaroadea  peasugi'ravarga'laaga  avarga'lukkuk  kaa'nappattaarga'l.  (maththeayu  17:3)

அப்பொழுது  பேதுரு  இயேசுவை  நோக்கி:  ஆண்டவரே,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது;  உமக்குச்  சித்தமானால்,  இங்கே  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்றான்.  (மத்தேயு  17:4)

appozhuthu  peathuru  iyeasuvai  noakki:  aa'ndavarea,  naam  inggea  irukki'rathu  nallathu;  umakkuch  siththamaanaal,  inggea  umakku  oru  koodaaramum,  moaseakku  oru  koodaaramum,  eliyaavukku  oru  koodaaramumaaga,  moon'ru  koodaarangga'laip  poaduvoam  en'raan.  (maththeayu  17:4)

அவன்  பேசுகையில்,  இதோ,  ஒளியுள்ள  ஒரு  மேகம்  அவர்கள்மேல்  நிழலிட்டது.  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரில்  பிரியமாயிருக்கிறேன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  அந்த  மேகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  (மத்தேயு  17:5)

avan  peasugaiyil,  ithoa,  o'liyu'l'la  oru  meagam  avarga'lmeal  nizhalittathu.  ivar  ennudaiya  neasakumaaran,  ivaril  piriyamaayirukki'rean,  ivarukkuch  sevikodungga'l  en'ru  antha  meagaththilirunthu  oru  saththam  u'ndaayit’ru.  (maththeayu  17:5)

சீஷர்கள்  அதைக்  கேட்டு,  முகங்குப்புற  விழுந்து,  மிகவும்  பயந்தார்கள்.  (மத்தேயு  17:6)

seesharga'l  athaik  keattu,  mugangkuppu'ra  vizhunthu,  migavum  bayanthaarga'l.  (maththeayu  17:6)

அப்பொழுது,  இயேசு  வந்து,  அவர்களைத்  தொட்டு:  எழுந்திருங்கள்,  பயப்படாதேயுங்கள்  என்றார்.  (மத்தேயு  17:7)

appozhuthu,  iyeasu  vanthu,  avarga'laith  thottu:  ezhunthirungga'l,  bayappadaatheayungga'l  en'raar.  (maththeayu  17:7)

அவர்கள்  தங்கள்  கண்களை  ஏறெடுத்துப்  பார்க்கையில்  இயேசுவைத்தவிர  வேறொருவரையும்  காணவில்லை.  (மத்தேயு  17:8)

avarga'l  thangga'l  ka'nga'lai  ea'reduththup  paarkkaiyil  iyeasuvaiththavira  vea'roruvaraiyum  kaa'navillai.  (maththeayu  17:8)

அவர்கள்  மலையிலிருந்து  இறங்குகிறபோது,  இயேசு  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கும்வரைக்கும்  இந்தத்  தரிசனத்தை  ஒருவருக்கும்  சொல்லவேண்டாம்  என்று  கட்டளையிட்டார்.  (மத்தேயு  17:9)

avarga'l  malaiyilirunthu  i'ranggugi'rapoathu,  iyeasu  avarga'lai  noakki:  manushakumaaran  mariththoarilirunthu  ezhunthirukkumvaraikkum  inthath  tharisanaththai  oruvarukkum  sollavea'ndaam  en'ru  katta'laiyittaar.  (maththeayu  17:9)

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  அவரை  நோக்கி:  அப்படியானால்  எலியா  முந்தி  வரவேண்டும்  என்று  வேதபாரகர்  சொல்லுகிறார்களே,  அதெப்படி  யென்று  கேட்டார்கள்.  (மத்தேயு  17:10)

appozhuthu,  avarudaiya  seesharga'l  avarai  noakki:  appadiyaanaal  eliyaa  munthi  varavea'ndum  en'ru  veathapaaragar  sollugi'raarga'lea,  atheppadi  yen'ru  keattaarga'l.  (maththeayu  17:10)

இயேசு  அவர்களுக்குப்  பிரதியுத்தரமாக:  எலியா  முந்திவந்து  எல்லாவற்றையும்  சீர்ப்படுத்துவது  மெய்தான்.  (மத்தேயு  17:11)

iyeasu  avarga'lukkup  pirathiyuththaramaaga:  eliyaa  munthivanthu  ellaavat’raiyum  seerppaduththuvathu  meythaan.  (maththeayu  17:11)

ஆனாலும்,  எலியா  வந்தாயிற்று  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்;  அவனை  அறியாமல்  தங்கள்  இஷ்டப்படி  அவனுக்குச்  செய்தார்கள்;  இவ்விதமாய்  மனுஷகுமாரனும்  அவர்களால்  பாடுபடுவார்  என்றார்.  (மத்தேயு  17:12)

aanaalum,  eliyaa  vanthaayit'ru  en'ru  ungga'lukkuch  sollugi'rean;  avanai  a'riyaamal  thangga'l  ishdappadi  avanukkuch  seythaarga'l;  ivvithamaay  manushakumaaranum  avarga'laal  paadupaduvaar  en'raar.  (maththeayu  17:12)

அவர்  யோவான்ஸ்நானனைக்குறித்துத்  தங்களுக்குச்  சொன்னார்  என்று  சீஷர்கள்  அப்பொழுது  அறிந்துகொண்டார்கள்.  (மத்தேயு  17:13)

avar  yoavaansnaananaikku'riththuth  thangga'lukkuch  sonnaar  en'ru  seesharga'l  appozhuthu  a'rinthuko'ndaarga'l.  (maththeayu  17:13)

அவர்கள்  ஜனங்களிடத்தில்  வந்தபோது,  ஒரு  மனுஷன்  அவரிடத்தில்  வந்து,  அவர்  முன்பாக  முழங்கால்படியிட்டு:  (மத்தேயு  17:14)

avarga'l  janangga'lidaththil  vanthapoathu,  oru  manushan  avaridaththil  vanthu,  avar  munbaaga  muzhangkaalpadiyittu:  (maththeayu  17:14)

ஆண்டவரே,  என்  மகனுக்கு  இரங்கும்,  அவன்  சந்திரரோகியாய்க்  கொடிய  வேதனைப்படுகிறான்;  அடிக்கடி  தீயிலும்,  அடிக்கடி  ஜலத்திலும்  விழுகிறான்.  (மத்தேயு  17:15)

aa'ndavarea,  en  maganukku  iranggum,  avan  santhiraroagiyaayk  kodiya  veathanaippadugi'raan;  adikkadi  theeyilum,  adikkadi  jalaththilum  vizhugi'raan.  (maththeayu  17:15)

அவனை  உம்முடைய  சீஷர்களிடத்தில்  கொண்டுவந்தேன்;  அவனைச்  சொஸ்தமாக்க  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  (மத்தேயு  17:16)

avanai  ummudaiya  seesharga'lidaththil  ko'nduvanthean;  avanaich  sosthamaakka  avarga'laal  koodaama’rpoayit'ru  en'raan.  (maththeayu  17:16)

இயேசு  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  மாறுபாடுள்ள  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடு  இருப்பேன்?  எதுவரைக்கும்  உங்களிடத்தில்  பொறுமையாய்  இருப்பேன்?  அவனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  (மத்தேயு  17:17)

iyeasu  pirathiyuththaramaaga:  visuvaasamillaatha  maa'rupaadu'l'la  santhathiyea,  ethuvaraikkum  naan  ungga'loadu  iruppean?  ethuvaraikkum  ungga'lidaththil  po'rumaiyaay  iruppean?  avanai  ennidaththil  ko'nduvaarungga'l  en'raar.  (maththeayu  17:17)

இயேசு  பிசாசை  அதட்டினார்;  உடனே  அது  அவனை  விட்டுப்  புறப்பட்டது;  அந்நேரமே  அந்த  இளைஞன்  சொஸ்தமானான்.  (மத்தேயு  17:18)

iyeasu  pisaasai  athattinaar;  udanea  athu  avanai  vittup  pu'rappattathu;  annearamea  antha  i'laignan  sosthamaanaan.  (maththeayu  17:18)

அப்பொழுது,  சீஷர்கள்  இயேசுவினிடத்தில்  தனித்துவந்து:  அதைத்  துரத்திவிட  எங்களால்  ஏன்  கூடாமற்போயிற்று  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  17:19)

appozhuthu,  seesharga'l  iyeasuvinidaththil  thaniththuvanthu:  athaith  thuraththivida  engga'laal  ean  koodaama’rpoayit'ru  en'ru  keattaarga'l.  (maththeayu  17:19)

அதற்கு  இயேசு:  உங்கள்  அவிசுவாசத்தினாலேதான்;  கடுகுவிதையளவு  விசுவாசம்  உங்களுக்கு  இருந்தால்  நீங்கள்  இந்த  மலையைப்  பார்த்து,  இவ்விடம்  விட்டு  அப்புறம்போ  என்று  சொல்ல  அது  அப்புறம்  போம்;  உங்களால்  கூடாதகாரியம்  ஒன்றுமிராது  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  17:20)

atha’rku  iyeasu:  ungga'l  avisuvaasaththinaaleathaan;  kaduguvithaiya'lavu  visuvaasam  ungga'lukku  irunthaal  neengga'l  intha  malaiyaip  paarththu,  ivvidam  vittu  appu'rampoa  en'ru  solla  athu  appu'ram  poam;  ungga'laal  koodaathakaariyam  on'rumiraathu  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  17:20)

இந்த  ஜாதிப்  பிசாசு  ஜெபத்தினாலும்  உபவாசத்தினாலுமேயன்றி  மற்றெவ்விதத்தினாலும்  புறப்பட்டுப்போகாது  என்றார்.  (மத்தேயு  17:21)

intha  jaathip  pisaasu  jebaththinaalum  ubavaasaththinaalumeayan'ri  mat’revvithaththinaalum  pu'rappattuppoagaathu  en'raar.  (maththeayu  17:21)

அவர்கள்  கலிலேயாவிலே  சஞ்சரிக்கும்போது,  இயேசு  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்.  (மத்தேயு  17:22)

avarga'l  kalileayaavilea  sagncharikkumpoathu,  iyeasu  avarga'lai  noakki:  manushakumaaran  manushar  kaiga'lil  oppukkodukkappaduvaar.  (maththeayu  17:22)

அவர்கள்  அவரைக்  கொலைசெய்வார்கள்;  ஆகிலும்  மூன்றாம்  நாளிலே  உயிர்த்தெழுந்திருப்பார்  என்றார்.  அவர்கள்  மிகுந்த  துக்கமடைந்தார்கள்.  (மத்தேயு  17:23)

avarga'l  avaraik  kolaiseyvaarga'l;  aagilum  moon'raam  naa'lilea  uyirththezhunthiruppaar  en'raar.  avarga'l  miguntha  thukkamadainthaarga'l.  (maththeayu  17:23)

அவர்கள்  கப்பர்நகூமில்  வந்தபோது,  வரிப்பணம்  வாங்குகிறவர்கள்  பேதுருவினிடத்தில்  வந்து:  உங்கள்  போதகர்  வரிப்பணம்  செலுத்துகிறதில்லையா  என்று  கேட்டார்கள்;  செலுத்துகிறார்  என்றான்.  (மத்தேயு  17:24)

avarga'l  kapparnahoomil  vanthapoathu,  varippa'nam  vaanggugi'ravarga'l  peathuruvinidaththil  vanthu:  ungga'l  poathagar  varippa'nam  seluththugi'rathillaiyaa  en'ru  keattaarga'l;  seluththugi'raar  en'raan.  (maththeayu  17:24)

அவன்  வீட்டிற்குள்  வந்தபோது,  அவன்  பேசுகிறதற்கு  முன்னமே  இயேசு  அவனை  நோக்கி:  சீமோனே,  உனக்கு  எப்படித்  தோன்றுகிறது?  பூமியின்  ராஜாக்கள்  தீர்வையையும்  வரியையும்  தங்கள்  பிள்ளைகளிடத்திலோ,  அந்நியரிடத்திலோ,  யாரிடத்தில்  வாங்குகிறார்கள்  என்று  கேட்டார்.  (மத்தேயு  17:25)

avan  veetti’rku'l  vanthapoathu,  avan  peasugi'ratha’rku  munnamea  iyeasu  avanai  noakki:  seemoanea,  unakku  eppadith  thoan'rugi'rathu?  boomiyin  raajaakka'l  theervaiyaiyum  variyaiyum  thangga'l  pi'l'laiga'lidaththiloa,  anniyaridaththiloa,  yaaridaththil  vaanggugi'raarga'l  en'ru  keattaar.  (maththeayu  17:25)

அதற்குப்  பேதுரு:  அந்நியரிடத்தில்  வாங்குகிறார்கள்  என்றான்.  இயேசு  அவனை  நோக்கி:  அப்படியானால்  பிள்ளைகள்  அதைச்  செலுத்தவேண்டுவதில்லையே.  (மத்தேயு  17:26)

atha’rkup  peathuru:  anniyaridaththil  vaanggugi'raarga'l  en'raan.  iyeasu  avanai  noakki:  appadiyaanaal  pi'l'laiga'l  athaich  seluththavea'nduvathillaiyea.  (maththeayu  17:26)

ஆகிலும்,  நாம்  அவர்களுக்கு  இடறலாயிராதபடிக்கு,  நீ  கடலுக்குப்  போய்,  தூண்டில்போட்டு,  முதலாவது  அகப்படுகிற  மீனைப்  பிடித்து,  அதின்  வாயைத்  திறந்துபார்;  ஒரு  வெள்ளிப்பணத்தைக்  காண்பாய்;  அதை  எடுத்து  எனக்காகவும்  உனக்காகவும்  அவர்களிடத்தில்  கொடு  என்றார்.  (மத்தேயு  17:27)

aagilum,  naam  avarga'lukku  ida'ralaayiraathapadikku,  nee  kadalukkup  poay,  thoo'ndilpoattu,  muthalaavathu  agappadugi'ra  meenaip  pidiththu,  athin  vaayaith  thi'ranthupaar;  oru  ve'l'lippa'naththaik  kaa'nbaay;  athai  eduththu  enakkaagavum  unakkaagavum  avarga'lidaththil  kodu  en'raar.  (maththeayu  17:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!