Sunday, April 17, 2016

Maththeayu 16 | மத்தேயு 16 | Matthew 16


பரிசேயரும்  சதுசேயரும்  அவரைச்  சோதிக்கும்படி  அவரிடத்தில்  வந்து:  வானத்திலிருந்து  ஓர்  அடையாளத்தைத்  தங்களுக்குக்  காண்பிக்கவேண்டும்  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  16:1)

pariseayarum  sathuseayarum  avaraich  soathikkumpadi  avaridaththil  vanthu:  vaanaththilirunthu  oar  adaiyaa'laththaith  thangga'lukkuk  kaa'nbikkavea'ndum  en'ru  keattaarga'l.  (maththeayu  16:1)

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  அஸ்தமனமாகிறபோது,  செவ்வானமிட்டிருக்கிறது,  அதினால்  வெளிவாங்கும்  என்று  சொல்லுகிறீர்கள்.  (மத்தேயு  16:2)

avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  asthamanamaagi'rapoathu,  sevvaanamittirukki'rathu,  athinaal  ve'livaanggum  en'ru  sollugi'reerga'l.  (maththeayu  16:2)

உதயமாகிறபோது,  செவ்வானமும்  மந்தாரமுமாயிருக்கிறது,  அதினால்  இன்றைக்குக்  காற்றும்  மழையும்  உண்டாகும்  என்று  சொல்லுகிறீர்கள்.  மாயக்காரரே,  வானத்தின்  தோற்றத்தை  நிதானிக்க  உங்களுக்குத்  தெரியுமே,  காலங்களின்  அடையாளங்களை  நிதானிக்க  உங்களால்  கூடாதா?  (மத்தேயு  16:3)

uthayamaagi'rapoathu,  sevvaanamum  manthaaramumaayirukki'rathu,  athinaal  in'raikkuk  kaat’rum  mazhaiyum  u'ndaagum  en'ru  sollugi'reerga'l.  maayakkaararea,  vaanaththin  thoat'raththai  nithaanikka  ungga'lukkuth  theriyumea,  kaalangga'lin  adaiyaa'langga'lai  nithaanikka  ungga'laal  koodaathaa?  (maththeayu  16:3)

இந்தப்  பொல்லாத  விபசார  சந்ததியார்  அடையாளம்  தேடுகிறார்கள்;  யோனா  தீர்க்கதரிசியின்  அடையாளமேயன்றி  வேறே  அடையாளம்  இவர்களுக்குக்  கொடுக்கப்படுவதில்லை  என்று  சொல்லி,  அவர்களை  விட்டுப்  புறப்பட்டுப்போனார்.  (மத்தேயு  16:4)

inthap  pollaatha  vibasaara  santhathiyaar  adaiyaa'lam  theadugi'raarga'l;  yoanaa  theerkkatharisiyin  adaiyaa'lameayan'ri  vea'rea  adaiyaa'lam  ivarga'lukkuk  kodukkappaduvathillai  en'ru  solli,  avarga'lai  vittup  pu'rappattuppoanaar.  (maththeayu  16:4)

அவருடைய  சீஷர்கள்  அக்கரை  சேர்ந்தபோது,  அப்பங்களைக்  கொண்டுவர  மறந்துபோனார்கள்.  (மத்தேயு  16:5)

avarudaiya  seesharga'l  akkarai  searnthapoathu,  appangga'laik  ko'nduvara  ma'ranthupoanaarga'l.  (maththeayu  16:5)

இயேசு  அவர்களை  நோக்கி:  பரிசேயர்  சதுசேயர்  என்பவர்களின்  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருங்கள்  என்றார்.  (மத்தேயு  16:6)

iyeasu  avarga'lai  noakki:  pariseayar  sathuseayar  enbavarga'lin  pu'liththamaavaikku'riththu  echcharikkaiyaayirungga'l  en'raar.  (maththeayu  16:6)

நாம்  அப்பங்களைக்  கொண்டுவராதபடியால்  இப்படிச்  சொல்லுகிறார்  என்று  அவர்கள்  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணிக்கொண்டார்கள்.  (மத்தேயு  16:7)

naam  appangga'laik  ko'nduvaraathapadiyaal  ippadich  sollugi'raar  en'ru  avarga'l  thangga'lukku'l'lea  yoasanaipa'n'nikko'ndaarga'l.  (maththeayu  16:7)

இயேசு  அதை  அறிந்து:  அற்பவிசுவாசிகளே,  அப்பங்களைக்  கொண்டுவராததைக்குறித்து  நீங்கள்  உங்களுக்குள்ளே  யோசனைபண்ணுகிறதென்ன?  (மத்தேயு  16:8)

iyeasu  athai  a'rinthu:  a’rpavisuvaasiga'lea,  appangga'laik  ko'nduvaraathathaikku'riththu  neengga'l  ungga'lukku'l'lea  yoasanaipa'n'nugi'rathenna?  (maththeayu  16:8)

இன்னும்  நீங்கள்  உணரவில்லையா?  ஐந்து  அப்பங்களை  ஐயாயிரம்பேருக்குப்  பகிர்ந்ததையும்,  மீதியானதை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்பதையும்;  (மத்தேயு  16:9)

innum  neengga'l  u'naravillaiyaa?  ainthu  appangga'lai  aiyaayirampearukkup  pagirnthathaiyum,  meethiyaanathai  eththanai  koodaini'raiya  eduththeerga'l  enbathaiyum;  (maththeayu  16:9)

ஏழு  அப்பங்களை  நாலாயிரம்பேருக்குப்  பகிர்ந்ததையும்,  மீதியானதை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்பதையும்  நீங்கள்  நினைவுகூராமலிருக்கிறீர்களா?  (மத்தேயு  16:10)

eazhu  appangga'lai  naalaayirampearukkup  pagirnthathaiyum,  meethiyaanathai  eththanai  koodaini'raiya  eduththeerga'l  enbathaiyum  neengga'l  ninaivukooraamalirukki'reerga'laa?  (maththeayu  16:10)

பரிசேயர்  சதுசேயர்  என்பவர்களின்  புளித்தமாவுக்கு  எச்சரிக்கையாயிருக்கவேண்டும்  என்று  நான்  சொன்னது  அப்பத்தைக்குறித்துச்  சொல்லவில்லை  என்று  நீங்கள்  உணராதிருக்கிறது  எப்படி  என்றார்.  (மத்தேயு  16:11)

pariseayar  sathuseayar  enbavarga'lin  pu'liththamaavukku  echcharikkaiyaayirukkavea'ndum  en'ru  naan  sonnathu  appaththaikku'riththuch  sollavillai  en'ru  neengga'l  u'naraathirukki'rathu  eppadi  en'raar.  (maththeayu  16:11)

அப்பொழுது,  அவர்  அப்பத்தின்  புளித்தமாவைக்குறித்து  எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று  சொல்லாமல்,  பரிசேயர்  சதுசேயர்  என்பவர்களின்  உபதேசத்தைக்குறித்தே  அப்படிச்  சொன்னார்  என்று  அறிந்துகொண்டார்கள்.  (மத்தேயு  16:12)

appozhuthu,  avar  appaththin  pu'liththamaavaikku'riththu  echcharikkaiyaayirukkavea'ndumen'ru  sollaamal,  pariseayar  sathuseayar  enbavarga'lin  ubatheasaththaikku'riththea  appadich  sonnaar  en'ru  a'rinthuko'ndaarga'l.  (maththeayu  16:12)

பின்பு,  இயேசு  பிலிப்புச்  செசரியாவின்  திசைகளில்  வந்தபோது,  தம்முடைய  சீஷரை  நோக்கி:  மனுஷகுமாரனாகிய  என்னை  ஜனங்கள்  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  (மத்தேயு  16:13)

pinbu,  iyeasu  pilippuch  sesariyaavin  thisaiga'lil  vanthapoathu,  thammudaiya  seesharai  noakki:  manushakumaaranaagiya  ennai  janangga'l  yaar  en'ru  sollugi'raarga'l  en'ru  keattaar.  (maththeayu  16:13)

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்  என்றும்,  சிலர்  எலியா  என்றும்;  வேறு  சிலர்  எரேமியா,  அல்லது  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  (மத்தேயு  16:14)

atha’rku  avarga'l:  silar  ummai  yoavaansnaanan  en'rum,  silar  eliyaa  en'rum;  vea'ru  silar  ereamiyaa,  allathu  theerkkatharisiga'lil  oruvar  en'rum  sollugi'raarga'l  en'raarga'l.  (maththeayu  16:14)

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்.  (மத்தேயு  16:15)

appozhuthu  avar:  neengga'l  ennai  yaar  en'ru  sollugi'reerga'l  en'ru  keattaar.  (maththeayu  16:15)

சீமோன்  பேதுரு  பிரதியுத்தரமாக:  நீர்  ஜீவனுள்ள  தேவனுடைய  குமாரனாகிய  கிறிஸ்து  என்றான்.  (மத்தேயு  16:16)

seemoan  peathuru  pirathiyuththaramaaga:  neer  jeevanu'l'la  theavanudaiya  kumaaranaagiya  ki'risthu  en'raan.  (maththeayu  16:16)

இயேசு  அவனை  நோக்கி:  யோனாவின்  குமாரனாகிய  சீமோனே,  நீ  பாக்கியவான்;  மாம்சமும்  இரத்தமும்  இதை  உனக்கு  வெளிப்படுத்தவில்லை,  பரலோகத்திலிருக்கிற  என்  பிதா  இதை  உனக்கு  வெளிப்படுத்தினார்.  (மத்தேயு  16:17)

iyeasu  avanai  noakki:  yoanaavin  kumaaranaagiya  seemoanea,  nee  baakkiyavaan;  maamsamum  iraththamum  ithai  unakku  ve'lippaduththavillai,  paraloagaththilirukki'ra  en  pithaa  ithai  unakku  ve'lippaduththinaar.  (maththeayu  16:17)

மேலும்,  நான்  உனக்குச்  சொல்லுகிறேன்,  நீ  பேதுருவாய்  இருக்கிறாய்,  இந்தக்  கல்லின்மேல்  என்  சபையைக்  கட்டுவேன்;  பாதாளத்தின்  வாசல்கள்  அதை  மேற்கொள்வதில்லை.  (மத்தேயு  16:18)

mealum,  naan  unakkuch  sollugi'rean,  nee  peathuruvaay  irukki'raay,  inthak  kallinmeal  en  sabaiyaik  kattuvean;  paathaa'laththin  vaasalga'l  athai  mea’rko'lvathillai.  (maththeayu  16:18)

பரலோகராஜ்யத்தின்  திறவுகோல்களை  நான்  உனக்குத்  தருவேன்;  பூலோகத்திலே  நீ  கட்டுகிறது  எதுவோ  அது  பரலோகத்திலும்  கட்டப்பட்டிருக்கும்,  பூலோகத்திலே  நீ  கட்டவிழ்ப்பது  எதுவோ  அது  பரலோகத்திலும்  கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்  என்றார்.  (மத்தேயு  16:19)

paraloagaraajyaththin  thi'ravukoalga'lai  naan  unakkuth  tharuvean;  booloagaththilea  nee  kattugi'rathu  ethuvoa  athu  paraloagaththilum  kattappattirukkum,  booloagaththilea  nee  kattavizhppathu  ethuvoa  athu  paraloagaththilum  kattavizhkkappattirukkum  en'raar.  (maththeayu  16:19)

அப்பொழுது,  தாம்  கிறிஸ்துவாகிய  இயேசு  என்று  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்குத்  தம்முடைய  சீஷர்களுக்குக்  கட்டளையிட்டார்.  (மத்தேயு  16:20)

appozhuthu,  thaam  ki'risthuvaagiya  iyeasu  en'ru  oruvarukkum  sollaathapadikkuth  thammudaiya  seesharga'lukkuk  katta'laiyittaar.  (maththeayu  16:20)

அதுமுதல்  இயேசு,  தாம்  எருசலேமுக்குப்போய்,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  பல  பாடுகள்பட்டு,  கொலையுண்டு,  மூன்றாம்  நாளில்  எழுந்திருக்கவேண்டும்  என்பதைத்  தம்முடைய  சீஷர்களுக்குச்  சொல்லத்தொடங்கினார்.  (மத்தேயு  16:21)

athumuthal  iyeasu,  thaam  erusaleamukkuppoay,  moopparaalum  pirathaana  aasaariyaraalum  veathapaaragaraalum  pala  paaduga'lpattu,  kolaiyu'ndu,  moon'raam  naa'lil  ezhunthirukkavea'ndum  enbathaith  thammudaiya  seesharga'lukkuch  sollaththodangginaar.  (maththeayu  16:21)

அப்பொழுது,  பேதுரு  அவரைத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்:  ஆண்டவரே,  இது  உமக்கு  நேரிடக்கூடாதே,  இது  உமக்குச்  சம்பவிப்பதில்லை  என்று  அவரைக்  கடிந்துகொள்ளத்  தொடங்கினான்.  (மத்தேயு  16:22)

appozhuthu,  peathuru  avaraith  thaniyea  azhaiththukko'ndupoay:  aa'ndavarea,  ithu  umakku  nearidakkoodaathea,  ithu  umakkuch  sambavippathillai  en'ru  avaraik  kadinthuko'l'lath  thodangginaan.  (maththeayu  16:22)

அவரோ  திரும்பிப்  பேதுருவைப்  பார்த்து:  எனக்குப்  பின்னாகப்போ,  சாத்தானே,  நீ  எனக்கு  இடறலாயிருக்கிறாய்;  தேவனுக்கு  ஏற்றவைகளைச்  சிந்தியாமல்  மனுஷருக்கு  ஏற்றவைகளைச்  சிந்திக்கிறாய்  என்றார்.  (மத்தேயு  16:23)

avaroa  thirumbip  peathuruvaip  paarththu:  enakkup  pinnaagappoa,  saaththaanea,  nee  enakku  ida'ralaayirukki'raay;  theavanukku  eat'ravaiga'laich  sinthiyaamal  manusharukku  eat'ravaiga'laich  sinthikki'raay  en'raar.  (maththeayu  16:23)

அப்பொழுது,  இயேசு  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஒருவன்  என்னைப்  பின்பற்றி  வர  விரும்பினால்,  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  எடுத்துக்கொண்டு  என்னைப்  பின்பற்றக்கடவன்.  (மத்தேயு  16:24)

appozhuthu,  iyeasu  thammudaiya  seesharga'lai  noakki:  oruvan  ennaip  pinpat’ri  vara  virumbinaal,  avan  thannaiththaan  ve'ruththu,  than  siluvaiyai  eduththukko'ndu  ennaip  pinpat'rakkadavan.  (maththeayu  16:24)

தன்  ஜீவனை  ரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்;  என்னிமித்தமாகத்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதைக்  கண்டடைவான்.  (மத்தேயு  16:25)

than  jeevanai  radchikka  virumbugi'ravan  athai  izhanthupoavaan;  ennimiththamaagath  than  jeevanai  izhanthupoagi'ravan  athaik  ka'ndadaivaan.  (maththeayu  16:25)

மனுஷன்  உலகம்  முழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்  ஜீவனை  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  மனுஷன்  தன்  ஜீவனுக்கு  ஈடாக  என்னத்தைக்  கொடுப்பான்?  (மத்தேயு  16:26)

manushan  ulagam  muzhuvathaiyum  aathaayappaduththikko'ndaalum,  than  jeevanai  nashdappaduththinaal  avanukku  laabam  enna?  manushan  than  jeevanukku  eedaaga  ennaththaik  koduppaan?  (maththeayu  16:26)

மனுஷகுமாரன்  தம்முடைய  பிதாவின்  மகிமைபொருந்தினவராய்த்  தம்முடைய  தூதரோடுங்கூட  வருவார்;  அப்பொழுது,  அவனவன்  கிரியைக்குத்தக்கதாக  அவனவனுக்குப்  பலனளிப்பார்.  (மத்தேயு  16:27)

manushakumaaran  thammudaiya  pithaavin  magimaiporunthinavaraayth  thammudaiya  thootharoadungkooda  varuvaar;  appozhuthu,  avanavan  kiriyaikkuththakkathaaga  avanavanukkup  palana'lippaar.  (maththeayu  16:27)

இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  மனுஷகுமாரன்  தம்முடைய  ராஜ்யத்தில்  வருவதைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லை  என்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மத்தேயு  16:28)

inggea  ni’rki'ravarga'lil  silar  manushakumaaran  thammudaiya  raajyaththil  varuvathaik  kaa'numun,  mara'naththai  rusipaarppathillai  en'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en'raar.  (maththeayu  16:28)


1 comment:

  1. Correction(s) March 17, 2019 >>> (Matthew 16:3) changed thoattaththai to thoat'raththai

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!