Saturday, April 16, 2016

Maththeayu 15 | மத்தேயு 15 | Matthew 15

அப்பொழுது,  எருசலேமிலிருந்து  வந்த  வேதபாரகரும்  பரிசேயரும்  இயேசுவினிடத்தில்  வந்து:  (மத்தேயு  15:1)

appozhuthu,  erusaleamilirunthu  vantha  veathapaaragarum  pariseayarum  iyeasuvinidaththil  vanthu:  (maththeayu  15:1)

உம்முடைய  சீஷர்கள்  முன்னோர்களின்  பாரம்பரியத்தை  ஏன்  மீறி  நடக்கிறார்கள்?  கைகழுவாமல்  போஜனம்  பண்ணுகிறார்களே!  என்றார்கள்.  (மத்தேயு  15:2)

ummudaiya  seesharga'l  munnoarga'lin  paarambariyaththai  ean  mee'ri  nadakki'raarga'l?  kaikazhuvaamal  poajanam  pa'n'nugi'raarga'lea!  en'raarga'l.  (maththeayu  15:2)

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  நீங்கள்  உங்கள்  பாரம்பரியத்தினாலே  தேவனுடைய  கற்பனையை  ஏன்  மீறி  நடக்கிறீர்கள்?  (மத்தேயு  15:3)

avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  neengga'l  ungga'l  paarambariyaththinaalea  theavanudaiya  ka’rpanaiyai  ean  mee'ri  nadakki'reerga'l?  (maththeayu  15:3)

உன்  தகப்பனையும்  உன்  தாயையும்  கனம்பண்ணுவாயாக  என்றும்;  தகப்பனையாவது  தாயையாவது  நிந்திக்கிறவன்  கொல்லப்படவேண்டும்  என்றும்,  தேவன்  கற்பித்திருக்கிறாரே.  (மத்தேயு  15:4)

un  thagappanaiyum  un  thaayaiyum  kanampa'n'nuvaayaaga  en'rum;  thagappanaiyaavathu  thaayaiyaavathu  ninthikki'ravan  kollappadavea'ndum  en'rum,  theavan  ka’rpiththirukki'raarea.  (maththeayu  15:4)

நீங்களோ,  எவனாகிலும்  தகப்பனையாவது  தாயையாவது  நோக்கி:  உனக்கு  நான்  செய்யத்தக்க  உதவி  எது  உண்டோ,  அதைக்  காணிக்கையாகக்  கொடுக்கிறேன்  என்று  சொல்லி,  தன்  தகப்பனையாவது  தன்  தாயையாவது  கனம்பண்ணாமற்போனாலும்,  அவனுடைய  கடமை  தீர்ந்ததென்று  போதித்து,  (மத்தேயு  15:5)

neengga'loa,  evanaagilum  thagappanaiyaavathu  thaayaiyaavathu  noakki:  unakku  naan  seyyaththakka  uthavi  ethu  u'ndoa,  athaik  kaa'nikkaiyaagak  kodukki'rean  en'ru  solli,  than  thagappanaiyaavathu  than  thaayaiyaavathu  kanampa'n'naama’rpoanaalum,  avanudaiya  kadamai  theernthathen'ru  poathiththu,  (maththeayu  15:5)

உங்கள்  பாரம்பரியத்தினாலே  தேவனுடைய  கற்பனையை  அவமாக்கிவருகிறீர்கள்.  (மத்தேயு  15:6)

ungga'l  paarambariyaththinaalea  theavanudaiya  ka’rpanaiyai  avamaakkivarugi'reerga'l.  (maththeayu  15:6)

மாயக்காரரே,  உங்களைக்குறித்து:  (மத்தேயு  15:7)

maayakkaararea,  ungga'laikku'riththu:  (maththeayu  15:7)

இந்த  ஜனங்கள்  தங்கள்  வாயினால்  என்னிடத்தில்  சேர்ந்து,  தங்கள்  உதடுகளினால்  என்னைக்  கனம்பண்ணுகிறார்கள்;  அவர்கள்  இருதயமோ  எனக்குத்  தூரமாய்  விலகியிருக்கிறது;  (மத்தேயு  15:8)

intha  janangga'l  thangga'l  vaayinaal  ennidaththil  searnthu,  thangga'l  uthaduga'linaal  ennaik  kanampa'n'nugi'raarga'l;  avarga'l  iruthayamoa  enakkuth  thooramaay  vilagiyirukki'rathu;  (maththeayu  15:8)

மனுஷருடைய  கற்பனைகளை  உபதேசங்களாகப்  போதித்து,  வீணாய்  எனக்கு  ஆராதனை  செய்கிறார்கள்  என்று,  ஏசாயா  தீர்க்கதரிசி  நன்றாய்ச்  சொல்லியிருக்கிறான்  என்றார்.  (மத்தேயு  15:9)

manusharudaiya  ka’rpanaiga'lai  ubatheasangga'laagap  poathiththu,  vee'naay  enakku  aaraathanai  seygi'raarga'l  en'ru,  easaayaa  theerkkatharisi  nan'raaych  solliyirukki'raan  en'raar.  (maththeayu  15:9)

பின்பு  அவர்  ஜனங்களை  வரவழைத்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  கேட்டு  உணருங்கள்.  (மத்தேயு  15:10)

pinbu  avar  janangga'lai  varavazhaiththu,  avarga'lai  noakki:  neengga'l  keattu  u'narungga'l.  (maththeayu  15:10)

வாய்க்குள்ளே  போகிறது  மனுஷனைத்  தீட்டுப்படுத்தாது,  வாயிலிருந்து  புறப்படுகிறதே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்  என்றார்.  (மத்தேயு  15:11)

vaaykku'l'lea  poagi'rathu  manushanaith  theettuppaduththaathu,  vaayilirunthu  pu'rappadugi'rathea  manushanaith  theettuppaduththum  en'raar.  (maththeayu  15:11)

அப்பொழுது,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  பரிசேயர்  இந்த  வசனத்தைக்  கேட்டு  இடறலடைந்தார்கள்  என்று  அறிவீரா  என்றார்கள்.  (மத்தேயு  15:12)

appozhuthu,  avarudaiya  seesharga'l  avaridaththil  vanthu:  pariseayar  intha  vasanaththaik  keattu  ida'raladainthaarga'l  en'ru  a'riveeraa  en'raarga'l.  (maththeayu  15:12)

அவர்  பிரதியுத்தரமாக:  என்  பரமபிதா  நடாத  நாற்றெல்லாம்  வேரோடே  பிடுங்கப்படும்.  (மத்தேயு  15:13)

avar  pirathiyuththaramaaga:  en  paramapithaa  nadaatha  naat’rellaam  vearoadea  pidunggappadum.  (maththeayu  15:13)

அவர்களை  விட்டுவிடுங்கள்,  அவர்கள்  குருடருக்கு  வழிகாட்டுகிற  குருடராயிருக்கிறார்கள்;  குருடனுக்குக்  குருடன்  வழிகாட்டினால்  இருவரும்  குழியிலே  விழுவார்களே  என்றார்.  (மத்தேயு  15:14)

avarga'lai  vittuvidungga'l,  avarga'l  kurudarukku  vazhikaattugi'ra  kurudaraayirukki'raarga'l;  kurudanukkuk  kurudan  vazhikaattinaal  iruvarum  kuzhiyilea  vizhuvaarga'lea  en'raar.  (maththeayu  15:14)

அப்பொழுது,  பேதுரு  அவரை  நோக்கி:  இந்த  உவமையை  எங்களுக்கு  வெளிப்படுத்தவேண்டும்  என்றான்.  (மத்தேயு  15:15)

appozhuthu,  peathuru  avarai  noakki:  intha  uvamaiyai  engga'lukku  ve'lippaduththavea'ndum  en'raan.  (maththeayu  15:15)

அதற்கு  இயேசு:  நீங்களும்  இன்னும்  உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?  (மத்தேயு  15:16)

atha’rku  iyeasu:  neengga'lum  innum  u'narvillaathavarga'laayirukki'reerga'laa?  (maththeayu  15:16)

வாய்க்குள்ளே  போகிறதெல்லாம்  வயிற்றில்  சென்று  ஆசனவழியாய்க்  கழிந்துபோம்  என்பதை  நீங்கள்  இன்னும்  அறியவில்லையா?  (மத்தேயு  15:17)

vaaykku'l'lea  poagi'rathellaam  vayit’ril  sen'ru  aasanavazhiyaayk  kazhinthupoam  enbathai  neengga'l  innum  a'riyavillaiyaa?  (maththeayu  15:17)

வாயிலிருந்து  புறப்படுகிறவைகள்  இருதயத்திலிருந்து  புறப்பட்டுவரும்;  அவைகளே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்.  (மத்தேயு  15:18)

vaayilirunthu  pu'rappadugi'ravaiga'l  iruthayaththilirunthu  pu'rappattuvarum;  avaiga'lea  manushanaith  theettuppaduththum.  (maththeayu  15:18)

எப்படியெனில்,  இருதயத்திலிருந்து  பொல்லாத  சிந்தனைகளும்,  கொலைபாதகங்களும்,  விபசாரங்களும்,  வேசித்தனங்களும்,  களவுகளும்,  பொய்ச்சாட்சிகளும்,  தூஷணங்களும்  புறப்பட்டுவரும்.  (மத்தேயு  15:19)

eppadiyenil,  iruthayaththilirunthu  pollaatha  sinthanaiga'lum,  kolaipaathagangga'lum,  vibasaarangga'lum,  veasiththanangga'lum,  ka'lavuga'lum,  poychsaadchiga'lum,  thoosha'nangga'lum  pu'rappattuvarum.  (maththeayu  15:19)

இவைகளே  மனுஷனைத்  தீட்டுப்படுத்தும்;  கைகழுவாமல்  சாப்பிடுகிறது  மனுஷனைத்  தீட்டுப்படுத்தாது  என்றார்.  (மத்தேயு  15:20)

ivaiga'lea  manushanaith  theettuppaduththum;  kaikazhuvaamal  saappidugi'rathu  manushanaith  theettuppaduththaathu  en'raar.  (maththeayu  15:20)

பின்பு,  இயேசு  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  தீரு  சீதோன்  பட்டணங்களின்  திசைகளுக்குப்  போனார்.  (மத்தேயு  15:21)

pinbu,  iyeasu  avvidam  vittup  pu'rappattu,  theeru  seethoan  patta'nangga'lin  thisaiga'lukkup  poanaar.  (maththeayu  15:21)

அப்பொழுது,  அந்தத்  திசைகளில்  குடியிருக்கிற  கானானிய  ஸ்திரீ  ஒருத்தி  அவரிடத்தில்  வந்து:  ஆண்டவரே,  தாவீதின்  குமாரனே,  எனக்கு  இரங்கும்,  என்  மகள்  பிசாசினால்  கொடிய  வேதனைப்படுகிறாள்  என்று  சொல்லிக்  கூப்பிட்டாள்.  (மத்தேயு  15:22)

appozhuthu,  anthath  thisaiga'lil  kudiyirukki'ra  kaanaaniya  sthiree  oruththi  avaridaththil  vanthu:  aa'ndavarea,  thaaveethin  kumaaranea,  enakku  iranggum,  en  maga'l  pisaasinaal  kodiya  veathanaippadugi'raa'l  en'ru  sollik  kooppittaa'l.  (maththeayu  15:22)

அவளுக்குப்  பிரதியுத்தரமாக  அவர்  ஒரு  வார்த்தையும்  சொல்லவில்லை.  அப்பொழுது  அவருடைய  சீஷர்கள்  வந்து:  இவள்  நம்மைப்  பின்தொடர்ந்து  கூப்பிடுகிறாளே,  இவளை  அனுப்பிவிடும்  என்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  (மத்தேயு  15:23)

ava'lukkup  pirathiyuththaramaaga  avar  oru  vaarththaiyum  sollavillai.  appozhuthu  avarudaiya  seesharga'l  vanthu:  iva'l  nammaip  pinthodarnthu  kooppidugi'raa'lea,  iva'lai  anuppividum  en'ru  avarai  vea'ndikko'ndaarga'l.  (maththeayu  15:23)

அதற்கு  அவர்:  காணாமற்போன  ஆடுகளாகிய  இஸ்ரவேல்  வீட்டாரிடத்திற்கு  அனுப்பப்பட்டேனேயன்றி,  மற்றப்படியல்ல  என்றார்.  (மத்தேயு  15:24)

atha’rku  avar:  kaa'naama’rpoana  aaduga'laagiya  israveal  veettaaridaththi’rku  anuppappatteaneayan'ri,  mat’rappadiyalla  en'raar.  (maththeayu  15:24)

அவள்  வந்து:  ஆண்டவரே,  எனக்கு  உதவிசெய்யும்  என்று  அவரைப்  பணிந்துகொண்டாள்.  (மத்தேயு  15:25)

ava'l  vanthu:  aa'ndavarea,  enakku  uthaviseyyum  en'ru  avaraip  pa'ninthuko'ndaa'l.  (maththeayu  15:25)

அவர்  அவளை  நோக்கி:  பிள்ளைகளின்  அப்பத்தை  எடுத்து,  நாய்க்குட்டிகளுக்குப்  போடுகிறது  நல்லதல்ல  என்றார்.  (மத்தேயு  15:26)

avar  ava'lai  noakki:  pi'l'laiga'lin  appaththai  eduththu,  naaykkuttiga'lukkup  poadugi'rathu  nallathalla  en'raar.  (maththeayu  15:26)

அதற்கு  அவள்:  மெய்தான்  ஆண்டவரே,  ஆகிலும்  நாய்க்குட்டிகள்  தங்கள்  எஜமான்களின்  மேஜையிலிருந்து  விழும்  துணிக்கைகளைத்  தின்னுமே  என்றாள்.  (மத்தேயு  15:27)

atha’rku  ava'l:  meythaan  aa'ndavarea,  aagilum  naaykkuttiga'l  thangga'l  ejamaanga'lin  meajaiyilirunthu  vizhum  thu'nikkaiga'laith  thinnumea  en'raa'l.  (maththeayu  15:27)

இயேசு  அவளுக்குப்  பிரதியுத்தரமாக:  ஸ்திரீயே,  உன்  விசுவாசம்  பெரிது;  நீ  விரும்புகிறபடி  உனக்கு  ஆகக்கடவது  என்றார்.  அந்நேரமே  அவள்  மகள்  ஆரோக்கியமானாள்.  (மத்தேயு  15:28)

iyeasu  ava'lukkup  pirathiyuththaramaaga:  sthireeyea,  un  visuvaasam  perithu;  nee  virumbugi'rapadi  unakku  aagakkadavathu  en'raar.  annearamea  ava'l  maga'l  aaroakkiyamaanaa'l.  (maththeayu  15:28)

இயேசு  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  கலிலேயாக்  கடலருகே  வந்து,  ஒரு  மலையின்மேல்  ஏறி,  அங்கே  உட்கார்ந்தார்.  (மத்தேயு  15:29)

iyeasu  avvidam  vittup  pu'rappattu,  kalileayaak  kadalarugea  vanthu,  oru  malaiyinmeal  ea'ri,  anggea  udkaarnthaar.  (maththeayu  15:29)

அப்பொழுது,  சப்பாணிகள்,  குருடர்,  ஊமையர்,  ஊனர்  முதலிய  அநேகரை,  திரளான  ஜனங்கள்  கூட்டிக்கொண்டு  இயேசுவினிடத்தில்  வந்து,  அவர்களை  அவர்  பாதத்திலே  வைத்தார்கள்;  அவர்களை  அவர்  சொஸ்தப்படுத்தினார்.  (மத்தேயு  15:30)

appozhuthu,  sappaa'niga'l,  kurudar,  oomaiyar,  oonar  muthaliya  aneagarai,  thira'laana  janangga'l  koottikko'ndu  iyeasuvinidaththil  vanthu,  avarga'lai  avar  paathaththilea  vaiththaarga'l;  avarga'lai  avar  sosthappaduththinaar.  (maththeayu  15:30)

ஊமையர்  பேசுகிறதையும்,  ஊனர்  சொஸ்தமடைகிறதையும்,  சப்பாணிகள்  நடக்கிறதையும்,  குருடர்  பார்க்கிறதையும்  ஜனங்கள்  கண்டு,  ஆச்சரியப்பட்டு,  இஸ்ரவேலின்  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (மத்தேயு  15:31)

oomaiyar  peasugi'rathaiyum,  oonar  sosthamadaigi'rathaiyum,  sappaa'niga'l  nadakki'rathaiyum,  kurudar  paarkki'rathaiyum  janangga'l  ka'ndu,  aachchariyappattu,  isravealin  theavanai  magimaippaduththinaarga'l.  (maththeayu  15:31)

பின்பு,  இயேசு  தம்முடைய  சீஷர்களை  அழைத்து:  ஜனங்களுக்காகப்  பரிதபிக்கிறேன்,  இவர்கள்  என்னிடத்தில்  மூன்றுநாள்  தங்கியிருந்து  சாப்பிட  ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்;  இவர்களைப்  பட்டினியாய்  அனுப்பிவிட  எனக்கு  மனதில்லை,  வழியில்  சோர்ந்துபோவார்களே  என்றார்.  (மத்தேயு  15:32)

pinbu,  iyeasu  thammudaiya  seesharga'lai  azhaiththu:  janangga'lukkaagap  parithabikki'rean,  ivarga'l  ennidaththil  moon'runaa'l  thanggiyirunthu  saappida  on'rumillaathirukki'raarga'l;  ivarga'laip  pattiniyaay  anuppivida  enakku  manathillai,  vazhiyil  soarnthupoavaarga'lea  en'raar.  (maththeayu  15:32)

அதற்கு  அவருடைய  சீஷர்கள்:  இவ்வளவு  திரளான  ஜனங்களுக்குத்  திருப்தியுண்டாகும்படி  வேண்டிய  அப்பங்கள்  இந்த  வனாந்தரத்திலே  நமக்கு  எப்படி  அகப்படும்  என்றார்கள்.  (மத்தேயு  15:33)

atha’rku  avarudaiya  seesharga'l:  ivva'lavu  thira'laana  janangga'lukkuth  thirupthiyu'ndaagumpadi  vea'ndiya  appangga'l  intha  vanaantharaththilea  namakku  eppadi  agappadum  en'raarga'l.  (maththeayu  15:33)

அதற்கு  இயேசு:  உங்களிடத்தில்  எத்தனை  அப்பங்கள்  உண்டு  என்று  கேட்டார்.  அவர்கள்:  ஏழு  அப்பங்களும்  சில  சிறு  மீன்களும்  உண்டு  என்றார்கள்.  (மத்தேயு  15:34)

atha’rku  iyeasu:  ungga'lidaththil  eththanai  appangga'l  u'ndu  en'ru  keattaar.  avarga'l:  eazhu  appangga'lum  sila  si'ru  meenga'lum  u'ndu  en'raarga'l.  (maththeayu  15:34)

அப்பொழுது  அவர்  ஜனங்களைத்  தரையில்  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  (மத்தேயு  15:35)

appozhuthu  avar  janangga'laith  tharaiyil  panthiyirukkak  katta'laiyittu,  (maththeayu  15:35)

அந்த  ஏழு  அப்பங்களையும்  அந்த  மீன்களையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்  பண்ணி,  பிட்டுத்  தம்முடைய  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  சீஷர்கள்  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள்.  (மத்தேயு  15:36)

antha  eazhu  appangga'laiyum  antha  meenga'laiyum  eduththu,  sthoaththiram  pa'n'ni,  pittuth  thammudaiya  seesharga'lidaththil  koduththaar;  seesharga'l  janangga'lukkup  parimaa'rinaarga'l.  (maththeayu  15:36)

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளை  ஏழு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  (மத்தேயு  15:37)

ellaarum  saappittuth  thirupthiyadainthaarga'l;  meethiyaana  thu'nikkaiga'lai  eazhu  koodaini'raiya  eduththaarga'l.  (maththeayu  15:37)

ஸ்திரீகளும்  பிள்ளைகளும்  தவிர,  சாப்பிட்ட  புருஷர்  நாலாயிரம்பேராயிருந்தார்கள்.  (மத்தேயு  15:38)

sthireega'lum  pi'l'laiga'lum  thavira,  saappitta  purushar  naalaayirampearaayirunthaarga'l.  (maththeayu  15:38)

அவர்  ஜனங்களை  அனுப்பிவிட்டு,  படவில்  ஏறி,  மக்தலாவின்  எல்லைகளில்  வந்தார்.  (மத்தேயு  15:39)

avar  janangga'lai  anuppivittu,  padavil  ea'ri,  makthalaavin  ellaiga'lil  vanthaar.  (maththeayu  15:39)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!