Friday, April 15, 2016

Maththeayu 14 | மத்தேயு 14 | Matthew 14


அக்காலத்தில்,  காற்பங்கு  தேசாதிபதியாகிய  ஏரோது  இயேசுவின்  கீர்த்தியைக்  கேள்விப்பட்டு,  (மத்தேயு  14:1)

akkaalaththil,  kaa’rpanggu  theasaathibathiyaagiya  earoathu  iyeasuvin  keerththiyaik  kea'lvippattu,  (maththeayu  14:1)

தன்  ஊழியக்காரரை  நோக்கி:  இவன்  யோவான்ஸ்நானன்;  இவன்  மரித்தோரிலிருந்து  எழுந்தான்;  ஆகையால்,  இவனிடத்தில்  பலத்த  செய்கைகள்  விளங்குகிறது  என்றான்.  (மத்தேயு  14:2)

than  oozhiyakkaararai  noakki:  ivan  yoavaansnaanan;  ivan  mariththoarilirunthu  ezhunthaan;  aagaiyaal,  ivanidaththil  balaththa  seygaiga'l  vi'langgugi'rathu  en'raan.  (maththeayu  14:2)

ஏரோது  தன்  சகோதரனாகிய  பிலிப்புவின்  மனைவி  ஏரோதியாளினிமித்தம்  யோவானைப்  பிடித்துக்  கட்டிக்  காவலில்  வைத்திருந்தான்.  (மத்தேயு  14:3)

earoathu  than  sagoatharanaagiya  pilippuvin  manaivi  earoathiyaa'linimiththam  yoavaanaip  pidiththuk  kattik  kaavalil  vaiththirunthaan.  (maththeayu  14:3)

ஏனெனில்:  நீர்  அவளை  வைத்துக்கொள்வது  நியாயமல்லவென்று  யோவான்  அவனுக்குச்  சொல்லியிருந்தான்.  (மத்தேயு  14:4)

eanenil:  neer  ava'lai  vaiththukko'lvathu  niyaayamallaven'ru  yoavaan  avanukkuch  solliyirunthaan.  (maththeayu  14:4)

ஏரோது  அவனைக்  கொலைசெய்ய  மனதாயிருந்தும்,  ஜனங்கள்  அவனைத்  தீர்க்கதரிசியென்று  எண்ணினபடியால்  அவர்களுக்குப்  பயந்திருந்தான்.  (மத்தேயு  14:5)

earoathu  avanaik  kolaiseyya  manathaayirunthum,  janangga'l  avanaith  theerkkatharisiyen'ru  e'n'ninapadiyaal  avarga'lukkup  bayanthirunthaan.  (maththeayu  14:5)

அப்படியிருக்க,  ஏரோதின்  ஜென்மநாள்  கொண்டாடப்படுகிறபோது,  ஏரோதியாளின்  குமாரத்தி  அவர்கள்  நடுவே  நடனம்பண்ணி  ஏரோதைச்  சந்தோஷப்படுத்தினாள்.  (மத்தேயு  14:6)

appadiyirukka,  earoathin  jenmanaa'l  ko'ndaadappadugi'rapoathu,  earoathiyaa'lin  kumaaraththi  avarga'l  naduvea  nadanampa'n'ni  earoathaich  santhoashappaduththinaa'l.  (maththeayu  14:6)

அதினிமித்தம்  அவன்:  நீ  எதைக்  கேட்டாலும்  தருவேன்  என்று  அவளுக்கு  ஆணையிட்டு  வாக்குக்கொடுத்தான்.  (மத்தேயு  14:7)

athinimiththam  avan:  nee  ethaik  keattaalum  tharuvean  en'ru  ava'lukku  aa'naiyittu  vaakkukkoduththaan.  (maththeayu  14:7)

அவள்  தன்  தாயினால்  ஏவப்பட்டபடியே:  யோவான்ஸ்நானனுடைய  தலையை  இங்கே  ஒரு  தாலத்திலே  எனக்குத்  தாரும்  என்று  கேட்டாள்.  (மத்தேயு  14:8)

ava'l  than  thaayinaal  eavappattapadiyea:  yoavaansnaananudaiya  thalaiyai  inggea  oru  thaalaththilea  enakkuth  thaarum  en'ru  keattaa'l.  (maththeayu  14:8)

ராஜா  துக்கமடைந்தான்.  ஆகிலும்,  ஆணையினிமித்தமும்,  பந்தியில்  கூட  இருந்தவர்களினிமித்தமும்,  அதைக்  கொடுக்கக்  கட்டளையிட்டு,  (மத்தேயு  14:9)

raajaa  thukkamadainthaan.  aagilum,  aa'naiyinimiththamum,  panthiyil  kooda  irunthavarga'linimiththamum,  athaik  kodukkak  katta'laiyittu,  (maththeayu  14:9)

ஆள்  அனுப்பி,  காவற்கூடத்திலே  யோவானைச்  சிரச்சேதம்பண்ணுவித்தான்.  (மத்தேயு  14:10)

aa'l  anuppi,  kaava’rkoodaththilea  yoavaanaich  sirachseathampa'n'nuviththaan.  (maththeayu  14:10)

அவனுடைய  சிரசை  ஒரு  தாலத்திலே  கொண்டுவந்து,  சிறு  பெண்ணுக்குக்  கொடுத்தார்கள்;  அவள்  அதைத்  தன்  தாயினிடத்தில்  கொண்டுபோனாள்.  (மத்தேயு  14:11)

avanudaiya  sirasai  oru  thaalaththilea  ko'nduvanthu,  si'ru  pe'n'nukkuk  koduththaarga'l;  ava'l  athaith  than  thaayinidaththil  ko'ndupoanaa'l.  (maththeayu  14:11)

அவனுடைய  சீஷர்கள்  வந்து  உடலை  எடுத்து  அடக்கம்பண்ணி,  பின்பு  போய்  அந்தச்  சங்கதியை  இயேசுவுக்கு  அறிவித்தார்கள்.  (மத்தேயு  14:12)

avanudaiya  seesharga'l  vanthu  udalai  eduththu  adakkampa'n'ni,  pinbu  poay  anthach  sanggathiyai  iyeasuvukku  a'riviththaarga'l.  (maththeayu  14:12)

இயேசு  அதைக்  கேட்டு,  அவ்விடம்  விட்டு,  படவில்  ஏறி,  வனாந்தரமான  ஓர்  இடத்துக்குத்  தனியே  போனார்.  ஜனங்கள்  அதைக்  கேள்விப்பட்டு,  பட்டணங்களிலிருந்து  கால்நடையாய்  அவரிடத்திற்குப்  போனார்கள்.  (மத்தேயு  14:13)

iyeasu  athaik  keattu,  avvidam  vittu,  padavil  ea'ri,  vanaantharamaana  oar  idaththukkuth  thaniyea  poanaar.  janangga'l  athaik  kea'lvippattu,  patta'nangga'lilirunthu  kaalnadaiyaay  avaridaththi’rkup  poanaarga'l.  (maththeayu  14:13)

இயேசு  வந்து,  திரளான  ஜனங்களைக்  கண்டு,  அவர்கள்மேல்  மனதுருகி,  அவர்களில்  வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச்  சொஸ்தமாக்கினார்.  (மத்தேயு  14:14)

iyeasu  vanthu,  thira'laana  janangga'laik  ka'ndu,  avarga'lmeal  manathurugi,  avarga'lil  viyaathiyastharga'laayirunthavarga'laich  sosthamaakkinaar.  (maththeayu  14:14)

சாயங்காலமானபோது,  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  இது  வனாந்தரமான  இடம்,  நேரமுமாயிற்று;  ஜனங்கள்  கிராமங்களுக்குப்  போய்த்  தங்களுக்குப்  போஜனபதார்த்தங்களைக்  கொள்ளும்படி  அவர்களை  அனுப்பிவிடவேண்டும்  என்றார்கள்.  (மத்தேயு  14:15)

saayanggaalamaanapoathu,  avarudaiya  seesharga'l  avaridaththil  vanthu:  ithu  vanaantharamaana  idam,  nearamumaayit’ru;  janangga'l  kiraamangga'lukkup  poayth  thangga'lukkup  poajanapathaarththangga'laik  ko'l'lumpadi  avarga'lai  anuppividavea'ndum  en'raarga'l.  (maththeayu  14:15)

இயேசு  அவர்களை  நோக்கி:  அவர்கள்  போகவேண்டுவதில்லை;  நீங்களே  அவர்களுக்குப்  போஜனங்கொடுங்கள்  என்றார்.  (மத்தேயு  14:16)

iyeasu  avarga'lai  noakki:  avarga'l  poagavea'nduvathillai;  neengga'lea  avarga'lukkup  poajanangkodungga'l  en'raar.  (maththeayu  14:16)

அதற்கு  அவர்கள்:  இங்கே  எங்களிடத்தில்  ஐந்து  அப்பமும்  இரண்டு  மீன்களுமேயல்லாமல்,  வேறொன்றும்  இல்லை  என்றார்கள்.  (மத்தேயு  14:17)

atha’rku  avarga'l:  inggea  engga'lidaththil  ainthu  appamum  ira'ndu  meenga'lumeayallaamal,  vea'ron'rum  illai  en'raarga'l.  (maththeayu  14:17)

அவைகளை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  (மத்தேயு  14:18)

avaiga'lai  ennidaththil  ko'nduvaarungga'l  en'raar.  (maththeayu  14:18)

அப்பொழுது,  அவர்  ஜனங்களைப்  புல்லின்மேல்  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  அந்த  ஐந்து  அப்பங்களையும்,  அந்த  இரண்டு  மீன்களையும்  எடுத்து,  வானத்தை  அண்ணாந்துபார்த்து,  ஆசீர்வதித்து,  அப்பங்களைப்  பிட்டுச்  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  சீஷர்கள்  ஜனங்களுக்குக்  கொடுத்தார்கள்.  (மத்தேயு  14:19)

appozhuthu,  avar  janangga'laip  pullinmeal  panthiyirukkak  katta'laiyittu,  antha  ainthu  appangga'laiyum,  antha  ira'ndu  meenga'laiyum  eduththu,  vaanaththai  a'n'naanthupaarththu,  aaseervathiththu,  appangga'laip  pittuch  seesharga'lidaththil  koduththaar;  seesharga'l  janangga'lukkuk  koduththaarga'l.  (maththeayu  14:19)

எல்லாரும்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளைப்  பன்னிரண்டு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  (மத்தேயு  14:20)

ellaarum  saappittuth  thirupthiyadainthaarga'l;  meethiyaana  thu'nikkaiga'laip  pannira'ndu  koodaini'raiya  eduththaarga'l.  (maththeayu  14:20)

ஸ்திரீகளும்  பிள்ளைகளும்  தவிர,  சாப்பிட்ட  புருஷர்கள்  ஏறக்குறைய  ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.  (மத்தேயு  14:21)

sthireega'lum  pi'l'laiga'lum  thavira,  saappitta  purusharga'l  ea'rakku'raiya  aiyaayirampearaayirunthaarga'l.  (maththeayu  14:21)

இயேசு  ஜனங்களை  அனுப்பிவிடுகையில்,  தம்முடைய  சீஷர்கள்  படவில்  ஏறி,  தமக்கு  முன்னே  அக்கரைக்குப்  போகும்படி  அவர்களைத்  துரிதப்படுத்தினார்.  (மத்தேயு  14:22)

iyeasu  janangga'lai  anuppividugaiyil,  thammudaiya  seesharga'l  padavil  ea'ri,  thamakku  munnea  akkaraikkup  poagumpadi  avarga'laith  thurithappaduththinaar.  (maththeayu  14:22)

அவர்  ஜனங்களை  அனுப்பிவிட்ட  பின்பு,  தனித்து  ஜெபம்பண்ண  ஒரு  மலையின்மேல்  ஏறி,  சாயங்காலமானபோது  அங்கே  தனிமையாயிருந்தார்.  (மத்தேயு  14:23)

avar  janangga'lai  anuppivitta  pinbu,  thaniththu  jebampa'n'na  oru  malaiyinmeal  ea'ri,  saayanggaalamaanapoathu  anggea  thanimaiyaayirunthaar.  (maththeayu  14:23)

அதற்குள்ளாகப்  படவு  நடுக்கடலிலே  சேர்ந்து,  எதிர்க்காற்றாயிருந்தபடியால்  அலைகளினால்  அலைவுபட்டது.  (மத்தேயு  14:24)

atha’rku'l'laagap  padavu  nadukkadalilea  searnthu,  ethirkkaat’raayirunthapadiyaal  alaiga'linaal  alaivupattathu.  (maththeayu  14:24)

இரவின்  நாலாம்  ஜாமத்திலே,  இயேசு  கடலின்மேல்  நடந்து,  அவர்களிடத்திற்கு  வந்தார்.  (மத்தேயு  14:25)

iravin  naalaam  jaamaththilea,  iyeasu  kadalinmeal  nadanthu,  avarga'lidaththi’rku  vanthaar.  (maththeayu  14:25)

அவர்  கடலின்மேல்  நடக்கிறதைச்  சீஷர்கள்  கண்டு,  கலக்கமடைந்து,  ஆவேசம்  என்று  சொல்லி,  பயத்தினால்  அலறினார்கள்.  (மத்தேயு  14:26)

avar  kadalinmeal  nadakki'rathaich  seesharga'l  ka'ndu,  kalakkamadainthu,  aaveasam  en'ru  solli,  bayaththinaal  ala'rinaarga'l.  (maththeayu  14:26)

உடனே  இயேசு  அவர்களோடே  பேசி:  திடன்கொள்ளுங்கள்,  நான்தான்,  பயப்படாதிருங்கள்  என்றார்.  (மத்தேயு  14:27)

udanea  iyeasu  avarga'loadea  peasi:  thidanko'l'lungga'l,  naanthaan,  bayappadaathirungga'l  en'raar.  (maththeayu  14:27)

பேதுரு  அவரை  நோக்கி:  ஆண்டவரே!  நீரேயானால்  நான்  ஜலத்தின்மேல்  நடந்து  உம்மிடத்தில்  வரக்  கட்டளையிடும்  என்றான்.  (மத்தேயு  14:28)

peathuru  avarai  noakki:  aa'ndavarea!  neereayaanaal  naan  jalaththinmeal  nadanthu  ummidaththil  varak  katta'laiyidum  en'raan.  (maththeayu  14:28)

அதற்கு  அவர்:  வா  என்றார்.  அப்பொழுது,  பேதுரு  படவை  விட்டிறங்கி,  இயேசுவினிடத்தில்  போக  ஜலத்தின்மேல்  நடந்தான்.  (மத்தேயு  14:29)

atha’rku  avar:  vaa  en'raar.  appozhuthu,  peathuru  padavai  vitti'ranggi,  iyeasuvinidaththil  poaga  jalaththinmeal  nadanthaan.  (maththeayu  14:29)

காற்று  பலமாயிருக்கிறதைக்  கண்டு,  பயந்து,  அமிழ்ந்துபோகையில்:  ஆண்டவரே,  என்னை  ரட்சியும்  என்று  கூப்பிட்டான்.  (மத்தேயு  14:30)

kaat’ru  balamaayirukki'rathaik  ka'ndu,  bayanthu,  amizhnthupoagaiyil:  aa'ndavarea,  ennai  radchiyum  en'ru  kooppittaan.  (maththeayu  14:30)

உடனே  இயேசு  கையை  நீட்டி  அவனைப்  பிடித்து:  அற்பவிசுவாசியே,  ஏன்  சந்தேகப்பட்டாய்  என்றார்.  (மத்தேயு  14:31)

udanea  iyeasu  kaiyai  neetti  avanaip  pidiththu:  a’rpavisuvaasiyea,  ean  santheagappattaay  en'raar.  (maththeayu  14:31)

அவர்கள்  படவில்  ஏறினவுடனே  காற்று  அமர்ந்தது.  (மத்தேயு  14:32)

avarga'l  padavil  ea'rinavudanea  kaat'ru  amarnthathu.  (maththeayu  14:32)

அப்பொழுது,  படவில்  உள்ளவர்கள்  வந்து:  மெய்யாகவே  நீர்  தேவனுடைய  குமாரன்  என்று  சொல்லி,  அவரைப்  பணிந்துகொண்டார்கள்.  (மத்தேயு  14:33)

appozhuthu,  padavil  u'l'lavarga'l  vanthu:  meyyaagavea  neer  theavanudaiya  kumaaran  en'ru  solli,  avaraip  pa'ninthuko'ndaarga'l.  (maththeayu  14:33)

பின்பு,  அவர்கள்  கடலைக்  கடந்து,  கெனேசரேத்து  நாட்டில்  சேர்ந்தார்கள்.  (மத்தேயு  14:34)

pinbu,  avarga'l  kadalaik  kadanthu,  keneasareaththu  naattil  searnthaarga'l.  (maththeayu  14:34)

அவ்விடத்து  மனுஷர்  அவரை  இன்னார்  என்று  அறிந்து,  சுற்றுப்புறமெங்கும்  செய்தி  அனுப்பி,  பிணியாளிகளெல்லாரையும்  அவரிடத்தில்  கொண்டுவந்து,  (மத்தேயு  14:35)

avvidaththu  manushar  avarai  innaar  en'ru  a'rinthu,  sut'ruppu'ramenggum  seythi  anuppi,  pi'niyaa'liga'lellaaraiyum  avaridaththil  ko'nduvanthu,  (maththeayu  14:35)

அவருடைய  வஸ்திரத்தின்  ஓரத்தையாகிலும்  அவர்கள்  தொடும்படி  உத்தரவாகவேண்டுமென்று  அவரை  வேண்டிக்கொண்டார்கள்;  தொட்ட  யாவரும்  சொஸ்தமானார்கள்.  (மத்தேயு  14:36)

avarudaiya  vasthiraththin  oaraththaiyaagilum  avarga'l  thodumpadi  uththaravaagavea'ndumen'ru  avarai  vea'ndikko'ndaarga'l;  thotta  yaavarum  sosthamaanaarga'l.  (maththeayu  14:36)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!