Thursday, April 14, 2016

Maththeayu 13 | மத்தேயு 13 | Matthew 13


இயேசு  அன்றையத்தினமே  வீட்டிலிருந்து  புறப்பட்டுப்போய்,  கடலோரத்திலே  உட்கார்ந்தார்.  (மத்தேயு  13:1)

iyeasu  an'raiyaththinamea  veettilirunthu  pu'rappattuppoay,  kadaloaraththilea  udkaarnthaar.  (maththeayu  13:1)

திரளான  ஜனங்கள்  அவரிடத்தில்  கூடிவந்தபடியால்,  அவர்  படவில்  ஏறி  உட்கார்ந்தார்;  ஜனங்களெல்லாரும்  கரையிலே  நின்றார்கள்.  (மத்தேயு  13:2)

thira'laana  janangga'l  avaridaththil  koodivanthapadiyaal,  avar  padavil  ea'ri  udkaarnthaar;  janangga'lellaarum  karaiyilea  nin'raarga'l.  (maththeayu  13:2)

அவர்  அநேக  விசேஷங்களை  உவமைகளாக  அவர்களுக்குச்  சொன்னார்:  கேளுங்கள்,  விதைக்கிறவன்  ஒருவன்  விதைக்கப்  புறப்பட்டான்.  (மத்தேயு  13:3)

avar  aneaga  viseashangga'lai  uvamaiga'laaga  avarga'lukkuch  sonnaar:  kea'lungga'l,  vithaikki'ravan  oruvan  vithaikkap  pu'rappattaan.  (maththeayu  13:3)

அவன்  விதைக்கையில்,  சில  விதை  வழியருகே  விழுந்தது;  பறவைகள்  வந்து  அதைப்  பட்சித்துப்போட்டது.  (மத்தேயு  13:4)

avan  vithaikkaiyil,  sila  vithai  vazhiyarugea  vizhunthathu;  pa'ravaiga'l  vanthu  athaip  padchiththuppoattathu.  (maththeayu  13:4)

சில  விதை  அதிக  மண்ணில்லாத  கற்பாறை  இடங்களில்  விழுந்தது;  மண்  ஆழமாயிராததினாலே  அது  சீக்கிரமாய்  முளைத்தது.  (மத்தேயு  13:5)

sila  vithai  athiga  ma'n'nillaatha  ka’rpaa'rai  idangga'lil  vizhunthathu;  ma'n  aazhamaayiraathathinaalea  athu  seekkiramaay  mu'laiththathu.  (maththeayu  13:5)

வெயில்  ஏறினபோதோ,  தீய்ந்து  போய்,  வேரில்லாமையால்  உலர்ந்து  போயிற்று.  (மத்தேயு  13:6)

veyil  ea'rinapoathoa,  theeynthu  poay,  vearillaamaiyaal  ularnthu  poayit’ru.  (maththeayu  13:6)

சில  விதை  முள்ளுள்ள  இடங்களில்  விழுந்தது;  முள்  வளர்ந்து  அதை  நெருக்கிப்போட்டது.  (மத்தேயு  13:7)

sila  vithai  mu'l'lu'l'la  idangga'lil  vizhunthathu;  mu'l  va'larnthu  athai  nerukkippoattathu.  (maththeayu  13:7)

சில  விதையோ  நல்ல  நிலத்தில்  விழுந்து,  சிலது  நூறாகவும்,  சிலது  அறுபதாகவும்,  சிலது  முப்பதாகவும்  பலன்  தந்தது.  (மத்தேயு  13:8)

sila  vithaiyoa  nalla  nilaththil  vizhunthu,  silathu  noo'raagavum,  silathu  a'rubathaagavum,  silathu  muppathaagavum  palan  thanthathu.  (maththeayu  13:8)

கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்  என்றார்.  (மத்தேயு  13:9)

keadki'ratha’rkuk  kaathu'l'lavan  keadkakkadavan  en'raar.  (maththeayu  13:9)

அப்பொழுது,  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  ஏன்  அவர்களோடே  உவமைகளாகப்  பேசுகிறீர்  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  13:10)

appozhuthu,  seesharga'l  avaridaththil  vanthu:  ean  avarga'loadea  uvamaiga'laagap  peasugi'reer  en'ru  keattaarga'l.  (maththeayu  13:10)

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  பரலோகராஜ்யத்தின்  ரகசியங்களை  அறியும்படி  உங்களுக்கு  அருளப்பட்டது,  அவர்களுக்கோ  அருளப்படவில்லை.  (மத்தேயு  13:11)

avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  paraloagaraajyaththin  ragasiyangga'lai  a'riyumpadi  ungga'lukku  aru'lappattathu,  avarga'lukkoa  aru'lappadavillai.  (maththeayu  13:11)

உள்ளவன்  எவனோ  அவனுக்குக்  கொடுக்கப்படும்,  பரிபூரணமும்  அடைவான்;  இல்லாதவன்  எவனோ  அவனிடத்தில்  உள்ளதும்  எடுத்துக்கொள்ளப்படும்.  (மத்தேயு  13:12)

u'l'lavan  evanoa  avanukkuk  kodukkappadum,  paripoora'namum  adaivaan;  illaathavan  evanoa  avanidaththil  u'l'lathum  eduththukko'l'lappadum.  (maththeayu  13:12)

அவர்கள்  கண்டும்  காணாதவர்களாயும்,  கேட்டும்  கேளாதவர்களாயும்,  உணர்ந்துகொள்ளாதவர்களாயும்  இருக்கிறபடியினால்,  நான்  உவமைகளாக  அவர்களோடே  பேசுகிறேன்.  (மத்தேயு  13:13)

avarga'l  ka'ndum  kaa'naathavarga'laayum,  keattum  kea'laathavarga'laayum,  u'narnthuko'l'laathavarga'laayum  irukki'rapadiyinaal,  naan  uvamaiga'laaga  avarga'loadea  peasugi'rean.  (maththeayu  13:13)

ஏசாயாவின்  தீர்க்கதரிசனம்  அவர்களிடத்தில்  நிறைவேறுகிறது;  அதாவது:  காதாரக்கேட்டும்  உணராதிருப்பீர்கள்;  கண்ணாரக்கண்டும்  அறியாதிருப்பீர்கள்.  (மத்தேயு  13:14)

easaayaavin  theerkkatharisanam  avarga'lidaththil  ni'raivea'rugi'rathu;  athaavathu:  kaathaarakkeattum  u'naraathiruppeerga'l;  ka'n'naarakka'ndum  a'riyaathiruppeerga'l.  (maththeayu  13:14)

இந்த  ஜனங்கள்  கண்களினால்  காணாமலும்,  காதுகளினால்  கேளாமலும்,  இருதயத்தினால்  உணர்ந்து  மனந்திரும்பாமலும்,  நான்  அவர்களை  ஆரோக்கியமாக்காமலும்  இருக்கும்படியாக,  அவர்கள்  இருதயம்  கொழுத்திருக்கிறது;  காதால்  மந்தமாய்க்  கேட்டு,  தங்கள்  கண்களை  மூடிக்கொண்டார்கள்  என்பதே.  (மத்தேயு  13:15)

intha  janangga'l  ka'nga'linaal  kaa'naamalum,  kaathuga'linaal  kea'laamalum,  iruthayaththinaal  u'narnthu  mananthirumbaamalum,  naan  avarga'lai  aaroakkiyamaakkaamalum  irukkumpadiyaaga,  avarga'l  iruthayam  kozhuththirukki'rathu;  kaathaal  manthamaayk  keattu,  thangga'l  ka'nga'lai  moodikko'ndaarga'l  enbathea.  (maththeayu  13:15)

உங்கள்  கண்கள்  காண்கிறதினாலும்,  உங்கள்  காதுகள்  கேட்கிறதினாலும்,  அவைகள்  பாக்கியமுள்ளவைகள்.  (மத்தேயு  13:16)

ungga'l  ka'nga'l  kaa'ngi'rathinaalum,  ungga'l  kaathuga'l  keadki'rathinaalum,  avaiga'l  baakkiyamu'l'lavaiga'l.  (maththeayu  13:16)

அநேக  தீர்க்கதரிசிகளும்  நீதிமான்களும்  நீங்கள்  காண்கிறவைகளைக்  காணவும்,  நீங்கள்  கேட்கிறவைகளைக்  கேட்கவும்  விரும்பியும்,  காணாமலும்  கேளாமலும்  போனார்களென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  13:17)

aneaga  theerkkatharisiga'lum  neethimaanga'lum  neengga'l  kaa'ngi'ravaiga'laik  kaa'navum,  neengga'l  keadki'ravaiga'laik  keadkavum  virumbiyum,  kaa'naamalum  kea'laamalum  poanaarga'len'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  13:17)

ஆகையால்  விதைக்கிறவனைப்பற்றிய  உவமையைக்  கேளுங்கள்.  (மத்தேயு  13:18)

aagaiyaal  vithaikki'ravanaippat’riya  uvamaiyaik  kea'lungga'l.  (maththeayu  13:18)

ஒருவன்,  ராஜ்யத்தின்  வசனத்தைக்  கேட்டும்  உணராதிருக்கும்போது,  பொல்லாங்கன்  வந்து,  அவன்  இருதயத்தில்  விதைக்கப்பட்டதைப்  பறித்துக்கொள்ளுகிறான்;  அவனே  வழியருகே  விதைக்கப்பட்டவன்.  (மத்தேயு  13:19)

oruvan,  raajyaththin  vasanaththaik  keattum  u'naraathirukkumpoathu,  pollaanggan  vanthu,  avan  iruthayaththil  vithaikkappattathaip  pa'riththukko'l'lugi'raan;  avanea  vazhiyarugea  vithaikkappattavan.  (maththeayu  13:19)

கற்பாறை  இடங்களில்  விதைக்கப்பட்டவன்,  வசனத்தைக்  கேட்டு,  உடனே  அதைச்  சந்தோஷத்தோடே  ஏற்றுக்கொள்ளுகிறவன்;  (மத்தேயு  13:20)

ka’rpaa'rai  idangga'lil  vithaikkappattavan,  vasanaththaik  keattu,  udanea  athaich  santhoashaththoadea  eat’rukko'l'lugi'ravan;  (maththeayu  13:20)

ஆகிலும்  தனக்குள்ளே  வேரில்லாதவனாய்,  கொஞ்சக்காலமாத்திரம்  நிலைத்திருப்பான்;  வசனத்தினிமித்தம்  உபத்திரவமும்  துன்பமும்  உண்டானவுடனே  இடறலடைவான்.  (மத்தேயு  13:21)

aagilum  thanakku'l'lea  vearillaathavanaay,  kognchakkaalamaaththiram  nilaiththiruppaan;  vasanaththinimiththam  ubaththiravamum  thunbamum  u'ndaanavudanea  ida'raladaivaan.  (maththeayu  13:21)

முள்ளுள்ள  இடங்களில்  விதைக்கப்பட்டவன்,  வசனத்தைக்  கேட்கிறவனாயிருந்தும்,  உலகக்கவலையும்  ஐசுவரியத்தின்  மயக்கமும்  வசனத்தை  நெருக்கிப்  போடுகிறதினால்,  அவனும்  பலனற்றுப்  போவான்.  (மத்தேயு  13:22)

mu'l'lu'l'la  idangga'lil  vithaikkappattavan,  vasanaththaik  keadki'ravanaayirunthum,  ulagakkavalaiyum  aisuvariyaththin  mayakkamum  vasanaththai  nerukkip  poadugi'rathinaal,  avanum  palanat'rup  poavaan.  (maththeayu  13:22)

நல்ல  நிலத்தில்  விதைக்கப்பட்டவனோ,  வசனத்தைக்  கேட்கிறவனும்  உணருகிறவனுமாயிருந்து,  நூறாகவும்  அறுபதாகவும்  முப்பதாகவும்  பலன்  தருவான்  என்றார்.  (மத்தேயு  13:23)

nalla  nilaththil  vithaikkappattavanoa,  vasanaththaik  keadki'ravanum  u'narugi'ravanumaayirunthu,  noo'raagavum  a'rubathaagavum  muppathaagavum  palan  tharuvaan  en'raar.  (maththeayu  13:23)

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  தன்  நிலத்தில்  நல்ல  விதையை  விதைத்த  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறது.  (மத்தேயு  13:24)

vea'roru  uvamaiyai  avarga'lukkuch  sonnaar:  paraloagaraajyam  than  nilaththil  nalla  vithaiyai  vithaiththa  manushanukku  oppaayirukki'rathu.  (maththeayu  13:24)

மனுஷர்  நித்திரைபண்ணுகையில்  அவனுடைய  சத்துரு  வந்து,  கோதுமைக்குள்  களைகளை  விதைத்துவிட்டுப்  போனான்.  (மத்தேயு  13:25)

manushar  niththiraipa'n'nugaiyil  avanudaiya  saththuru  vanthu,  koathumaikku'l  ka'laiga'lai  vithaiththuvittup  poanaan.  (maththeayu  13:25)

பயிரானது  வளர்ந்து  கதிர்விட்ட  போது,  களைகளும்  காணப்பட்டது.  (மத்தேயு  13:26)

payiraanathu  va'larnthu  kathirvitta  poathu,  ka'laiga'lum  kaa'nappattathu.  (maththeayu  13:26)

வீட்டெஜமானுடைய  வேலைக்காரர்  அவனிடத்தில்  வந்து:  ஆண்டவனே,  நீர்  உமது  நிலத்தில்  நல்ல  விதையை  விதைத்தீர்  அல்லவா?  பின்னை  அதில்  களைகள்  எப்படி  உண்டானது  என்றார்கள்.  (மத்தேயு  13:27)

veettejamaanudaiya  vealaikkaarar  avanidaththil  vanthu:  aa'ndavanea,  neer  umathu  nilaththil  nalla  vithaiyai  vithaiththeer  allavaa?  pinnai  athil  ka'laiga'l  eppadi  u'ndaanathu  en'raarga'l.  (maththeayu  13:27)

அதற்கு  அவன்:  சத்துரு  அதைச்  செய்தான்  என்றான்.  அப்பொழுது  வேலைக்காரர்:  நாங்கள்  போய்  அவைகளைப்  பிடுங்கிப்போட  உமக்குச்  சித்தமா?  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  13:28)

atha’rku  avan:  saththuru  athaich  seythaan  en'raan.  appozhuthu  vealaikkaarar:  naangga'l  poay  avaiga'laip  pidunggippoada  umakkuch  siththamaa?  en'ru  keattaarga'l.  (maththeayu  13:28)

அதற்கு  அவன்:  வேண்டாம்,  களைகளைப்  பிடுங்கும்போது  நீங்கள்  கோதுமையையுங்கூட  வேரோடே  பிடுங்காதபடிக்கு,  இரண்டையும்  அறுப்புமட்டும்  வளரவிடுங்கள்.  (மத்தேயு  13:29)

atha’rku  avan:  vea'ndaam,  ka'laiga'laip  pidunggumpoathu  neengga'l  koathumaiyaiyungkooda  vearoadea  pidunggaathapadikku,  ira'ndaiyum  a'ruppumattum  va'laravidungga'l.  (maththeayu  13:29)

அறுப்புக்காலத்தில்  நான்  அறுக்கிறவர்களை  நோக்கி:  முதலாவது,  களைகளைப்பிடுங்கி,  அவைகளைச்  சுட்டெரிக்கிறதற்குக்  கட்டுகளாகக்  கட்டுங்கள்;  கோதுமையையோ  என்  களஞ்சியத்தில்  சேர்த்துவையுங்கள்  என்பேன்  என்று  சொன்னான்  என்றார்.  (மத்தேயு  13:30)

a'ruppukkaalaththil  naan  a'rukki'ravarga'lai  noakki:  muthalaavathu,  ka'laiga'laippidunggi,  avaiga'laich  sutterikki'ratha’rkuk  kattuga'laagak  kattungga'l;  koathumaiyaiyoa  en  ka'lagnchiyaththil  searththuvaiyungga'l  enbean  en'ru  sonnaan  en'raar.  (maththeayu  13:30)

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  கடுகு  விதைக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  மனுஷன்  எடுத்துத்  தன்  நிலத்தில்  விதைத்தான்.  (மத்தேயு  13:31)

vea'roru  uvamaiyai  avarga'lukkuch  sonnaar:  paraloagaraajyam  kadugu  vithaikku  oppaayirukki'rathu;  athai  oru  manushan  eduththuth  than  nilaththil  vithaiththaan.  (maththeayu  13:31)

அது  சகல  விதைகளிலும்  சிறிதாயிருந்தும்,  வளரும்போது,  சகல  பூண்டுகளிலும்  பெரிதாகி,  ஆகாயத்துப்  பறவைகள்  அதின்  கிளைகளில்  வந்து  அடையத்தக்க  மரமாகும்  என்றார்.  (மத்தேயு  13:32)

athu  sagala  vithaiga'lilum  si'rithaayirunthum,  va'larumpoathu,  sagala  poo'nduga'lilum  perithaagi,  aagaayaththup  pa'ravaiga'l  athin  ki'laiga'lil  vanthu  adaiyaththakka  maramaagum  en'raar.  (maththeayu  13:32)

வேறொரு  உவமையை  அவர்களுக்குச்  சொன்னார்:  பரலோகராஜ்யம்  புளித்தமாவுக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  ஸ்திரீ  எடுத்து,  முழுவதும்  புளிக்கும்வரைக்கும்,  மூன்றுபடி  மாவிலே  அடக்கிவைத்தாள்  என்றார்.  (மத்தேயு  13:33)

vea'roru  uvamaiyai  avarga'lukkuch  sonnaar:  paraloagaraajyam  pu'liththamaavukku  oppaayirukki'rathu;  athai  oru  sthiree  eduththu,  muzhuvathum  pu'likkumvaraikkum,  moon'rupadi  maavilea  adakkivaiththaa'l  en'raar.  (maththeayu  13:33)

இவைகளையெல்லாம்  இயேசு  ஜனங்களோடே  உவமைகளாகப்  பேசினார்;  உவமைகளினாலேயன்றி,  அவர்களோடே  பேசவில்லை.  (மத்தேயு  13:34)

ivaiga'laiyellaam  iyeasu  janangga'loadea  uvamaiga'laagap  peasinaar;  uvamaiga'linaaleayan'ri,  avarga'loadea  peasavillai.  (maththeayu  13:34)

என்  வாயை  உவமைகளினால்  திறப்பேன்;  உலகத்தோற்றமுதல்  மறைபொருளானவைகளை  வெளிப்படுத்துவேன்  என்று  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  (மத்தேயு  13:35)

en  vaayai  uvamaiga'linaal  thi'rappean;  ulagaththoat'ramuthal  ma'raiporu'laanavaiga'lai  ve'lippaduththuvean  en'ru  theerkkatharisiyaal  uraikkappattathu  ni'raivea'rumpadi  ippadi  nadanthathu.  (maththeayu  13:35)

அப்பொழுது  இயேசு  ஜனங்களை  அனுப்பிவிட்டு  வீட்டுக்குப்போனார்.  அவருடைய  சீஷர்கள்  அவரிடத்தில்  வந்து:  நிலத்தின்  களைகளைப்பற்றிய  உவமையை  எங்களுக்கு  வெளிப்படுத்தவேண்டுமென்று  கேட்டார்கள்.  (மத்தேயு  13:36)

appozhuthu  iyeasu  janangga'lai  anuppivittu  veettukkuppoanaar.  avarudaiya  seesharga'l  avaridaththil  vanthu:  nilaththin  ka'laiga'laippat'riya  uvamaiyai  engga'lukku  ve'lippaduththavea'ndumen'ru  keattaarga'l.  (maththeayu  13:36)

அவர்  பிரதியுத்தரமாக:  நல்ல  விதையை  விதைக்கிறவன்  மனுஷகுமாரன்;  (மத்தேயு  13:37)

avar  pirathiyuththaramaaga:  nalla  vithaiyai  vithaikki'ravan  manushakumaaran;  (maththeayu  13:37)

நிலம்  உலகம்;  நல்ல  விதை  ராஜ்யத்தின்  புத்திரர்;  களைகள்  பொல்லாங்கனுடைய  புத்திரர்;  (மத்தேயு  13:38)

nilam  ulagam;  nalla  vithai  raajyaththin  puththirar;  ka'laiga'l  pollaangganudaiya  puththirar;  (maththeayu  13:38)

அவைகளை  விதைக்கிற  சத்துரு  பிசாசு;  அறுப்பு  உலகத்தின்  முடிவு;  அறுக்கிறவர்கள்  தேவதூதர்கள்.  (மத்தேயு  13:39)

avaiga'lai  vithaikki'ra  saththuru  pisaasu;  a'ruppu  ulagaththin  mudivu;  a'rukki'ravarga'l  theavathootharga'l.  (maththeayu  13:39)

ஆதலால்,  களைகளைச்  சேர்த்து  அக்கினியால்  சுட்டெரிக்கிறதுபோல,  இவ்வுலகத்தின்  முடிவிலே  நடக்கும்.  (மத்தேயு  13:40)

aathalaal,  ka'laiga'laich  searththu  akkiniyaal  sutterikki'rathupoala,  ivvulagaththin  mudivilea  nadakkum.  (maththeayu  13:40)

மனுஷகுமாரன்  தம்முடைய  தூதர்களை  அனுப்புவார்;  அவர்கள்  அவருடைய  ராஜ்யத்தில்  இருக்கிற  சகல  இடறல்களையும்  அக்கிரமஞ்  செய்கிறவர்களையும்  சேர்த்து,  (மத்தேயு  13:41)

manushakumaaran  thammudaiya  thootharga'lai  anuppuvaar;  avarga'l  avarudaiya  raajyaththil  irukki'ra  sagala  ida'ralga'laiyum  akkiramagn  seygi'ravarga'laiyum  searththu,  (maththeayu  13:41)

அவர்களை  அக்கினிச்  சூளையிலே  போடுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்.  (மத்தேயு  13:42)

avarga'lai  akkinich  soo'laiyilea  poaduvaarga'l;  anggea  azhugaiyum  pa’rkadippum  u'ndaayirukkum.  (maththeayu  13:42)

அப்பொழுது,  நீதிமான்கள்  தங்கள்  பிதாவின்  ராஜ்யத்திலே  சூரியனைப்போலப்  பிரகாசிப்பார்கள்.  கேட்கிறதற்குக்  காதுள்ளவன்  கேட்கக்கடவன்.  (மத்தேயு  13:43)

appozhuthu,  neethimaanga'l  thangga'l  pithaavin  raajyaththilea  sooriyanaippoalap  piragaasippaarga'l.  keadki'ratha’rkuk  kaathu'l'lavan  keadkakkadavan.  (maththeayu  13:43)

அன்றியும்,  பரலோகராஜ்யம்  நிலத்தில்  புதைத்திருக்கிற  பொக்கிஷத்துக்கு  ஒப்பாயிருக்கிறது;  அதை  ஒரு  மனுஷன்  கண்டு,  மறைத்து,  அதைப்பற்றிய  சந்தோஷத்தினாலே  போய்,  தனக்கு  உண்டான  எல்லாவற்றையும்  விற்று,  அந்த  நிலத்தைக்  கொள்ளுகிறான்.  (மத்தேயு  13:44)

an'riyum,  paraloagaraajyam  nilaththil  puthaiththirukki'ra  pokkishaththukku  oppaayirukki'rathu;  athai  oru  manushan  ka'ndu,  ma'raiththu,  athaippat'riya  santhoashaththinaalea  poay,  thanakku  u'ndaana  ellaavat’raiyum  vit'ru,  antha  nilaththaik  ko'l'lugi'raan.  (maththeayu  13:44)

மேலும்,  பரலோகராஜ்யம்  நல்ல  முத்துக்களைத்  தேடுகிற  வியாபாரிக்கு  ஒப்பாயிருக்கிறது.  (மத்தேயு  13:45)

mealum,  paraloagaraajyam  nalla  muththukka'laith  theadugi'ra  viyaabaarikku  oppaayirukki'rathu.  (maththeayu  13:45)

அவன்  விலையுயர்ந்த  ஒரு  முத்தைக்  கண்டு,  போய்,  தனக்குண்டான  எல்லாவற்றையும்  விற்று,  அதைக்  கொள்ளுகிறான்.  (மத்தேயு  13:46)

avan  vilaiyuyarntha  oru  muththaik  ka'ndu,  poay,  thanakku'ndaana  ellaavat'raiyum  vit'ru,  athaik  ko'l'lugi'raan.  (maththeayu  13:46)

அன்றியும்,  பரலோகராஜ்யம்  கடலிலே  போடப்பட்டு,  சகலவிதமான  மீன்களையும்  சேர்த்து  வாரிக்கொள்ளும்  வலைக்கு  ஒப்பாயிருக்கிறது.  (மத்தேயு  13:47)

an'riyum,  paraloagaraajyam  kadalilea  poadappattu,  sagalavithamaana  meenga'laiyum  searththu  vaarikko'l'lum  valaikku  oppaayirukki'rathu.  (maththeayu  13:47)

அது  நிறைந்தபோது,  அதைக்  கரையில்  இழுத்து,  உட்கார்ந்து,  நல்லவைகளைக்  கூடைகளில்  சேர்த்து,  ஆகாதவைகளை  எறிந்துபோடுவார்கள்.  (மத்தேயு  13:48)

athu  ni'rainthapoathu,  athaik  karaiyil  izhuththu,  udkaarnthu,  nallavaiga'laik  koodaiga'lil  searththu,  aagaathavaiga'lai  e'rinthupoaduvaarga'l.  (maththeayu  13:48)

இப்படியே  உலகத்தின்  முடிவிலே  நடக்கும்.  தேவதூதர்கள்  புறப்பட்டு,  நீதிமான்களின்  நடுவிலிருந்து  பொல்லாதவர்களைப்  பிரித்து,  (மத்தேயு  13:49)

ippadiyea  ulagaththin  mudivilea  nadakkum.  theavathootharga'l  pu'rappattu,  neethimaanga'lin  naduvilirunthu  pollaathavarga'laip  piriththu,  (maththeayu  13:49)

அவர்களை  அக்கினிச்சூளையிலே  போடுவார்கள்;  அங்கே  அழுகையும்  பற்கடிப்பும்  உண்டாயிருக்கும்  என்றார்.  (மத்தேயு  13:50)

avarga'lai  akkinichsoo'laiyilea  poaduvaarga'l;  anggea  azhugaiyum  pa’rkadippum  u'ndaayirukkum  en'raar.  (maththeayu  13:50)

பின்பு,  இயேசு  அவர்களை  நோக்கி:  இவைகளையெல்லாம்  அறிந்துகொண்டீர்களா  என்று  கேட்டார்.  அதற்கு  அவர்கள்:  ஆம்,  அறிந்துகொண்டோம்,  ஆண்டவரே,  என்றார்கள்.  (மத்தேயு  13:51)

pinbu,  iyeasu  avarga'lai  noakki:  ivaiga'laiyellaam  a'rinthuko'ndeerga'laa  en'ru  keattaar.  atha’rku  avarga'l:  aam,  a'rinthuko'ndoam,  aa'ndavarea,  en'raarga'l.  (maththeayu  13:51)

அப்பொழுது  அவர்  அவர்களை  நோக்கி:  இப்படியிருக்கிறபடியால்,  பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில்  உபதேசிக்கப்பட்டுத்  தேறின  வேதபாரகன்  எவனும்  தன்  பொக்கிஷத்திலிருந்து  புதியவைகளையும்  பழையவைகளையும்  எடுத்துக்கொடுக்கிற  வீட்டெஜமானாகிய  மனுஷனுக்கு  ஒப்பாயிருக்கிறான்  என்றார்.  (மத்தேயு  13:52)

appozhuthu  avar  avarga'lai  noakki:  ippadiyirukki'rapadiyaal,  paraloagaraajyaththukkaduththavaiga'lil  ubatheasikkappattuth  thea'rina  veathapaaragan  evanum  than  pokkishaththilirunthu  puthiyavaiga'laiyum  pazhaiyavaiga'laiyum  eduththukkodukki'ra  veettejamaanaagiya  manushanukku  oppaayirukki'raan  en'raar.  (maththeayu  13:52)

இயேசு  இந்த  உவமைகளைச்  சொல்லி  முடித்தபின்பு,  அவ்விடம்  விட்டு,  (மத்தேயு  13:53)

iyeasu  intha  uvamaiga'laich  solli  mudiththapinbu,  avvidam  vittu,  (maththeayu  13:53)

தாம்  வளர்ந்த  ஊரிலே  வந்து,  அவர்களுடைய  ஜெபஆலயத்திலே  அவர்களுக்கு  உபதேசம்பண்ணினார்.  அவர்கள்  ஆச்சரியப்பட்டு:  இவனுக்கு  இந்த  ஞானமும்  பலத்த  செய்கைகளும்  எப்படி  வந்தது?  (மத்தேயு  13:54)

thaam  va'larntha  oorilea  vanthu,  avarga'ludaiya  jebaaalayaththilea  avarga'lukku  ubatheasampa'n'ninaar.  avarga'l  aachchariyappattu:  ivanukku  intha  gnaanamum  balaththa  seygaiga'lum  eppadi  vanthathu?  (maththeayu  13:54)

இவன்  தச்சனுடைய  குமாரன்  அல்லவா?  இவன்  தாய்  மரியாள்  என்பவள்  அல்லவா?  யாக்கோபு  யோசே  சீமோன்  யூதா  என்பவர்கள்  இவனுக்குச்  சகோதரர்  அல்லவா?  (மத்தேயு  13:55)

ivan  thachchanudaiya  kumaaran  allavaa?  ivan  thaay  mariyaa'l  enbava'l  allavaa?  yaakkoabu  yoasea  seemoan  yoothaa  enbavarga'l  ivanukkuch  sagoatharar  allavaa?  (maththeayu  13:55)

இவன்  சகோதரிகளெல்லாரும்  நம்மிடத்தில்  இருக்கிறார்கள்  அல்லவா?  இப்படியிருக்க,  இதெல்லாம்  இவனுக்கு  எப்படி  வந்தது?  என்று  சொல்லி,  (மத்தேயு  13:56)

ivan  sagoathariga'lellaarum  nammidaththil  irukki'raarga'l  allavaa?  ippadiyirukka,  ithellaam  ivanukku  eppadi  vanthathu?  en'ru  solli,  (maththeayu  13:56)

அவரைக்குறித்து  இடறலடைந்தார்கள்.  இயேசு  அவர்களை  நோக்கி:  தீர்க்கதரிசி  ஒருவன்  தன்  ஊரிலும்  தன்  வீட்டிலுமேயன்றி  வேறெங்கும்  கனவீனமடையான்  என்றார்.  (மத்தேயு  13:57)

avaraikku'riththu  ida'raladainthaarga'l.  iyeasu  avarga'lai  noakki:  theerkkatharisi  oruvan  than  oorilum  than  veettilumeayan'ri  vea'renggum  kanaveenamadaiyaan  en'raar.  (maththeayu  13:57)

அவர்களுடைய  அவிசுவாசத்தினிமித்தம்  அவர்  அங்கே  அநேக  அற்புதங்களைச்  செய்யவில்லை.  (மத்தேயு  13:58)

avarga'ludaiya  avisuvaasaththinimiththam  avar  anggea  aneaga  a’rputhangga'laich  seyyavillai.  (maththeayu  13:58)


1 comment:

  1. Correction(s) March 17, 2019 >>> Changed akkinichsu'laiyilea to akkinichsoo'laiyilea (Matthew 13:50)

    ReplyDelete

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!