Tuesday, April 12, 2016

Maththeayu 12 | மத்தேயு 12 | Matthew 12


அக்காலத்திலே,  இயேசு  ஓய்வுநாளில்  பயிர்வழியே  போனார்;  அவருடைய  சீஷர்கள்  பசியாயிருந்து,  கதிர்களைக்  கொய்து,  தின்னத்  தொடங்கினார்கள்.  (மத்தேயு  12:1)

akkaalaththilea,  iyeasu  oayvunaa'lil  payirvazhiyea  poanaar;  avarudaiya  seesharga'l  pasiyaayirunthu,  kathirga'laik  koythu,  thinnath  thodangginaarga'l.  (maththeayu  12:1)

பரிசேயர்  அதைக்கண்டு,  அவரை  நோக்கி:  இதோ,  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  உம்முடைய  சீஷர்கள்  செய்கிறார்களே  என்றார்கள்.  (மத்தேயு  12:2)

pariseayar  athaikka'ndu,  avarai  noakki:  ithoa,  oayvunaa'lil  seyyaththagaathathai  ummudaiya  seesharga'l  seygi'raarga'lea  en'raarga'l.  (maththeayu  12:2)

அதற்கு  அவர்:  தாவீதும்  அவனோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது  செய்ததை  நீங்கள்  வாசிக்கவில்லையா?  (மத்தேயு  12:3)

atha’rku  avar:  thaaveethum  avanoadirunthavarga'lum  pasiyaayirunthapoathu  seythathai  neengga'l  vaasikkavillaiyaa?  (maththeayu  12:3)

அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்  தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தேவசமுகத்து  அப்பங்களைத்  தானும்  தன்னோடிருந்தவர்களும்  புசித்தார்களே.  (மத்தேயு  12:4)

avan  theavanudaiya  veettil  piraveasiththu,  aasaariyar  thavira  vea'roruvarum  pusikkaththagaatha  theavasamugaththu  appangga'laith  thaanum  thannoadirunthavarga'lum  pusiththaarga'lea.  (maththeayu  12:4)

அன்றியும்,  ஓய்வுநாட்களில்  ஆசாரியர்கள்  தேவாலயத்தில்  ஓய்ந்திராமல்,  ஓய்வுநாளை  வேலை  நாளாக்கினாலும்,  குற்றமில்லாதிருக்கிறார்கள்  என்று  நீங்கள்  வேதத்தில்  வாசிக்கவில்லையா?  (மத்தேயு  12:5)

an'riyum,  oayvunaadka'lil  aasaariyarga'l  theavaalayaththil  oaynthiraamal,  oayvunaa'lai  vealai  naa'laakkinaalum,  kut’ramillaathirukki'raarga'l  en'ru  neengga'l  veathaththil  vaasikkavillaiyaa?  (maththeayu  12:5)

தேவாலயத்திலும்  பெரியவர்  இங்கே  இருக்கிறார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  12:6)

theavaalayaththilum  periyavar  inggea  irukki'raar  en'ru  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  12:6)

பலியையல்ல  இரக்கத்தையே  விரும்புகிறேன்  என்பதின்  கருத்து  இன்னதென்று  அறிந்தீர்களானால்,  குற்றமில்லாதவர்களை  நீங்கள்  குற்றப்படுத்தமாட்டீர்கள்.  (மத்தேயு  12:7)

baliyaiyalla  irakkaththaiyea  virumbugi'rean  enbathin  karuththu  innathen'ru  a'rintheerga'laanaal,  kut'ramillaathavarga'lai  neengga'l  kut'rappaduththamaatteerga'l.  (maththeayu  12:7)

மனுஷகுமாரன்  ஓய்வுநாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  (மத்தேயு  12:8)

manushakumaaran  oayvunaa'lukkum  aa'ndavaraay  irukki'raar  en'raar.  (maththeayu  12:8)

அவர்  அவ்விடம்  விட்டுப்போய்,  அவர்களுடைய  ஜெப  ஆலயத்தில்  பிரவேசித்தார்.  (மத்தேயு  12:9)

avar  avvidam  vittuppoay,  avarga'ludaiya  jeba  aalayaththil  piraveasiththaar.  (maththeayu  12:9)

அங்கே  சூம்பின  கையையுடைய  மனுஷன்  ஒருவன்  இருந்தான்.  அப்பொழுது,  அவர்மேல்  குற்றஞ்சாட்டும்படிக்கு:  ஓய்வுநாளில்  சொஸ்தமாக்குகிறது  நியாயமா  என்று  கேட்டார்கள்.  (மத்தேயு  12:10)

anggea  soombina  kaiyaiyudaiya  manushan  oruvan  irunthaan.  appozhuthu,  avarmeal  kut'ragnsaattumpadikku:  oayvunaa'lil  sosthamaakkugi'rathu  niyaayamaa  en'ru  keattaarga'l.  (maththeayu  12:10)

அதற்கு  அவர்:  உங்களில்  எந்த  மனுஷனுக்காகிலும்  ஒரு  ஆடு  இருந்து,  அது  ஓய்வுநாளில்  குழியிலே  விழுந்தால்,  அதைப்  பிடித்துத்  தூக்கிவிடமாட்டானோ?  (மத்தேயு  12:11)

atha’rku  avar:  ungga'lil  entha  manushanukkaagilum  oru  aadu  irunthu,  athu  oayvunaa'lil  kuzhiyilea  vizhunthaal,  athaip  pidiththuth  thookkividamaattaanoa?  (maththeayu  12:11)

ஆட்டைப்பார்க்கிலும்  மனுஷனானவன்  எவ்வளவோ  விசேஷித்திருக்கிறான்!  ஆதலால்,  ஓய்வுநாளிலே  நன்மைசெய்வது  நியாயந்தான்  என்று  சொன்னார்.  (மத்தேயு  12:12)

aattaippaarkkilum  manushanaanavan  evva'lavoa  viseashiththirukki'raan!  aathalaal,  oayvunaa'lilea  nanmaiseyvathu  niyaayanthaan  en'ru  sonnaar.  (maththeayu  12:12)

பின்பு  அந்த  மனுஷனை  நோக்கி:  உன்  கையை  நீட்டு  என்றார்.  அவன்  நீட்டினான்;  அது  மறுகையைப்போல்  சொஸ்தமாயிற்று.  (மத்தேயு  12:13)

pinbu  antha  manushanai  noakki:  un  kaiyai  neettu  en'raar.  avan  neettinaan;  athu  ma'rukaiyaippoal  sosthamaayit’ru.  (maththeayu  12:13)

அப்பொழுது,  பரிசேயர்  வெளியேபோய்,  அவரைக்  கொலைசெய்யும்படி  அவருக்கு  விரோதமாய்  ஆலோசனைபண்ணினார்கள்.  (மத்தேயு  12:14)

appozhuthu,  pariseayar  ve'liyeapoay,  avaraik  kolaiseyyumpadi  avarukku  viroathamaay  aaloasanaipa'n'ninaarga'l.  (maththeayu  12:14)

இயேசு  அதை  அறிந்து,  அவ்விடம்  விட்டு  விலகிப்போனார்.  திரளான  ஜனங்கள்  அவருக்குப்  பின்சென்றார்கள்;  அவர்களெல்லாரையும்  அவர்  சொஸ்தமாக்கி,  (மத்தேயு  12:15)

iyeasu  athai  a'rinthu,  avvidam  vittu  vilagippoanaar.  thira'laana  janangga'l  avarukkup  pinsen'raarga'l;  avarga'lellaaraiyum  avar  sosthamaakki,  (maththeayu  12:15)

தம்மைப்  பிரசித்தம்பண்ணாதபடி  அவர்களுக்குக்  கண்டிப்பாய்க்  கட்டளையிட்டார்.  (மத்தேயு  12:16)

thammaip  pirasiththampa'n'naathapadi  avarga'lukkuk  ka'ndippaayk  katta'laiyittaar.  (maththeayu  12:16)

ஏசாயா  தீர்க்கதரிசியால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  அவன்  உரைத்ததாவது:  (மத்தேயு  12:17)

easaayaa  theerkkatharisiyaal  uraikkappattathu  ni'raivea'rumpadi  ippadi  nadanthathu.  avan  uraiththathaavathu:  (maththeayu  12:17)

இதோ,  நான்  தெரிந்துகொண்ட  என்னுடைய  தாசன்,  என்  ஆத்துமாவுக்குப்  பிரியமாயிருக்கிற  என்னுடைய  நேசன்;  என்  ஆவியை  அவர்மேல்  அமரப்பண்ணுவேன்,  அவர்  புறஜாதியாருக்கு  நியாயத்தை  அறிவிப்பார்.  (மத்தேயு  12:18)

ithoa,  naan  therinthuko'nda  ennudaiya  thaasan,  en  aaththumaavukkup  piriyamaayirukki'ra  ennudaiya  neasan;  en  aaviyai  avarmeal  amarappa'n'nuvean,  avar  pu'rajaathiyaarukku  niyaayaththai  a'rivippaar.  (maththeayu  12:18)

வாக்குவாதம்  செய்யவுமாட்டார்,  கூக்குரலிடவுமாட்டார்;  அவருடைய  சத்தத்தை  ஒருவனும்  வீதிகளில்  கேட்பதுமில்லை.  (மத்தேயு  12:19)

vaakkuvaatham  seyyavumaattaar,  kookkuralidavumaattaar;  avarudaiya  saththaththai  oruvanum  veethiga'lil  keadpathumillai.  (maththeayu  12:19)

அவர்  நியாயத்திற்கு  ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும்,  நெரிந்தநாணலை  முறிக்காமலும்,  மங்கியெரிகிற  திரியை  அணைக்காமலும்  இருப்பார்.  (மத்தேயு  12:20)

avar  niyaayaththi’rku  jeyangkidaikkappa'n'nugi'ravaraikkum,  nerinthanaa'nalai  mu'rikkaamalum,  manggiyerigi'ra  thiriyai  a'naikkaamalum  iruppaar.  (maththeayu  12:20)

அவருடைய  நாமத்தின்மேல்  புறஜாதியார்  நம்பிக்கையாயிருப்பார்கள்  என்பதே.  (மத்தேயு  12:21)

avarudaiya  naamaththinmeal  pu'rajaathiyaar  nambikkaiyaayiruppaarga'l  enbathea.  (maththeayu  12:21)

அப்பொழுது,  பிசாசு  பிடித்த  குருடும்  ஊமையுமான  ஒருவன்  அவரிடத்தில்  கொண்டுவரப்பட்டான்;  குருடும்  ஊமையுமானவன்  பேசவுங்  காணவுந்தக்கதாக  அவனைச்  சொஸ்தமாக்கினார்.  (மத்தேயு  12:22)

appozhuthu,  pisaasu  pidiththa  kurudum  oomaiyumaana  oruvan  avaridaththil  ko'nduvarappattaan;  kurudum  oomaiyumaanavan  peasavung  kaa'navunthakkathaaga  avanaich  sosthamaakkinaar.  (maththeayu  12:22)

ஜனங்களெல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  தாவீதின்  குமாரன்  இவர்தானோ?  என்றார்கள்.  (மத்தேயு  12:23)

janangga'lellaarum  aachchariyappattu:  thaaveethin  kumaaran  ivarthaanoa?  en'raarga'l.  (maththeayu  12:23)

பரிசேயர்  அதைக்கேட்டு:  இவன்  பிசாசுகளின்  தலைவனாகிய  பெயெல்செபூலினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறானேயல்லாமல்  மற்றப்படியல்ல  என்றார்கள்.  (மத்தேயு  12:24)

pariseayar  athaikkeattu:  ivan  pisaasuga'lin  thalaivanaagiya  beyelseboolinaalea  pisaasuga'laith  thuraththugi'raaneayallaamal  mat'rappadiyalla  en'raarga'l.  (maththeayu  12:24)

இயேசு  அவர்கள்  சிந்தனைகளை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்த  ராஜ்யமும்  பாழாய்ப்போம்;  தனக்குத்தானே  விரோதமாய்ப்  பிரிந்திருக்கிற  எந்தப்  பட்டணமும்  எந்த  வீடும்  நிலைநிற்கமாட்டாது.  (மத்தேயு  12:25)

iyeasu  avarga'l  sinthanaiga'lai  a'rinthu,  avarga'lai  noakki:  thanakkuththaanea  viroathamaayp  pirinthirukki'ra  entha  raajyamum  paazhaayppoam;  thanakkuththaanea  viroathamaayp  pirinthirukki'ra  enthap  patta'namum  entha  veedum  nilaini’rkamaattaathu.  (maththeayu  12:25)

சாத்தானைச்  சாத்தான்  துரத்தினால்  தனக்கு  விரோதமாகத்  தானே  பிரிவினை  செய்கிறதாயிருக்குமே;  அப்படிச்  செய்தால்  அவன்  ராஜ்யம்  எப்படி  நிலைநிற்கும்?  (மத்தேயு  12:26)

saaththaanaich  saaththaan  thuraththinaal  thanakku  viroathamaagath  thaanea  pirivinai  seygi'rathaayirukkumea;  appadich  seythaal  avan  raajyam  eppadi  nilaini’rkum?  (maththeayu  12:26)

நான்  பெயெல்செபூலினாலே  பிசாசுகளைத்  துரத்தினால்,  உங்கள்  பிள்ளைகள்  அவைகளை  யாராலே  துரத்துகிறார்கள்?  ஆகையால்,  அவர்களே  உங்களை  நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.  (மத்தேயு  12:27)

naan  beyelseboolinaalea  pisaasuga'laith  thuraththinaal,  ungga'l  pi'l'laiga'l  avaiga'lai  yaaraalea  thuraththugi'raarga'l?  aagaiyaal,  avarga'lea  ungga'lai  niyaayantheerkki'ravarga'laayiruppaarga'l.  (maththeayu  12:27)

நான்  தேவனுடைய  ஆவியினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறபடியால்,  தேவனுடைய  ராஜ்யம்  உங்களிடத்தில்  வந்திருக்கிறதே.  (மத்தேயு  12:28)

naan  theavanudaiya  aaviyinaalea  pisaasuga'laith  thuraththugi'rapadiyaal,  theavanudaiya  raajyam  ungga'lidaththil  vanthirukki'rathea.  (maththeayu  12:28)

அன்றியும்,  பலவானை  முந்திக்  கட்டினாலொழியப்  பலவானுடைய  வீட்டுக்குள்  ஒருவன்  புகுந்து,  அவன்  உடைமைகளை  எப்படிக்  கொள்ளையிடக்கூடும்?  கட்டினானேயாகில்,  அவன்  வீட்டைக்  கொள்ளையிடலாம்.  (மத்தேயு  12:29)

an'riyum,  balavaanai  munthik  kattinaalozhiyap  balavaanudaiya  veettukku'l  oruvan  pugunthu,  avan  udaimaiga'lai  eppadik  ko'l'laiyidakkoodum?  kattinaaneayaagil,  avan  veettaik  ko'l'laiyidalaam.  (maththeayu  12:29)

என்னோடே  இராதவன்  எனக்கு  விரோதியாயிருக்கிறான்;  என்னோடே  சேர்க்காதவன்  சிதறடிக்கிறான்.  (மத்தேயு  12:30)

ennoadea  iraathavan  enakku  viroathiyaayirukki'raan;  ennoadea  searkkaathavan  sitha'radikki'raan.  (maththeayu  12:30)

ஆதலால்,  நான்  உங்களுக்குச்  சொல்லுகிறேன்:  எந்தப்  பாவமும்  எந்தத்  தூஷணமும்  மனுஷருக்கு  மன்னிக்கப்படும்;  ஆவியானவருக்கு  விரோதமான  தூஷணமோ  மனுஷருக்கு  மன்னிக்கப்படுவதில்லை.  (மத்தேயு  12:31)

aathalaal,  naan  ungga'lukkuch  sollugi'rean:  enthap  paavamum  enthath  thoosha'namum  manusharukku  mannikkappadum;  aaviyaanavarukku  viroathamaana  thoosha'namoa  manusharukku  mannikkappaduvathillai.  (maththeayu  12:31)

எவனாகிலும்  மனுஷகுமாரனுக்கு  விரோதமான  வார்த்தை  சொன்னால்  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்;  எவனாகிலும்  பரிசுத்த  ஆவிக்கு  விரோதமாகப்  பேசினால்  அது  இம்மையிலும்  மறுமையிலும்  அவனுக்கு  மன்னிக்கப்படுவதில்லை.  (மத்தேயு  12:32)

evanaagilum  manushakumaaranukku  viroathamaana  vaarththai  sonnaal  athu  avanukku  mannikkappadum;  evanaagilum  parisuththa  aavikku  viroathamaagap  peasinaal  athu  immaiyilum  ma'rumaiyilum  avanukku  mannikkappaduvathillai.  (maththeayu  12:32)

மரம்  நல்லதென்றால்,  அதின்  கனியும்  நல்லதென்று  சொல்லுங்கள்;  மரம்  கெட்டதென்றால்,  அதின்  கனியும்  கெட்டதென்று  சொல்லுங்கள்;  மரமானது  அதின்  கனியினால்  அறியப்படும்.  (மத்தேயு  12:33)

maram  nallathen'raal,  athin  kaniyum  nallathen'ru  sollungga'l;  maram  kettathen'raal,  athin  kaniyum  kettathen'ru  sollungga'l;  maramaanathu  athin  kaniyinaal  a'riyappadum.  (maththeayu  12:33)

விரியன்பாம்புக்  குட்டிகளே,  நீங்கள்  பொல்லாதவர்களாயிருக்க,  நலமானவைகளை  எப்படிப்  பேசுவீர்கள்?  இருதயத்தின்  நிறைவினால்  வாய்  பேசும்.  (மத்தேயு  12:34)

viriyanpaambuk  kuttiga'lea,  neengga'l  pollaathavarga'laayirukka,  nalamaanavaiga'lai  eppadip  peasuveerga'l?  iruthayaththin  ni'raivinaal  vaay  peasum.  (maththeayu  12:34)

நல்ல  மனுஷன்  இருதயமாகிய  நல்ல  பொக்கிஷத்திலிருந்து  நல்லவைகளை  எடுத்துக்காட்டுகிறான்,  பொல்லாத  மனுஷன்  பொல்லாத  பொக்கிஷத்திலிருந்து  பொல்லாதவைகளை  எடுத்துக்காட்டுகிறான்.  (மத்தேயு  12:35)

nalla  manushan  iruthayamaagiya  nalla  pokkishaththilirunthu  nallavaiga'lai  eduththukkaattugi'raan,  pollaatha  manushan  pollaatha  pokkishaththilirunthu  pollaathavaiga'lai  eduththukkaattugi'raan.  (maththeayu  12:35)

மனுஷர்  பேசும்  வீணான  வார்த்தைகள்  யாவையும்  குறித்து  நியாயத்தீர்ப்புநாளிலே  கணக்கொப்புவிக்கவேண்டும்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  12:36)

manushar  peasum  vee'naana  vaarththaiga'l  yaavaiyum  ku'riththu  niyaayaththeerppunaa'lilea  ka'nakkoppuvikkavea'ndum  en'ru  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  12:36)

ஏனெனில்,  உன்  வார்த்தைகளினாலே  நீதிமான்  என்று  தீர்க்கப்படுவாய்;  அல்லது  உன்  வார்த்தைகளினாலே  குற்றவாளி  என்று  தீர்க்கப்படுவாய்  என்றார்.  (மத்தேயு  12:37)

eanenil,  un  vaarththaiga'linaalea  neethimaan  en'ru  theerkkappaduvaay;  allathu  un  vaarththaiga'linaalea  kut'ravaa'li  en'ru  theerkkappaduvaay  en'raar.  (maththeayu  12:37)

அப்பொழுது,  வேதபாரகரிலும்  பரிசேயரிலும்  சிலர்  அவரை  நோக்கி:  போதகரே,  உம்மால்  ஒரு  அடையாளத்தைக்  காண  விரும்புகிறோம்  என்றார்கள்.  (மத்தேயு  12:38)

appozhuthu,  veathapaaragarilum  pariseayarilum  silar  avarai  noakki:  poathagarea,  ummaal  oru  adaiyaa'laththaik  kaa'na  virumbugi'roam  en'raarga'l.  (maththeayu  12:38)

அவர்களுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  இந்தப்  பொல்லாத  விபசாரச்  சந்ததியார்  அடையாளத்தைத்  தேடுகிறார்கள்;  ஆனாலும்  யோனா  தீர்க்கதரிசியின்  அடையாளமேயன்றி  வேறே  அடையாளம்  இவர்களுக்குக்  கொடுக்கப்படுவதில்லை.  (மத்தேயு  12:39)

avarga'lukku  avar  pirathiyuththaramaaga:  inthap  pollaatha  vibasaarach  santhathiyaar  adaiyaa'laththaith  theadugi'raarga'l;  aanaalum  yoanaa  theerkkatharisiyin  adaiyaa'lameayan'ri  vea'rea  adaiyaa'lam  ivarga'lukkuk  kodukkappaduvathillai.  (maththeayu  12:39)

யோனா  இரவும்  பகலும்  மூன்றுநாள்  ஒரு  பெரிய  மீனின்  வயிற்றில்  இருந்தது  போல,  மனுஷகுமாரனும்  இரவும்  பகலும்  மூன்றுநாள்  பூமியின்  இருதயத்தில்  இருப்பார்.  (மத்தேயு  12:40)

yoanaa  iravum  pagalum  moon'runaa'l  oru  periya  meenin  vayit’ril  irunthathu  poala,  manushakumaaranum  iravum  pagalum  moon'runaa'l  boomiyin  iruthayaththil  iruppaar.  (maththeayu  12:40)

யோனாவின்  பிரசங்கத்தைக்  கேட்டு  நினிவே  பட்டணத்தார்  மனந்திரும்பினார்கள்.  இதோ,  யோனாவிலும்  பெரியவர்  இங்கே  இருக்கிறார்.  ஆதலால்  நியாயத்தீர்ப்புநாளிலே  நினிவே  பட்டணத்தார்  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவார்கள்.  (மத்தேயு  12:41)

yoanaavin  pirasanggaththaik  keattu  ninivea  patta'naththaar  mananthirumbinaarga'l.  ithoa,  yoanaavilum  periyavar  inggea  irukki'raar.  aathalaal  niyaayaththeerppunaa'lilea  ninivea  patta'naththaar  inthach  santhathiyaaroadezhunthu  nin'ru  ivarga'lmeal  kut'ragnsumaththuvaarga'l.  (maththeayu  12:41)

தென்தேசத்து  ராஜஸ்திரீ  பூமியின்  எல்லைகளிலிருந்து  சாலொமோனுடைய  ஞானத்தைக்  கேட்க  வந்தாள்.  இதோ,  சாலொமோனிலும்  பெரியவர்  இங்கே  இருக்கிறார்.  ஆதலால்  நியாயத்தீர்ப்புநாளிலே  அந்த  ராஜஸ்திரீ  இந்தச்  சந்ததியாரோடெழுந்து  நின்று  இவர்கள்மேல்  குற்றஞ்சுமத்துவாள்.  (மத்தேயு  12:42)

thentheasaththu  raajasthiree  boomiyin  ellaiga'lilirunthu  saalomoanudaiya  gnaanaththaik  keadka  vanthaa'l.  ithoa,  saalomoanilum  periyavar  inggea  irukki'raar.  aathalaal  niyaayaththeerppunaa'lilea  antha  raajasthiree  inthach  santhathiyaaroadezhunthu  nin'ru  ivarga'lmeal  kut'ragnsumaththuvaa'l.  (maththeayu  12:42)

அசுத்த  ஆவி  ஒரு  மனுஷனை  விட்டுப்  புறப்படும்போது,  வறண்ட  இடங்களில்  அலைந்து,  இளைப்பாறுதல்  தேடியும்  கண்டடையாமல்:  (மத்தேயு  12:43)

asuththa  aavi  oru  manushanai  vittup  pu'rappadumpoathu,  va'ra'nda  idangga'lil  alainthu,  i'laippaa'ruthal  theadiyum  ka'ndadaiyaamal:  (maththeayu  12:43)

நான்  விட்டுவந்த  என்  வீட்டுக்குத்  திரும்பிப்போவேன்  என்று  சொல்லி;  அங்கே  வந்து,  அந்த  வீடு  வெறுமையாகவும்,  பெருக்கி,  ஜோடிக்கப்பட்டதாகவும்  இருக்கக்கண்டு,  (மத்தேயு  12:44)

naan  vittuvantha  en  veettukkuth  thirumbippoavean  en'ru  solli;  anggea  vanthu,  antha  veedu  ve'rumaiyaagavum,  perukki,  joadikkappattathaagavum  irukkakka'ndu,  (maththeayu  12:44)

திரும்பிப்போய்,  தன்னிலும்  பொல்லாத  வேறு  ஏழு  ஆவிகளைத்  தன்னோடே  கூட்டிக்கொண்டுவந்து,  உட்புகுந்து,  அங்கே  குடியிருக்கும்;  அப்பொழுது,  அந்த  மனுஷனுடைய  முன்னிலைமையிலும்  அவன்  பின்னிலைமை  அதிக  கேடுள்ளதாயிருக்கும்;  அப்படியே  இந்தப்  பொல்லாத  சந்ததியாருக்கும்  சம்பவிக்கும்  என்றார்.  (மத்தேயு  12:45)

thirumbippoay,  thannilum  pollaatha  vea'ru  eazhu  aaviga'laith  thannoadea  koottikko'nduvanthu,  udpugunthu,  anggea  kudiyirukkum;  appozhuthu,  antha  manushanudaiya  munnilaimaiyilum  avan  pinnilaimai  athiga  keadu'l'lathaayirukkum;  appadiyea  inthap  pollaatha  santhathiyaarukkum  sambavikkum  en'raar.  (maththeayu  12:45)

இப்படி  அவர்  ஜனங்களோடே  பேசுகையில்,  அவருடைய  தாயாரும்  சகோதரரும்  அவரிடத்தில்  பேசவேண்டுமென்று  வெளியே  நின்றார்கள்.  (மத்தேயு  12:46)

ippadi  avar  janangga'loadea  peasugaiyil,  avarudaiya  thaayaarum  sagoathararum  avaridaththil  peasavea'ndumen'ru  ve'liyea  nin'raarga'l.  (maththeayu  12:46)

அப்பொழுது,  ஒருவன்  அவரை  நோக்கி:  உம்முடைய  தாயாரும்  உம்முடைய  சகோதரரும்  உம்மோடே  பேசவேண்டுமென்று  வெளியே  நிற்கிறார்கள்  என்றான்.  (மத்தேயு  12:47)

appozhuthu,  oruvan  avarai  noakki:  ummudaiya  thaayaarum  ummudaiya  sagoathararum  ummoadea  peasavea'ndumen'ru  ve'liyea  ni’rki'raarga'l  en'raan.  (maththeayu  12:47)

தம்மிடத்தில்  இப்படிச்  சொன்னவனுக்கு  அவர்  பிரதியுத்தரமாக:  என்  தாயார்  யார்?  என்  சகோதரர்  யார்?  என்று  சொல்லி,  (மத்தேயு  12:48)

thammidaththil  ippadich  sonnavanukku  avar  pirathiyuththaramaaga:  en  thaayaar  yaar?  en  sagoatharar  yaar?  en'ru  solli,  (maththeayu  12:48)

தம்முடைய  கையைத்  தமது  சீஷர்களுக்கு  நேரே  நீட்டி:  இதோ,  என்  தாயும்  என்  சகோதரரும்  இவர்களே!  (மத்தேயு  12:49)

thammudaiya  kaiyaith  thamathu  seesharga'lukku  nearea  neetti:  ithoa,  en  thaayum  en  sagoathararum  ivarga'lea!  (maththeayu  12:49)

பரலோகத்திலிருக்கிற  என்  பிதாவின்  சித்தத்தின்படி  செய்கிறவன்  எவனோ,  அவனே  எனக்குச்  சகோதரனும்  சகோதரியும்  தாயுமாய்  இருக்கிறான்  என்றார்.  (மத்தேயு  12:50)

paraloagaththilirukki'ra  en  pithaavin  siththaththinpadi  seygi'ravan  evanoa,  avanea  enakkuch  sagoatharanum  sagoathariyum  thaayumaay  irukki'raan  en'raar.  (maththeayu  12:50)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!