Saturday, April 30, 2016

Maa’rku 9 | மாற்கு 9 | Mark 9

அன்றியும்,  அவர்  அவர்களை  நோக்கி:  இங்கே  நிற்கிறவர்களில்  சிலர்  தேவனுடைய  ராஜ்யம்  பலத்தோடே  வருவதைக்  காணுமுன்,  மரணத்தை  ருசிபார்ப்பதில்லையென்று,  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  9:1)

an’riyum,  avar  avarga'lai  noakki:  inggea  ni’rki’ravarga'lil  silar  theavanudaiya  raajyam  balaththoadea  varuvathaik  kaa'numun,  mara'naththai  rusipaarppathillaiyen'ru,  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  9:1)

ஆறுநாளைக்குப்  பின்பு,  இயேசு  பேதுருவையும்  யாக்கோபையும்  யோவானையும்  அழைத்து,  உயர்ந்த  மலையின்மேல்  அவர்களைத்  தனியே  கூட்டிக்கொண்டுபோய்,  அவர்களுக்கு  முன்பாக  மறுரூபமானார்.  (மாற்கு  9:2)

aa'runaa'laikkup  pinbu,  iyeasu  peathuruvaiyum  yaakkoabaiyum  yoavaanaiyum  azhaiththu,  uyarntha  malaiyinmeal  avarga'laith  thaniyea  koottikko'ndupoay,  avarga'lukku  munbaaga  ma'ruroobamaanaar.  (maa’rku  9:2)

அவருடைய  வஸ்திரம்  உறைந்த  மழையைப்போல்  பூமியிலே  எந்த  வண்ணானும்  வெளுக்கக்கூடாத  வெண்மையாய்ப்  பிரகாசித்தது.  (மாற்கு  9:3)

avarudaiya  vasthiram  u’raintha  mazhaiyaippoal  boomiyilea  entha  va'n'naanum  ve'lukkakkoodaatha  ve'nmaiyaayp  piragaasiththathu.  (maa’rku  9:3)

அப்பொழுது  மோசேயும்  எலியாவும்  இயேசுவுடனே  பேசுகிறவர்களாக  அவர்களுக்குக்  காணப்பட்டார்கள்.  (மாற்கு  9:4)

appozhuthu  moaseayum  eliyaavum  iyeasuvudanea  peasugi’ravarga'laaga  avarga'lukkuk  kaa'nappattaarga'l.  (maa’rku  9:4)

அப்பொழுது  பேதுரு  இயேசுவை  நோக்கி:  ரபீ,  நாம்  இங்கே  இருக்கிறது  நல்லது;  உமக்கு  ஒரு  கூடாரமும்,  மோசேக்கு  ஒரு  கூடாரமும்,  எலியாவுக்கு  ஒரு  கூடாரமுமாக,  மூன்று  கூடாரங்களைப்  போடுவோம்  என்றான்.  (மாற்கு  9:5)

appozhuthu  peathuru  iyeasuvai  noakki:  rabee,  naam  inggea  irukki’rathu  nallathu;  umakku  oru  koodaaramum,  moaseakku  oru  koodaaramum,  eliyaavukku  oru  koodaaramumaaga,  moon'ru  koodaarangga'laip  poaduvoam  en’raan.  (maa’rku  9:5)

அவர்கள்  மிகவும்  பயந்திருந்தபடியால்,  தான்  பேசுகிறது  இன்னதென்று  அறியாமல்  இப்படிச்  சொன்னான்.  (மாற்கு  9:6)

avarga'l  migavum  bayanthirunthapadiyaal,  thaan  peasugi’rathu  innathen'ru  a’riyaamal  ippadich  sonnaan.  (maa’rku  9:6)

அப்பொழுது,  ஒரு  மேகம்  அவர்கள்மேல்  நிழலிட்டது:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவருக்குச்  செவிகொடுங்கள்  என்று  அந்த  மேகத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  (மாற்கு  9:7)

appozhuthu,  oru  meagam  avarga'lmeal  nizhalittathu:  ivar  ennudaiya  neasakumaaran,  ivarukkuch  sevikodungga'l  en'ru  antha  meagaththilirunthu  oru  saththam  u'ndaayit’ru.  (maa’rku  9:7)

உடனே  அவர்கள்  சுற்றிலும்  பார்த்தபோது,  இயேசு  ஒருவரைத்தவிர  வேறொருவரையும்  காணவில்லை.  (மாற்கு  9:8)

udanea  avarga'l  sut’rilum  paarththapoathu,  iyeasu  oruvaraiththavira  vea'roruvaraiyum  kaa'navillai.  (maa’rku  9:8)

அவர்கள்  மலையிலிருந்து  இறங்குகிறபோது,  அவர்  அவர்களை  நோக்கி:  மனுஷகுமாரன்  மரித்தோரிலிருந்து  எழுந்திருக்கும்வரைக்கும்,  நீங்கள்  கண்டவைகளை  ஒருவருக்கும்  சொல்லவேண்டாம்  என்று  கட்டளையிட்டார்.  (மாற்கு  9:9)

avarga'l  malaiyilirunthu  i’ranggugi’rapoathu,  avar  avarga'lai  noakki:  manushakumaaran  mariththoarilirunthu  ezhunthirukkumvaraikkum,  neengga'l  ka'ndavaiga'lai  oruvarukkum  sollavea'ndaam  en'ru  katta'laiyittaar.  (maa’rku  9:9)

மரித்தோரிலிருந்து  எழுந்திருப்பது  என்னவென்று  அவர்கள்  ஒருவரிடத்தில்  ஒருவர்  விசாரித்து,  அந்த  வார்த்தையைத்  தங்களுக்குள்ளே  அடக்கிக்கொண்டு:  (மாற்கு  9:10)

mariththoarilirunthu  ezhunthiruppathu  ennaven'ru  avarga'l  oruvaridaththil  oruvar  visaariththu,  antha  vaarththaiyaith  thangga'lukku'l'lea  adakkikko'ndu:  (maa’rku  9:10)

எலியா  முந்தி  வரவேண்டுமென்று  வேதபாரகர்  சொல்லுகிறார்களே,  அதெப்படியென்று  அவரிடத்தில்  கேட்டார்கள்.  (மாற்கு  9:11)

eliyaa  munthi  varavea'ndumen'ru  veathapaaragar  sollugi’raarga'lea,  atheppadiyen'ru  avaridaththil  keattaarga'l.  (maa’rku  9:11)

அவர்  பிரதியுத்தரமாக:  எலியா  முந்திவந்து  எல்லாவற்றையும்  சீர்ப்படுத்துவது  மெய்தான்;  அல்லாமலும்,  மனுஷகுமாரன்  பல  பாடுகள்பட்டு,  அவமதிக்கப்படுவாரென்று,  அவரைக்குறித்து  எழுதியிருக்கிறதே  அது  எப்படி  என்றார்.  (மாற்கு  9:12)

avar  pirathiyuththaramaaga:  eliyaa  munthivanthu  ellaavat’raiyum  seerppaduththuvathu  meythaan;  allaamalum,  manushakumaaran  pala  paaduga'lpattu,  avamathikkappaduvaaren'ru,  avaraikku’riththu  ezhuthiyirukki’rathea  athu  eppadi  en’raar.  (maa’rku  9:12)

ஆனாலும்  எலியா  வந்தாயிற்று,  அவனைக்குறித்து  எழுதியிருக்கிற  பிரகாரம்  தங்களுக்கு  இஷ்டமானபடி  அவனுக்குச்  செய்தார்களென்று,  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  9:13)

aanaalum  eliyaa  vanthaayit’ru,  avanaikku’riththu  ezhuthiyirukki’ra  piragaaram  thangga'lukku  ishdamaanapadi  avanukkuch  seythaarga'len'ru,  ungga'lukkuch  sollugi'rean  en’raar.  (maa’rku  9:13)

பின்பு  அவர்  சீஷரிடத்தில்  வந்தபோது,  அவர்களைச்  சுற்றித்  திரளான  ஜனங்கள்  நிற்கிறதையும்,  அவர்களோடே  வேதபாரகர்  தர்க்கிக்கிறதையும்  கண்டார்.  (மாற்கு  9:14)

pinbu  avar  seesharidaththil  vanthapoathu,  avarga'laich  sut’rith  thira'laana  janangga'l  ni’rki’rathaiyum,  avarga'loadea  veathapaaragar  tharkkikki’rathaiyum  ka'ndaar.  (maa’rku  9:14)

ஜனங்களெல்லாரும்  அவரைக்  கண்டவுடனே  மிகவும்  ஆச்சரியப்பட்டு,  ஓடிவந்து,  அவருக்கு  வந்தனஞ்செய்தார்கள்.  (மாற்கு  9:15)

janangga'lellaarum  avaraik  ka'ndavudanea  migavum  aachchariyappattu,  oadivanthu,  avarukku  vanthanagnseythaarga'l.  (maa’rku  9:15)

அவர்  வேதபாரகரை  நோக்கி:  நீங்கள்  இவர்களோடே  என்னத்தைக்  குறித்துத்  தர்க்கம்பண்ணுகிறீர்கள்  என்று  கேட்டார்.  (மாற்கு  9:16)

avar  veathapaaragarai  noakki:  neengga'l  ivarga'loadea  ennaththaik  ku’riththuth  tharkkampa'n'nugi'reerga'l  en'ru  keattaar.  (maa’rku  9:16)

அப்பொழுது  ஜனக்கூட்டத்தில்  ஒருவன்  அவரை  நோக்கி:  போதகரே,  ஊமையான  ஒரு  ஆவி  பிடித்த  என்  மகனை  உம்மிடத்தில்  கொண்டுவந்தேன்.  (மாற்கு  9:17)

appozhuthu  janakkoottaththil  oruvan  avarai  noakki:  poathagarea,  oomaiyaana  oru  aavi  pidiththa  en  maganai  ummidaththil  ko'nduvanthean.  (maa’rku  9:17)

அது  அவனை  எங்கே  பிடித்தாலும்  அங்கே  அவனை  அலைக்கழிக்கிறது;  அப்பொழுது  அவன்  நுரைதள்ளி,  பல்லைக்கடித்து,  சோர்ந்துபோகிறான்.  அதைத்  துரத்திவிடும்படி  உம்முடைய  சீஷரிடத்தில்  கேட்டேன்;  அவர்களால்  கூடாமற்போயிற்று  என்றான்.  (மாற்கு  9:18)

athu  avanai  enggea  pidiththaalum  anggea  avanai  alaikkazhikki’rathu;  appozhuthu  avan  nuraitha'l'li,  pallaikkadiththu,  soarnthupoagi’raan.  athaith  thuraththividumpadi  ummudaiya  seesharidaththil  keattean;  avarga'laal  koodaama’rpoayit’ru  en’raan.  (maa’rku  9:18)

அவர்  பிரதியுத்தரமாக:  விசுவாசமில்லாத  சந்ததியே,  எதுவரைக்கும்  நான்  உங்களோடு  இருப்பேன்?  எதுவரைக்கும்  உங்களிடத்தில்  பொறுமையாய்  இருப்பேன்?  அவனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றார்.  (மாற்கு  9:19)

avar  pirathiyuththaramaaga:  visuvaasamillaatha  santhathiyea,  ethuvaraikkum  naan  ungga'loadu  iruppean?  ethuvaraikkum  ungga'lidaththil  po’rumaiyaay  iruppean?  avanai  ennidaththil  ko'nduvaarungga'l  en’raar.  (maa’rku  9:19)

அவனை  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  அவரைக்  கண்டவுடனே,  அந்த  ஆவி  அவனை  அலைக்கழித்தது;  அவன்  தரையிலே  விழுந்து,  நுரைதள்ளிப்  புரண்டான்.  (மாற்கு  9:20)

avanai  avaridaththil  ko'nduvanthaarga'l.  avaraik  ka'ndavudanea,  antha  aavi  avanai  alaikkazhiththathu;  avan  tharaiyilea  vizhunthu,  nuraitha'l'lip  pura'ndaan.  (maa’rku  9:20)

அவர்  அவனுடைய  தகப்பனை  நோக்கி:  இது  இவனுக்கு  உண்டாகி  எவ்வளவு  காலமாயிற்று  என்று  கேட்டார்.  அதற்கு  அவன்:  சிறுவயதுமுதற்கொண்டே  உண்டாயிருக்கிறது;  (மாற்கு  9:21)

avar  avanudaiya  thagappanai  noakki:  ithu  ivanukku  u'ndaagi  evva'lavu  kaalamaayit’ru  en’ru  keattaar.  atha’rku  avan:  si’ruvayathumutha’rko'ndea  u'ndaayirukki’rathu;  (maa’rku  9:21)

இவனைக்  கொல்லும்படிக்கு  அது  அநேகந்தரம்  தீயிலும்  தண்ணீரிலும்  தள்ளிற்று.  நீர்  ஏதாகிலும்  செய்யக்கூடுமானால்,  எங்கள்மேல்  மனதிரங்கி,  எங்களுக்கு  உதவிசெய்யவேண்டும்  என்றான்.  (மாற்கு  9:22)

ivanaik  kollumpadikku  athu  aneagantharam  theeyilum  tha'n'neerilum  tha'l'lit’ru.  neer  eathaagilum  seyyakkoodumaanaal,  engga'lmeal  manathiranggi,  engga'lukku  uthaviseyyavea'ndum  en’raan.  (maa’rku  9:22)

இயேசு  அவனை  நோக்கி:  நீ  விசுவாசிக்கக்கூடுமானால்  ஆகும்,  விசுவாசிக்கிறவனுக்கு  எல்லாம்  கூடும்  என்றார்.  (மாற்கு  9:23)

iyeasu  avanai  noakki:  nee  visuvaasikkakkoodumaanaal  aagum,  visuvaasikki’ravanukku  ellaam  koodum  en’raar.  (maa’rku  9:23)

உடனே  பிள்ளையின்  தகப்பன்:  விசுவாசிக்கிறேன்  ஆண்டவரே,  என்  அவிசுவாசம்  நீங்கும்படி  உதவிசெய்யும்  என்று  கண்ணீரோடே  சத்தமிட்டுச்  சொன்னான்.  (மாற்கு  9:24)

udanea  pi'l'laiyin  thagappan:  visuvaasikki'rean  aa'ndavarea,  en  avisuvaasam  neenggumpadi  uthaviseyyum  en’ru  ka'n'neeroadea  saththamittuch  sonnaan.  (maa’rku  9:24)

அப்பொழுது  ஜனங்கள்  கூட்டமாய்  ஓடிவருகிறதை  இயேசு  கண்டு,  அந்த  அசுத்த  ஆவியை  நோக்கி:  ஊமையும்  செவிடுமான  ஆவியே,  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்போ,  இனி  இவனுக்குள்  போகாதே  என்று  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்  என்று  அதை  அதட்டினார்.  (மாற்கு  9:25)

appozhuthu  janangga'l  koottamaay  oadivarugi’rathai  iyeasu  ka'ndu,  antha  asuththa  aaviyai  noakki:  oomaiyum  sevidumaana  aaviyea,  ivanai  vittup  pu’rappattuppoa,  ini  ivanukku'l  poagaathea  en’ru  naan  unakkuk  katta'laiyidugi'rean  en’ru  athai  athattinaar.  (maa’rku  9:25)

அப்பொழுது  அது  சத்தமிட்டு,  அவனை  மிகவும்  அலைக்கழித்துப்  புறப்பட்டுப்போயிற்று.  அவன்  செத்துப்போனான்  என்று  அநேகர்  சொல்லத்தக்கதாகச்  செத்தவன்போல்  கிடந்தான்.  (மாற்கு  9:26)

appozhuthu  athu  saththamittu,  avanai  migavum  alaikkazhiththup  pu’rappattuppoayit’ru.  avan  seththuppoanaan  en’ru  aneagar  sollaththakkathaagach  seththavanpoal  kidanthaan.  (maa’rku  9:26)

இயேசு  அவன்  கையைப்பிடித்து,  அவனைத்  தூக்கினார்;  உடனே  அவன்  எழுந்திருந்தான்.  (மாற்கு  9:27)

iyeasu  avan  kaiyaippidiththu,  avanaith  thookkinaar;  udanea  avan  ezhunthirunthaan.  (maa’rku  9:27)

வீட்டில்  அவர்  பிரவேசித்தபொழுது,  அவருடைய  சீஷர்கள்:  அதைத்  துரத்திவிட  எங்களால்  ஏன்  கூடாமற்போயிற்று  என்று  அவரிடத்தில்  தனித்துக்  கேட்டார்கள்.  (மாற்கு  9:28)

veettil  avar  piraveasiththapozhuthu,  avarudaiya  seesharga'l:  athaith  thuraththivida  engga'laal  ean  koodaama’rpoayit’ru  en’ru  avaridaththil  thaniththuk  keattaarga'l.  (maa’rku  9:28)

அதற்கு  அவர்:  இவ்வகைப்  பிசாசு  ஜெபத்தினாலும்  உபவாசத்தினாலுமேயன்றி  மற்றெவ்விதத்தினாலும்  புறப்பட்டுப்போகாது  என்றார்.  (மாற்கு  9:29)

atha’rku  avar:  ivvagaip  pisaasu  jebaththinaalum  ubavaasaththinaalumeayan’ri  mat’revvithaththinaalum  pu’rappattuppoagaathu  en’raar.  (maa’rku  9:29)

பின்பு  அவ்விடம்  விட்டுப்  புறப்பட்டு,  கலிலேயாவைக்  கடந்துபோனார்கள்;  அதை  ஒருவரும்  அறியாதிருக்க  வேண்டுமென்று  விரும்பினார்.  (மாற்கு  9:30)

pinbu  avvidam  vittup  pu’rappattu,  kalileayaavaik  kadanthupoanaarga'l;  athai  oruvarum  a’riyaathirukka  vea'ndumen’ru  virumbinaar.  (maa’rku  9:30)

ஏனெனில்,  மனுஷகுமாரன்  மனுஷர்  கைகளில்  ஒப்புக்கொடுக்கப்படுவார்  என்றும்,  அவர்கள்  அவரைக்  கொன்றுபோடுவார்கள்  என்றும்;  கொல்லப்பட்டு,  மூன்றாம்  நாளிலே  உயிர்த்தெழுந்திருப்பார்  என்றும்  அவர்  தம்முடைய  சீஷர்களுக்குப்  போதகம்பண்ணிச்  சொல்லியிருந்தார்.  (மாற்கு  9:31)

eanenil,  manushakumaaran  manushar  kaiga'lil  oppukkodukkappaduvaar  en’rum,  avarga'l  avaraik  kon’rupoaduvaarga'l  en’rum;  kollappattu,  moon’raam  naa'lilea  uyirththezhunthiruppaar  en’rum  avar  thammudaiya  seesharga'lukkup  poathagampa'n'nich  solliyirunthaar.  (maa’rku  9:31)

அவர்களோ  அந்த  வார்த்தையை  அறிந்துகொள்ளவில்லை,  அதைக்குறித்து  அவரிடத்தில்  கேட்கவும்  பயந்தார்கள்.  (மாற்கு  9:32)

avarga'loa  antha  vaarththaiyai  a’rinthuko'l'lavillai,  athaikku’riththu  avaridaththil  keadkavum  bayanthaarga'l.  (maa’rku  9:32)

அவர்  கப்பர்நகூமுக்கு  வந்து,  வீட்டிலே  இருக்கும்போது,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  வழியிலே  எதைக்குறித்து  உங்களுக்குள்ளே  தர்க்கம்பண்ணினீர்கள்  என்று  கேட்டார்.  (மாற்கு  9:33)

avar  kapparnahoomukku  vanthu,  veettilea  irukkumpoathu,  avarga'lai  noakki:  neengga'l  vazhiyilea  ethaikku’riththu  ungga'lukku'l'lea  tharkkampa'n'nineerga'l  en’ru  keattaar.  (maa’rku  9:33)

அதற்கு  அவர்கள்  பேசாமல்  இருந்தார்கள்;  ஏனெனில்  அவர்கள்  தங்களுக்குள்ளே  எவன்  பெரியவன்  என்று  வழியில்  தர்க்கம்பண்ணினார்கள்.  (மாற்கு  9:34)

atha’rku  avarga'l  peasaamal  irunthaarga'l;  eanenil  avarga'l  thangga'lukku'l'lea  evan  periyavan  en’ru  vazhiyil  tharkkampa'n'ninaarga'l.  (maa’rku  9:34)

அப்பொழுது  அவர்  உட்கார்ந்து,  பன்னிருவரையும்  அழைத்து:  எவனாகிலும்  முதல்வனாயிருக்க  விரும்பினால்  அவன்  எல்லாருக்கும்  கடையானவனும்,  எல்லாருக்கும்  ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன்  என்று  சொல்லி;  (மாற்கு  9:35)

appozhuthu  avar  udkaarnthu,  panniruvaraiyum  azhaiththu:  evanaagilum  muthalvanaayirukka  virumbinaal  avan  ellaarukkum  kadaiyaanavanum,  ellaarukkum  oozhiyakkaaranumaayirukkakkadavan  en’ru  solli;  (maa’rku  9:35)

ஒரு  சிறு  பிள்ளையை  எடுத்து,  அதை  அவர்கள்  நடுவிலே  நிறுத்தி,  அதை  அணைத்துக்கொண்டு:  (மாற்கு  9:36)

oru  si’ru  pi'l'laiyai  eduththu,  athai  avarga'l  naduvilea  ni’ruththi,  athai  a'naiththukko'ndu:  (maa’rku  9:36)

இப்படிப்பட்ட  சிறு  பிள்ளைகளில்  ஒன்றை  என்  நாமத்தினாலே  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறான்;  என்னை  ஏற்றுக்கொள்ளுகிறவன்  என்னை  அல்ல,  என்னை  அனுப்பினவரை  ஏற்றுக்கொள்ளுகிறான்  என்றார்.  (மாற்கு  9:37)

ippadippatta  si’ru  pi'l'laiga'lil  on’rai  en  naamaththinaalea  eat’rukko'l'lugi’ravan  ennai  eat’rukko'l'lugi’raan;  ennai  eat’rukko'l'lugi’ravan  ennai  alla,  ennai  anuppinavarai  eat’rukko'l'lugi’raan  en’raar.  (maa’rku  9:37)

அப்பொழுது  யோவான்  அவரை  நோக்கி:  போதகரே,  நம்மைப்  பின்பற்றாதவன்  ஒருவன்  உமது  நாமத்தினாலே  பிசாசுகளைத்  துரத்துகிறதைக்  கண்டோம்;  அவன்  நம்மைப்  பின்பற்றாதவனானதால்,  அவனைத்  தடுத்தோம்  என்றான்.  (மாற்கு  9:38)

appozhuthu  yoavaan  avarai  noakki:  poathagarea,  nammaip  pinpat’raathavan  oruvan  umathu  naamaththinaalea  pisaasuga'laith  thuraththugi’rathaik  ka'ndoam;  avan  nammaip  pinpat’raathavanaanathaal,  avanaith  thaduththoam  en’raan.  (maa’rku  9:38)

அதற்கு  இயேசு:  அவனைத்  தடுக்கவேண்டாம்;  என்  நாமத்தினாலே  அற்புதஞ்  செய்கிறவன்  எளிதாய்  என்னைக்குறித்துத்  தீங்கு  சொல்லமாட்டான்.  (மாற்கு  9:39)

atha’rku  iyeasu:  avanaith  thadukkavea'ndaam;  en  naamaththinaalea  a’rputhagn  seygi’ravan  e'lithaay  ennaikku’riththuth  theenggu  sollamaattaan.  (maa’rku  9:39)

நமக்கு  விரோதமாயிராதவன்  நமது  பட்சத்திலிருக்கிறான்.  (மாற்கு  9:40)

namakku  viroathamaayiraathavan  namathu  padchaththilirukki’raan.  (maa’rku  9:40)

நீங்கள்  கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே,  என்  நாமத்தினிமித்தம்  உங்களுக்கு  ஒரு  கலசம்  தண்ணீர்  குடிக்கக்  கொடுக்கிறவன்  தன்  பலனை  அடையாமற்போவதில்லை  என்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மாற்கு  9:41)

neengga'l  ki’risthuvinudaiyavarga'laayirukki’rapadiyinaalea,  en  naamaththinimiththam  ungga'lukku  oru  kalasam  tha'n'neer  kudikkak  kodukki’ravan  than  palanai  adaiyaama’rpoavathillai  en’ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi’rean.  (maa’rku  9:41)

என்னிடத்தில்  விசுவாசமாயிருக்கிற  இந்தச்  சிறியரில்  ஒருவனுக்கு  இடறல்  உண்டாக்குகிறவன்  எவனோ,  அவனுடைய  கழுத்தில்  ஏந்திரக்கல்லைக்  கட்டி,  சமுத்திரத்தில்  அவனைத்  தள்ளிப்போடுகிறது  அவனுக்கு  நலமாயிருக்கும்.  (மாற்கு  9:42)

ennidaththil  visuvaasamaayirukki’ra  inthach  si’riyaril  oruvanukku  ida’ral  u'ndaakkugi’ravan  evanoa,  avanudaiya  kazhuththil  eanthirakkallaik  katti,  samuththiraththil  avanaith  tha'l'lippoadugi’rathu  avanukku  nalamaayirukkum.  (maa’rku  9:42)

உன்  கை  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைத்  தறித்துப்போடு;  நீ  இரண்டு  கையுடையவனாய்  அவியாத  அக்கினியுள்ள  நரகத்திலே  போவதைப்பார்க்கிலும்,  ஊனனாய்  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  (மாற்கு  9:43)

un  kai  unakku  ida’ral  u'ndaakkinaal,  athaith  tha’riththuppoadu;  nee  ira'ndu  kaiyudaiyavanaay  aviyaatha  akkiniyu'l'la  naragaththilea  poavathaippaarkkilum,  oonanaay  jeevanukku'l  piraveasippathu  unakku  nalamaayirukkum.  (maa’rku  9:43)

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  (மாற்கு  9:44)

anggea  avarga'l  puzhu  saavaamalum  akkini  aviyaamalumirukkum.  (maa’rku  9:44)

உன்  கால்  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்  அதைத்  தறித்துப்போடு;  நீ  இரண்டு  காலுடையவனாய்  அவியாத  அக்கினியுள்ள  நரகத்திலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  சப்பாணியாய்  ஜீவனுக்குள்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  (மாற்கு  9:45)

un  kaal  unakku  ida’ral  u'ndaakkinaal  athaith  tha’riththuppoadu;  nee  ira'ndu  kaaludaiyavanaay  aviyaatha  akkiniyu'l'la  naragaththilea  tha'l'lappaduvathaippaarkkilum,  sappaa'niyaay  jeevanukku'l  piraveasippathu  unakku  nalamaayirukkum.  (maa’rku  9:45)

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  (மாற்கு  9:46)

anggea  avarga'l  puzhu  saavaamalum  akkini  aviyaamalumirukkum.  (maa’rku  9:46)

உன்  கண்  உனக்கு  இடறல்  உண்டாக்கினால்,  அதைப்  பிடுங்கிப்போடு;  நீ  இரண்டு  கண்ணுடையவனாய்  நரக  அக்கினியிலே  தள்ளப்படுவதைப்பார்க்கிலும்,  ஒற்றைக்  கண்ணனாய்  தேவனுடைய  ராஜ்யத்தில்  பிரவேசிப்பது  உனக்கு  நலமாயிருக்கும்.  (மாற்கு  9:47)

un  ka'n  unakku  ida’ral  u'ndaakkinaal,  athaip  pidunggippoadu;  nee  ira'ndu  ka'n'nudaiyavanaay  naraga  akkiniyilea  tha'l'lappaduvathaippaarkkilum,  ot’raik  ka'n'nanaay  theavanudaiya  raajyaththil  piraveasippathu  unakku  nalamaayirukkum.  (maa’rku  9:47)

அங்கே  அவர்கள்  புழு  சாவாமலும்  அக்கினி  அவியாமலுமிருக்கும்.  (மாற்கு  9:48)

anggea  avarga'l  puzhu  saavaamalum  akkini  aviyaamalumirukkum.  (maa’rku  9:48)

எந்தப்  பலியும்  உப்பினால்  உப்பிடப்படுவதுபோல,  எந்த  மனுஷனும்  அக்கினியினால்  உப்பிடப்படுவான்.  (மாற்கு  9:49)

enthap  baliyum  uppinaal  uppidappaduvathupoala,  entha  manushanum  akkiniyinaal  uppidappaduvaan.  (maa’rku  9:49)

உப்பு  நல்லதுதான்,  உப்பு  சாரமற்றுப்போனால்,  அதற்கு  எதினாலே  சாரமுண்டாக்குவீர்கள்?  உங்களுக்குள்ளே  உப்புடையவர்களாயிருங்கள்,  ஒருவரோடொருவர்  சமாதானமுள்ளவர்களாயும்  இருங்கள்  என்றார்.  (மாற்கு  9:50)

uppu  nallathuthaan,  uppu  saaramat’ruppoanaal,  atha’rku  ethinaalea  saaramu'ndaakkuveerga'l?  ungga'lukku'l'lea  uppudaiyavarga'laayirungga'l,  oruvaroadoruvar  samaathaanamu'l'lavarga'laayum  irungga'l  en’raar.  (maa’rku  9:50)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!