Saturday, April 30, 2016

Maa’rku 8 | மாற்கு 8 | Mark 8


அந்த  நாட்களிலே  திரளான  ஜனங்கள்  கூடிவந்திருக்கையில்,  அவர்கள்  சாப்பிடுகிறதற்கு  ஒன்றுமில்லாதபோது,  இயேசு  தம்முடைய  சீஷரை  அழைத்து:  (மாற்கு  8:1)

antha  naadka'lilea  thira'laana  janangga'l  koodivanthirukkaiyil,  avarga'l  saappidugi'ratha’rku  on'rumillaathapoathu,  iyeasu  thammudaiya  seesharai  azhaiththu:  (maa’rku  8:1)

ஜனங்களுக்காகப்  பரிதபிக்கிறேன்,  இவர்கள்  இப்பொழுது  என்னிடத்தில்  தங்கியிருந்த  மூன்றுநாளாய்ச்  சாப்பிட  ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்.  (மாற்கு  8:2)

janangga'lukkaagap  parithabikki'rean,  ivarga'l  ippozhuthu  ennidaththil  thanggiyiruntha  moon'runaa'laaych  saappida  on'rumillaathirukki'raarga'l.  (maa’rku  8:2)

இவர்களில்  சிலர்  தூரத்திலிருந்து  வந்தவர்களாகையால்,  நான்  இவர்களைப்  பட்டினியாய்  வீட்டிற்கு  அனுப்பிவிட்டால்  வழியில்  சோர்ந்துபோவார்களே  என்றார்.  (மாற்கு  8:3)

ivarga'lil  silar  thooraththilirunthu  vanthavarga'laagaiyaal,  naan  ivarga'laip  pattiniyaay  veetti’rku  anuppivittaal  vazhiyil  soarnthupoavaarga'lea  en'raar.  (maa’rku  8:3)

அதற்கு  அவருடைய  சீஷர்கள்:  இந்த  வனாந்தரத்திலே  ஒருவன்  எங்கேயிருந்து  அப்பங்களைக்  கொண்டுவந்து  இத்தனை  பேர்களைத்  திருப்தியாக்கக்கூடும்  என்றார்கள்.  (மாற்கு  8:4)

atha’rku  avarudaiya  seesharga'l:  intha  vanaantharaththilea  oruvan  enggeayirunthu  appangga'laik  ko'nduvanthu  iththanai  pearga'laith  thirupthiyaakkakkoodum  en'raarga'l.  (maa’rku  8:4)

அதற்கு  அவர்:  உங்களிடத்தில்  எத்தனை  அப்பங்கள்  உண்டு  என்று  கேட்டார்.  அவர்கள்:  ஏழு  அப்பங்கள்  உண்டு  என்றார்கள்.  (மாற்கு  8:5)

atha’rku  avar:  ungga'lidaththil  eththanai  appangga'l  u'ndu  en'ru  keattaar.  avarga'l:  eazhu  appangga'l  u'ndu  en'raarga'l.  (maa’rku  8:5)

அப்பொழுது  அவர்  ஜனங்களைத்  தரையிலே  பந்தியிருக்கக்  கட்டளையிட்டு,  அந்த  ஏழு  அப்பங்களையும்  எடுத்து,  ஸ்தோத்திரம்  பண்ணி,  பிட்டு,  அவர்களுக்குப்  பரிமாறும்படி  சீஷர்களிடத்தில்  கொடுத்தார்;  அவர்கள்  ஜனங்களுக்குப்  பரிமாறினார்கள்.  (மாற்கு  8:6)

appozhuthu  avar  janangga'laith  tharaiyilea  panthiyirukkak  katta'laiyittu,  antha  eazhu  appangga'laiyum  eduththu,  sthoaththiram  pa'n'ni,  pittu,  avarga'lukkup  parimaa'rumpadi  seesharga'lidaththil  koduththaar;  avarga'l  janangga'lukkup  parimaa'rinaarga'l.  (maa’rku  8:6)

சில  சிறுமீன்களும்  அவர்களிடத்தில்  இருந்தது;  அவர்  அவைகளையும்  ஆசீர்வதித்து  அவர்களுக்குப்  பரிமாறும்படி  சொன்னார்.  (மாற்கு  8:7)

sila  si'rumeenga'lum  avarga'lidaththil  irunthathu;  avar  avaiga'laiyum  aaseervathiththu  avarga'lukkup  parimaa'rumpadi  sonnaar.  (maa’rku  8:7)

அவர்கள்  சாப்பிட்டுத்  திருப்தியடைந்தார்கள்;  மீதியான  துணிக்கைகளை  ஏழு  கூடைநிறைய  எடுத்தார்கள்.  (மாற்கு  8:8)

avarga'l  saappittuth  thirupthiyadainthaarga'l;  meethiyaana  thu'nikkaiga'lai  eazhu  koodaini'raiya  eduththaarga'l.  (maa’rku  8:8)

சாப்பிட்டவர்கள்  ஏறக்குறைய  நாலாயிரம்பேராயிருந்தார்கள்.  பின்பு  அவர்  அவர்களை  அனுப்பிவிட்டார்.  (மாற்கு  8:9)

saappittavarga'l  ea'rakku'raiya  naalaayirampearaayirunthaarga'l.  pinbu  avar  avarga'lai  anuppivittaar.  (maa’rku  8:9)

உடனே  அவர்  தம்முடைய  சீஷரோடேகூடப்  படவில்  ஏறி,  தல்மனூத்தாவின்  எல்லைகளில்  வந்தார்.  (மாற்கு  8:10)

udanea  avar  thammudaiya  seesharoadeakoodap  padavil  ea'ri,  thalmanooththaavin  ellaiga'lil  vanthaar.  (maa’rku  8:10)

அப்பொழுது  பரிசேயர்  வந்து  அவரோடே  தர்க்கிக்கத்தொடங்கி,  அவரைச்  சோதிக்கும்படி,  வானத்திலிருந்து  ஒரு  அடையாளத்தைக்  காண்பிக்கவேண்டும்  என்று  கேட்டார்கள்.  (மாற்கு  8:11)

appozhuthu  pariseayar  vanthu  avaroadea  tharkkikkaththodanggi,  avaraich  soathikkumpadi,  vaanaththilirunthu  oru  adaiyaa'laththaik  kaa'nbikkavea'ndum  en'ru  keattaarga'l.  (maa’rku  8:11)

அவர்  தம்முடைய  ஆவியில்  பெருமூச்சுவிட்டு:  இந்தச்  சந்ததியார்  அடையாளம்  தேடுகிறதென்ன?  இந்தச்  சந்ததியாருக்கு  ஒரு  அடையாளமும்  கொடுக்கப்படுவதில்லையென்று  மெய்யாகவே  உங்களுக்குச்  சொல்லுகிறேன்  என்று  சொல்லி,  (மாற்கு  8:12)

avar  thammudaiya  aaviyil  perumoochchuvittu:  inthach  santhathiyaar  adaiyaa'lam  theadugi'rathenna?  inthach  santhathiyaarukku  oru  adaiyaa'lamum  kodukkappaduvathillaiyen'ru  meyyaagavea  ungga'lukkuch  sollugi'rean  en'ru  solli,  (maa’rku  8:12)

அவர்களை  விட்டு  மறுபடியும்  படவில்  ஏறி,  அக்கரைக்குப்  போனார்.  (மாற்கு  8:13)

avarga'lai  vittu  ma'rupadiyum  padavil  ea'ri,  akkaraikkup  poanaar.  (maa’rku  8:13)

சீஷர்கள்  அப்பங்களைக்  கொண்டுவர  மறந்துபோனார்கள்;  படவிலே  அவர்களிடத்தில்  ஒரு  அப்பம்  மாத்திரம்  இருந்தது.  (மாற்கு  8:14)

seesharga'l  appangga'laik  ko'nduvara  ma'ranthupoanaarga'l;  padavilea  avarga'lidaththil  oru  appam  maaththiram  irunthathu.  (maa’rku  8:14)

அவர்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  பரிசேயருடைய  புளித்தமாவைக்குறித்தும்  ஏரோதின்  புளித்தமாவைக்குறித்தும்  எச்சரிக்கையாயிருங்கள்  என்று  கற்பித்தார்.  (மாற்கு  8:15)

avar  avarga'lai  noakki:  neengga'l  pariseayarudaiya  pu'liththamaavaikku'riththum  earoathin  pu'liththamaavaikku'riththum  echcharikkaiyaayirungga'l  en'ru  ka’rpiththaar.  (maa’rku  8:15)

அதற்கு  அவர்கள்:  நம்மிடத்தில்  அப்பங்கள்  இல்லாதபடியால்  இப்படிச்  சொல்லுகிறார்  என்று  தங்களுக்குள்ளே  யோசனைபண்ணிக்கொண்டார்கள்.  (மாற்கு  8:16)

atha’rku  avarga'l:  nammidaththil  appangga'l  illaathapadiyaal  ippadich  sollugi'raar  en'ru  thangga'lukku'l'lea  yoasanaipa'n'nikko'ndaarga'l.  (maa’rku  8:16)

இயேசு  அதை  அறிந்து,  அவர்களை  நோக்கி:  உங்களிடத்தில்  அப்பங்கள்  இல்லாதபடியினால்  நீங்கள்  யோசனைபண்ணுகிறதென்ன?  இன்னும்  சிந்தியாமலும்  உணராமலும்  இருக்கிறீர்களா?  இன்னும்  உங்கள்  இருதயம்  கடினமாயிருக்கிறதா?  (மாற்கு  8:17)

iyeasu  athai  a'rinthu,  avarga'lai  noakki:  ungga'lidaththil  appangga'l  illaathapadiyinaal  neengga'l  yoasanaipa'n'nugi'rathenna?  innum  sinthiyaamalum  u'naraamalum  irukki'reerga'laa?  innum  ungga'l  iruthayam  kadinamaayirukki'rathaa?  (maa’rku  8:17)

உங்களுக்குக்  கண்களிருந்தும்  காணாதிருக்கிறீர்களா?  காதுகளிருந்தும்  கேளாதிருக்கிறீர்களா?  நினைவுகூராமலுமிருக்கிறீர்களா?  (மாற்கு  8:18)

ungga'lukkuk  ka'nga'lirunthum  kaa'naathirukki'reerga'laa?  kaathuga'lirunthum  kea'laathirukki'reerga'laa?  ninaivukooraamalumirukki'reerga'laa?  (maa’rku  8:18)

நான்  ஐந்து  அப்பங்களை  ஐயாயிரம்  பேருக்குப்  பங்கிட்டபோது,  மீதியான  துணிக்கைகளை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்று  கேட்டார்.  பன்னிரண்டு  என்றார்கள்.  (மாற்கு  8:19)

naan  ainthu  appangga'lai  aiyaayiram  pearukkup  panggittapoathu,  meethiyaana  thu'nikkaiga'lai  eththanai  koodaini'raiya  eduththeerga'l  en'ru  keattaar.  pannira'ndu  en'raarga'l.  (maa’rku  8:19)

நான்  ஏழு  அப்பங்களை  நாலாயிரம்  பேருக்குப்  பங்கிட்டபோது,  மீதியான  துணிக்கைகளை  எத்தனை  கூடைநிறைய  எடுத்தீர்கள்  என்று  கேட்டார்.  ஏழு  என்றார்கள்.  (மாற்கு  8:20)

naan  eazhu  appangga'lai  naalaayiram  pearukkup  panggittapoathu,  meethiyaana  thu'nikkaiga'lai  eththanai  koodaini'raiya  eduththeerga'l  en'ru  keattaar.  eazhu  en'raarga'l.  (maa’rku  8:20)

அப்படியானால்,  நீங்கள்  உணராதிருக்கிறது  எப்படி  என்றார்.  (மாற்கு  8:21)

appadiyaanaal,  neengga'l  u'naraathirukki'rathu  eppadi  en'raar.  (maa’rku  8:21)

பின்பு  அவர்  பெத்சாயிதா  ஊருக்கு  வந்தார்;  அப்பொழுது  ஒரு  குருடனை  அவரிடத்தில்  கொண்டுவந்து,  அவனைத்  தொடும்படி  அவரை  வேண்டிக்கொண்டார்கள்.  (மாற்கு  8:22)

pinbu  avar  bethsaayithaa  oorukku  vanthaar;  appozhuthu  oru  kurudanai  avaridaththil  ko'nduvanthu,  avanaith  thodumpadi  avarai  vea'ndikko'ndaarga'l.  (maa’rku  8:22)

அவர்  குருடனுடைய  கையைப்  பிடித்து,  அவனைக்  கிராமத்துக்கு  வெளியே  அழைத்துக்கொண்டுபோய்,  அவன்  கண்களில்  உமிழ்ந்து,  அவன்மேல்  கைகளை  வைத்து:  எதையாகிலும்  காண்கிறாயா  என்று  கேட்டார்.  (மாற்கு  8:23)

avar  kurudanudaiya  kaiyaip  pidiththu,  avanaik  kiraamaththukku  ve'liyea  azhaiththukko'ndupoay,  avan  ka'nga'lil  umizhnthu,  avanmeal  kaiga'lai  vaiththu:  ethaiyaagilum  kaa'ngi'raayaa  en'ru  keattaar.  (maa’rku  8:23)

அவன்  ஏறிட்டுப்பார்த்து:  நடக்கிற  மனுஷரை  மரங்களைப்போலக்  காண்கிறேன்  என்றான்.  (மாற்கு  8:24)

avan  ea'rittuppaarththu:  nadakki'ra  manusharai  marangga'laippoalak  kaa'ngi'rean  en'raan.  (maa’rku  8:24)

பின்பு  அவர்  மறுபடியும்  அவன்  கண்களின்மேல்  கைகளை  வைத்து,  அவனை  ஏறிட்டுப்  பார்க்கும்படி  செய்தார்;  அப்பொழுது  அவன்  சொஸ்தமடைந்து,  யாவரையும்  தெளிவாய்க்  கண்டான்.  (மாற்கு  8:25)

pinbu  avar  ma'rupadiyum  avan  ka'nga'linmeal  kaiga'lai  vaiththu,  avanai  ea'rittup  paarkkumpadi  seythaar;  appozhuthu  avan  sosthamadainthu,  yaavaraiyum  the'livaayk  ka'ndaan.  (maa’rku  8:25)

பின்பு  அவர்  அவனை  நோக்கி:  நீ  கிராமத்தில்  பிரவேசியாமலும்,  கிராமத்தில்  இதை  ஒருவருக்கும்  சொல்லாமலும்  இரு  என்று  சொல்லி,  அவனை  வீட்டிற்கு  அனுப்பிவிட்டார்.  (மாற்கு  8:26)

pinbu  avar  avanai  noakki:  nee  kiraamaththil  piraveasiyaamalum,  kiraamaththil  ithai  oruvarukkum  sollaamalum  iru  en'ru  solli,  avanai  veetti’rku  anuppivittaar.  (maa’rku  8:26)

பின்பு,  இயேசுவும்  அவருடைய  சீஷர்களும்  புறப்பட்டு,  பிலிப்புச்  செசரியா  பட்டணத்தைச்  சேர்ந்த  கிராமங்களுக்குப்  போனார்கள்.  வழியிலே  அவர்  தம்முடைய  சீஷர்களை  நோக்கி:  ஜனங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறார்கள்  என்று  கேட்டார்.  (மாற்கு  8:27)

pinbu,  iyeasuvum  avarudaiya  seesharga'lum  pu'rappattu,  pilippuch  sesariyaa  patta'naththaich  searntha  kiraamangga'lukkup  poanaarga'l.  vazhiyilea  avar  thammudaiya  seesharga'lai  noakki:  janangga'l  ennai  yaar  en'ru  sollugi'raarga'l  en'ru  keattaar.  (maa’rku  8:27)

அதற்கு  அவர்கள்:  சிலர்  உம்மை  யோவான்ஸ்நானன்  என்றும்,  சிலர்  எலியா  என்றும்,  வேறு  சிலர்  தீர்க்கதரிசிகளில்  ஒருவர்  என்றும்  சொல்லுகிறார்கள்  என்றார்கள்.  (மாற்கு  8:28)

atha’rku  avarga'l:  silar  ummai  yoavaansnaanan  en'rum,  silar  eliyaa  en'rum,  vea'ru  silar  theerkkatharisiga'lil  oruvar  en'rum  sollugi'raarga'l  en'raarga'l.  (maa’rku  8:28)

அப்பொழுது  அவர்:  நீங்கள்  என்னை  யார்  என்று  சொல்லுகிறீர்கள்  என்று  கேட்டார்;  பேதுரு  பிரதியுத்தரமாக:  நீர்  கிறிஸ்து  என்றான்.  (மாற்கு  8:29)

appozhuthu  avar:  neengga'l  ennai  yaar  en'ru  sollugi'reerga'l  en'ru  keattaar;  peathuru  pirathiyuththaramaaga:  neer  ki'risthu  en'raan.  (maa’rku  8:29)

அப்பொழுது  தம்மைக்குறித்து  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  அவர்களுக்கு  உறுதியாய்க்  கட்டளையிட்டார்.  (மாற்கு  8:30)

appozhuthu  thammaikku'riththu  oruvarukkum  sollaathapadikku  avarga'lukku  u'ruthiyaayk  katta'laiyittaar.  (maa’rku  8:30)

அல்லாமலும்,  மனுஷகுமாரன்  பல  பாடுகள்பட்டு,  மூப்பராலும்  பிரதான  ஆசாரியராலும்  வேதபாரகராலும்  ஆகாதவனென்று  தள்ளப்பட்டு,  கொல்லப்பட்டு,  மூன்றுநாளைக்குப்பின்பு  உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று  அவர்களுக்குப்  போதிக்கத்  தொடங்கினார்.  (மாற்கு  8:31)

allaamalum,  manushakumaaran  pala  paaduga'lpattu,  moopparaalum  pirathaana  aasaariyaraalum  veathapaaragaraalum  aagaathavanen'ru  tha'l'lappattu,  kollappattu,  moon'runaa'laikkuppinbu  uyirththezhunthirukkavea'ndiyathen'ru  avarga'lukkup  poathikkath  thodangginaar.  (maa’rku  8:31)

இந்த  வார்த்தையை  அவர்  தாராளமாகச்  சொன்னார்.  அப்பொழுது,  பேதுரு  அவரைத்  தனியே  அழைத்துக்கொண்டுபோய்,  அவரைக்  கடிந்துகொள்ளத்  தொடங்கினான்.  (மாற்கு  8:32)

intha  vaarththaiyai  avar  thaaraa'lamaagach  sonnaar.  appozhuthu,  peathuru  avaraith  thaniyea  azhaiththukko'ndupoay,  avaraik  kadinthuko'l'lath  thodangginaan.  (maa’rku  8:32)

அவர்  திரும்பித்  தம்முடைய  சீஷரைப்  பார்த்து,  பேதுருவை  நோக்கி:  எனக்குப்  பின்னாகப்போ,  சாத்தானே,  நீ  தேவனுக்கு  ஏற்றவைகளைச்  சிந்தியாமல்  மனுஷருக்கு  ஏற்றவைகளைச்  சிந்திக்கிறாய்  என்று  சொல்லி,  அவனைக்  கடிந்து  கொண்டார்.  (மாற்கு  8:33)

avar  thirumbith  thammudaiya  seesharaip  paarththu,  peathuruvai  noakki:  enakkup  pinnaagappoa,  saaththaanea,  nee  theavanukku  eat’ravaiga'laich  sinthiyaamal  manusharukku  eat'ravaiga'laich  sinthikki'raay  en'ru  solli,  avanaik  kadinthu  ko'ndaar.  (maa’rku  8:33)

பின்பு  அவர்  ஜனங்களையும்  தம்முடைய  சீஷர்களையும்  தம்மிடத்தில்  அழைத்து:  ஒருவன்  என்  பின்னே  வர  விரும்பினால்,  அவன்  தன்னைத்தான்  வெறுத்து,  தன்  சிலுவையை  எடுத்துக்கொண்டு,  என்னைப்  பின்பற்றக்கடவன்.  (மாற்கு  8:34)

pinbu  avar  janangga'laiyum  thammudaiya  seesharga'laiyum  thammidaththil  azhaiththu:  oruvan  en  pinnea  vara  virumbinaal,  avan  thannaiththaan  ve'ruththu,  than  siluvaiyai  eduththukko'ndu,  ennaip  pinpat'rakkadavan.  (maa’rku  8:34)

தன்  ஜீவனை  இரட்சிக்க  விரும்புகிறவன்  அதை  இழந்துபோவான்,  என்னிமித்தமாகவும்  சுவிசேஷத்தினிமித்தமாகவும்  தன்  ஜீவனை  இழந்துபோகிறவன்  அதை  இரட்சித்துக்கொள்ளுவான்.  (மாற்கு  8:35)

than  jeevanai  iradchikka  virumbugi'ravan  athai  izhanthupoavaan,  ennimiththamaagavum  suviseashaththinimiththamaagavum  than  jeevanai  izhanthupoagi'ravan  athai  iradchiththukko'l'luvaan.  (maa’rku  8:35)

மனுஷன்  உலகம்  முழுவதையும்  ஆதாயப்படுத்திக்கொண்டாலும்,  தன்  ஜீவனை  நஷ்டப்படுத்தினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  (மாற்கு  8:36)

manushan  ulagam  muzhuvathaiyum  aathaayappaduththikko'ndaalum,  than  jeevanai  nashdappaduththinaal  avanukku  laabam  enna?  (maa’rku  8:36)

மனுஷன்  தன்  ஜீவனுக்கு  ஈடாக  என்னத்தைக்  கொடுப்பான்?  (மாற்கு  8:37)

manushan  than  jeevanukku  eedaaga  ennaththaik  koduppaan?  (maa’rku  8:37)

ஆதலால்  விபசாரமும்  பாவமுமுள்ள  இந்தச்  சந்ததியில்  என்னைக்குறித்தும்  என்  வார்த்தைகளைக்குறித்தும்  எவன்  வெட்கப்படுவானோ,  அவனைக்  குறித்து  மனுஷகுமாரனும்  தமது  பிதாவின்  மகிமைபொருந்தினவராய்ப்  பரிசுத்த  தூதர்களோடுங்கூட  வரும்போது  வெட்கப்படுவார்  என்றார்.  (மாற்கு  8:38)

aathalaal  vibasaaramum  paavamumu'l'la  inthach  santhathiyil  ennaikku'riththum  en  vaarththaiga'laikku'riththum  evan  vedkappaduvaanoa,  avanaik  ku'riththu  manushakumaaranum  thamathu  pithaavin  magimaiporunthinavaraayp  parisuththa  thootharga'loadungkooda  varumpoathu  vedkappaduvaar  en'raar.  (maa’rku  8:38)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!