Monday, April 25, 2016

Maa’rku 2 | மாற்கு 2 | Mark 2


சிலநாட்களுக்குப்பின்பு  அவர்  மறுபடியும்  கப்பர்நகூமுக்குப்  போனார்;  அவர்  வீட்டிலிருக்கிறாரென்று  ஜனங்கள்  கேள்விப்பட்டு;  (மாற்கு  2:1)

silanaadka'lukkuppinbu  avar  ma'rupadiyum  kapparnahoomukkup  poanaar;  avar  veettilirukki'raaren'ru  janangga'l  kea'lvippattu;  (maa’rku  2:1)

உடனே  வாசலுக்கு  முன்னும்  நிற்க  இடம்போதாதபடிக்கு  அநேகர்  கூடிவந்தார்கள்;  அவர்களுக்கு  வசனத்தைப்  போதித்தார்.  (மாற்கு  2:2)

udanea  vaasalukku  munnum  ni’rka  idampoathaathapadikku  aneagar  koodivanthaarga'l;  avarga'lukku  vasanaththaip  poathiththaar.  (maa’rku  2:2)

அப்பொழுது  நாலுபேர்  ஒரு  திமிர்வாதக்காரனைச்  சுமந்துகொண்டு  அவரிடத்தில்  வந்தார்கள்;  (மாற்கு  2:3)

appozhuthu  naalupear  oru  thimirvaathakkaaranaich  sumanthuko'ndu  avaridaththil  vanthaarga'l;  (maa’rku  2:3)

ஜனக்கூட்டத்தினிமித்தம்  அவருக்குச்  சமீபமாய்ச்  சேரக்கூடாமல்,  அவர்  இருந்த  வீட்டின்  மேற்கூரையைப்  பிரித்துத்  திறப்பாக்கி,  திமிர்வாதக்காரன்  கிடக்கிற  படுக்கையை  இறக்கினார்கள்.  (மாற்கு  2:4)

janakkoottaththinimiththam  avarukkuch  sameebamaaych  searakkoodaamal,  avar  iruntha  veettin  mea’rkooraiyaip  piriththuth  thi'rappaakki,  thimirvaathakkaaran  kidakki'ra  padukkaiyai  i'rakkinaarga'l.  (maa’rku  2:4)

இயேசு  அவர்கள்  விசுவாசத்தைக்  கண்டு,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  மகனே,  உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டது  என்றார்.  (மாற்கு  2:5)

iyeasu  avarga'l  visuvaasaththaik  ka'ndu,  thimirvaathakkaaranai  noakki:  maganea,  un  paavangga'l  unakku  mannikkappattathu  en'raar.  (maa’rku  2:5)

அங்கே  உட்கார்ந்திருந்த  வேதபாரகரில்  சிலர்:  (மாற்கு  2:6)

anggea  udkaarnthiruntha  veathapaaragaril  silar:  (maa’rku  2:6)

இவன்  இப்படித்  தேவதூஷணம்  சொல்லுகிறதென்ன?  தேவன்  ஒருவரேயன்றிப்  பாவங்களை  மன்னிக்கத்தக்கவர்  யார்  என்று  தங்கள்  இருதயங்களில்  சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.  (மாற்கு  2:7)

ivan  ippadith  theavathoosha'nam  sollugi'rathenna?  theavan  oruvareayan'rip  paavangga'lai  mannikkaththakkavar  yaar  en'ru  thangga'l  iruthayangga'lil  sinthiththukko'ndirunthaarga'l.  (maa’rku  2:7)

அவர்கள்  தங்களுக்குள்ளே  இப்படிச்  சிந்திக்கிறார்களென்று  இயேசு  உடனே  தம்முடைய  ஆவியில்  அறிந்து,  அவர்களை  நோக்கி:  நீங்கள்  உங்கள்  இருதயங்களில்  இப்படிச்  சிந்திக்கிறதென்ன?  (மாற்கு  2:8)

avarga'l  thangga'lukku'l'lea  ippadich  sinthikki'raarga'len'ru  iyeasu  udanea  thammudaiya  aaviyil  a'rinthu,  avarga'lai  noakki:  neengga'l  ungga'l  iruthayangga'lil  ippadich  sinthikki'rathenna?  (maa’rku  2:8)

உன்  பாவங்கள்  உனக்கு  மன்னிக்கப்பட்டதென்று  சொல்வதோ,  எழுந்து  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  நடவென்று  சொல்வதோ,  எது  எளிது?  (மாற்கு  2:9)

un  paavangga'l  unakku  mannikkappattathen'ru  solvathoa,  ezhunthu  un  padukkaiyai  eduththukko'ndu  nadaven'ru  solvathoa,  ethu  e'lithu?  (maa’rku  2:9)

பூமியிலே  பாவங்களை  மன்னிக்க  மனுஷகுமாரனுக்கு  அதிகாரம்  உண்டென்பதை  நீங்கள்  அறியவேண்டும்  என்று  சொல்லி,  திமிர்வாதக்காரனை  நோக்கி:  (மாற்கு  2:10)

boomiyilea  paavangga'lai  mannikka  manushakumaaranukku  athigaaram  u'ndenbathai  neengga'l  a'riyavea'ndum  en'ru  solli,  thimirvaathakkaaranai  noakki:  (maa’rku  2:10)

நீ  எழுந்து,  உன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு,  உன்  வீட்டுக்குப்  போ  என்று  உனக்குச்  சொல்லுகிறேன்  என்றார்.  (மாற்கு  2:11)

nee  ezhunthu,  un  padukkaiyai  eduththukko'ndu,  un  veettukkup  poa  en'ru  unakkuch  sollugi'rean  en'raar.  (maa’rku  2:11)

உடனே,  அவன்  எழுந்து,  தன்  படுக்கையை  எடுத்துக்கொண்டு  எல்லாருக்குமுன்பாகப்  போனான்.  அப்பொழுது  எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  நாம்  ஒருக்காலும்  இப்படிக்  கண்டதில்லையென்று  சொல்லி,  தேவனை  மகிமைப்படுத்தினார்கள்.  (மாற்கு  2:12)

udanea,  avan  ezhunthu,  than  padukkaiyai  eduththukko'ndu  ellaarukkumunbaagap  poanaan.  appozhuthu  ellaarum  aachchariyappattu:  naam  orukkaalum  ippadik  ka'ndathillaiyen'ru  solli,  theavanai  magimaippaduththinaarga'l.  (maa’rku  2:12)

அவர்  மறுபடியும்  புறப்பட்டுக்  கடலருகே  போனார்;  அப்பொழுது  ஜனங்களெல்லாரும்  அவரிடத்தில்  வந்தார்கள்;  அவர்களுக்குப்  போதகம்பண்ணினார்.  (மாற்கு  2:13)

avar  ma'rupadiyum  pu'rappattuk  kadalarugea  poanaar;  appozhuthu  janangga'lellaarum  avaridaththil  vanthaarga'l;  avarga'lukkup  poathagampa'n'ninaar.  (maa’rku  2:13)

அவர்  நடந்துபோகையில்,  அல்பேயுவின்  குமாரனாகிய  லேவி  ஆயத்துறையில்  உட்கார்ந்திருக்கிறதைக்  கண்டு:  எனக்குப்  பின்சென்றுவா  என்றார்;  அவன்  எழுந்து  அவருக்குப்  பின்சென்றான்.  (மாற்கு  2:14)

avar  nadanthupoagaiyil,  alpeayuvin  kumaaranaagiya  leavi  aayaththu'raiyil  udkaarnthirukki'rathaik  ka'ndu:  enakkup  pinsen'ruvaa  en'raar;  avan  ezhunthu  avarukkup  pinsen'raan.  (maa’rku  2:14)

அப்பொழுது,  அவனுடைய  வீட்டிலே  அவர்  போஜனபந்தியிருக்கையில்,  அநேக  ஆயக்காரரும்  பாவிகளும்  அவரோடுகூட  வந்திருந்தபடியால்,  அவர்களும்  இயேசுவோடும்  அவர்  சீஷரோடுங்கூடப்  பந்தியிருந்தார்கள்.  (மாற்கு  2:15)

appozhuthu,  avanudaiya  veettilea  avar  poajanapanthiyirukkaiyil,  aneaga  aayakkaararum  paaviga'lum  avaroadukooda  vanthirunthapadiyaal,  avarga'lum  iyeasuvoadum  avar  seesharoadungkoodap  panthiyirunthaarga'l.  (maa’rku  2:15)

அவர்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனம்பண்ணுகிறதை  வேதபாரகரும்  பரிசேயரும்  கண்டு,  அவருடைய  சீஷரை  நோக்கி:  அவர்  ஆயக்காரரோடும்  பாவிகளோடும்  போஜனபானம்  பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்.  (மாற்கு  2:16)

avar  aayakkaararoadum  paaviga'loadum  poajanampa'n'nugi'rathai  veathapaaragarum  pariseayarum  ka'ndu,  avarudaiya  seesharai  noakki:  avar  aayakkaararoadum  paaviga'loadum  poajanabaanam  pa'n'nugi'rathennaven'ru  keattaarga'l.  (maa’rku  2:16)

இயேசு  அதைக்  கேட்டு:  பிணியாளிகளுக்கு  வைத்தியன்  வேண்டியதேயல்லாமல்  சுகமுள்ளவர்களுக்கு  வேண்டியதில்லை;  நீதிமான்களையல்ல,  பாவிகளையே  மனந்திரும்புகிறதற்கு  அழைக்கவந்தேன்  என்றார்.  (மாற்கு  2:17)

iyeasu  athaik  keattu:  pi'niyaa'liga'lukku  vaiththiyan  vea'ndiyatheayallaamal  sugamu'l'lavarga'lukku  vea'ndiyathillai;  neethimaanga'laiyalla,  paaviga'laiyea  mananthirumbugi'ratha’rku  azhaikkavanthean  en'raar.  (maa’rku  2:17)

யோவானுடைய  சீஷரும்  பரிசேயருடைய  சீஷரும்  உபவாசம்பண்ணிவந்தார்கள்.  அவர்கள்  அவரிடத்தில்  வந்து:  யோவானுடைய  சீஷரும்  பரிசேயருடைய  சீஷரும்  உபவாசிக்கிறார்களே,  உம்முடைய  சீஷர்  உபவாசியாமலிருக்கிறதென்னவென்று  கேட்டார்கள்.  (மாற்கு  2:18)

yoavaanudaiya  seesharum  pariseayarudaiya  seesharum  ubavaasampa'n'nivanthaarga'l.  avarga'l  avaridaththil  vanthu:  yoavaanudaiya  seesharum  pariseayarudaiya  seesharum  ubavaasikki'raarga'lea,  ummudaiya  seeshar  ubavaasiyaamalirukki'rathennaven'ru  keattaarga'l.  (maa’rku  2:18)

அதற்கு  இயேசு:  மணவாளன்  தங்களோடிருக்கையில்  மணவாளனுடைய  தோழர்  உபவாசிப்பார்களா?  மணவாளன்  தங்களுடனே  இருக்கும்வரைக்கும்  உபவாசிக்கமாட்டார்களே.  (மாற்கு  2:19)

atha’rku  iyeasu:  ma'navaa'lan  thangga'loadirukkaiyil  ma'navaa'lanudaiya  thoazhar  ubavaasippaarga'laa?  ma'navaa'lan  thangga'ludanea  irukkumvaraikkum  ubavaasikkamaattaarga'lea.  (maa’rku  2:19)

மணவாளன்  அவர்களை  விட்டு  எடுபடும்  நாட்கள்  வரும்,  அந்த  நாட்களிலே  உபவாசிப்பார்கள்.  (மாற்கு  2:20)

ma'navaa'lan  avarga'lai  vittu  edupadum  naadka'l  varum,  antha  naadka'lilea  ubavaasippaarga'l.  (maa’rku  2:20)

ஒருவனும்  கோடித்துண்டைப்  பழைய  வஸ்திரத்தோடு  இணைக்கமாட்டான்,  இணைத்தால்,  அதினோடே  இணைத்த  புதியதுண்டு  பழையதை  அதிகமாய்க்  கிழிக்கும்,  பீறலும்  அதிகமாகும்.  (மாற்கு  2:21)

oruvanum  koadiththu'ndaip  pazhaiya  vasthiraththoadu  i'naikkamaattaan,  i'naiththaal,  athinoadea  i'naiththa  puthiyathu'ndu  pazhaiyathai  athigamaayk  kizhikkum,  pee'ralum  athigamaagum.  (maa’rku  2:21)

ஒருவனும்  புது  திராட்சரசத்தைப்  பழந்துருத்திகளில்  வார்த்துவைக்கமாட்டான்;  வார்த்துவைத்தால்,  புதுரசம்  துருத்திகளைக்  கிழித்துப்போடும்,  இரசமும்  சிந்திப்போம்,  துருத்திகளும்  கெட்டுப்போம்;  புதுரசத்தைப்  புது  துருத்திகளில்  வார்த்துவைக்கவேண்டும்  என்றார்.  (மாற்கு  2:22)

oruvanum  puthu  thiraadcharasaththaip  pazhanthuruththiga'lil  vaarththuvaikkamaattaan;  vaarththuvaiththaal,  puthurasam  thuruththiga'laik  kizhiththuppoadum,  irasamum  sinthippoam,  thuruththiga'lum  kettuppoam;  puthurasaththaip  puthu  thuruththiga'lil  vaarththuvaikkavea'ndum  en'raar.  (maa’rku  2:22)

பின்பு,  அவர்  ஓய்வுநாளில்  பயிர்  வழியே  போனார்;  அவருடைய  சீஷர்கள்  கூட  நடந்துபோகையில்,  கதிர்களைக்  கொய்யத்  தொடங்கினார்கள்.  (மாற்கு  2:23)

pinbu,  avar  oayvunaa'lil  payir  vazhiyea  poanaar;  avarudaiya  seesharga'l  kooda  nadanthupoagaiyil,  kathirga'laik  koyyath  thodangginaarga'l.  (maa’rku  2:23)

பரிசேயர்  அவரை  நோக்கி:  இதோ,  ஓய்வுநாளில்  செய்யத்தகாததை  இவர்கள்  ஏன்  செய்கிறார்கள்  என்றார்கள்.  (மாற்கு  2:24)

pariseayar  avarai  noakki:  ithoa,  oayvunaa'lil  seyyaththagaathathai  ivarga'l  ean  seygi'raarga'l  en'raarga'l.  (maa’rku  2:24)

அதற்கு  அவர்:  தாவீதுக்கு  உண்டான  ஆபத்தில்,  தானும்  தன்னோடிருந்தவர்களும்  பசியாயிருந்தபோது,  (மாற்கு  2:25)

atha’rku  avar:  thaaveethukku  u'ndaana  aabaththil,  thaanum  thannoadirunthavarga'lum  pasiyaayirunthapoathu,  (maa’rku  2:25)

அவன்  அபியத்தார்  என்னும்  பிரதான  ஆசாரியன்  காலத்தில்  செய்ததை  நீங்கள்  ஒருக்காலும்  வாசிக்கவில்லையா?  அவன்  தேவனுடைய  வீட்டில்  பிரவேசித்து,  ஆசாரியர்தவிர  வேறொருவரும்  புசிக்கத்தகாத  தெய்வசமுகத்து  அப்பங்களைத்  தானும்  புசித்துத்  தன்னோடிருந்தவர்களுக்கும்  கொடுத்தானே  என்றார்.  (மாற்கு  2:26)

avan  abiyaththaar  ennum  pirathaana  aasaariyan  kaalaththil  seythathai  neengga'l  orukkaalum  vaasikkavillaiyaa?  avan  theavanudaiya  veettil  piraveasiththu,  aasaariyarthavira  vea'roruvarum  pusikkaththagaatha  theyvasamugaththu  appangga'laith  thaanum  pusiththuth  thannoadirunthavarga'lukkum  koduththaanea  en'raar.  (maa’rku  2:26)

பின்பு  அவர்களை  நோக்கி:  மனுஷன்  ஓய்வுநாளுக்காக  உண்டாக்கப்படவில்லை,  ஓய்வுநாள்  மனுஷனுக்காக  உண்டாக்கப்பட்டது;  (மாற்கு  2:27)

pinbu  avarga'lai  noakki:  manushan  oayvunaa'lukkaaga  u'ndaakkappadavillai,  oayvunaa'l  manushanukkaaga  u'ndaakkappattathu;  (maa’rku  2:27)

ஆகையால்  மனுஷகுமாரன்  ஓய்வு  நாளுக்கும்  ஆண்டவராய்  இருக்கிறார்  என்றார்.  (மாற்கு  2:28)

aagaiyaal  manushakumaaran  oayvu  naa'lukkum  aa'ndavaraay  irukki'raar  en'raar.  (maa’rku  2:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!