Sunday, April 24, 2016

Maa’rku 1 | மாற்கு 1 | Mark 1

தேவனுடைய  குமாரனாகிய  இயேசு  கிறிஸ்துவினுடைய  சுவிசேஷத்தின்  ஆரம்பம்.  (மாற்கு  1:1)

theavanudaiya  kumaaranaagiya  iyeasu  ki'risthuvinudaiya  suviseashaththin  aarambam.  (maa’rku  1:1)

இதோ,  நான்  என்  தூதனை  உமக்கு  முன்பாக  அனுப்புகிறேன்,  அவன்  உமக்கு  முன்னே  போய்,  உமக்கு  வழியை  ஆயத்தம்பண்ணுவான்  என்றும்;  (மாற்கு  1:2)

ithoa,  naan  en  thoothanai  umakku  munbaaga  anuppugi'rean,  avan  umakku  munnea  poay,  umakku  vazhiyai  aayaththampa'n'nuvaan  en'rum;  (maa’rku  1:2)

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்,  அவருக்குப்  பாதைகளைச்  செவ்வைபண்ணுங்கள்  என்று  வனாந்தரத்திலே  கூப்பிடுகிறவனுடைய  சத்தம்  உண்டாகும்  என்றும்,  தீர்க்கதரிசன  ஆகமங்களில்  எழுதியிருக்கிற  பிரகாரமாய்;  (மாற்கு  1:3)

karththarukku  vazhiyai  aayaththappaduththungga'l,  avarukkup  paathaiga'laich  sevvaipa'n'nungga'l  en'ru  vanaantharaththilea  kooppidugi'ravanudaiya  saththam  u'ndaagum  en'rum,  theerkkatharisana  aagamangga'lil  ezhuthiyirukki'ra  piragaaramaay;  (maa’rku  1:3)

யோவான்  வனாந்தரத்தில்  ஞானஸ்நானங்கொடுத்து,  பாவமன்னிப்புக்கென்று  மனந்திரும்புதலுக்கேற்ற  ஞானஸ்நானத்தைக்குறித்துப்  பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.  (மாற்கு  1:4)

yoavaan  vanaantharaththil  gnaanasnaanangkoduththu,  paavamannippukken'ru  mananthirumbuthalukkeat’ra  gnaanasnaanaththaikku'riththup  pirasanggampa'n'nikko'ndirunthaan.  (maa’rku  1:4)

அப்பொழுது  யூதேயா  தேசத்தார்  அனைவரும்  எருசலேம்  நகரத்தார்  யாவரும்,  அவனிடத்திற்குப்போய்,  தங்கள்  பாவங்களை  அறிக்கையிட்டு,  யோர்தான்  நதியில்  அவனால்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  (மாற்கு  1:5)

appozhuthu  yootheayaa  theasaththaar  anaivarum  erusaleam  nagaraththaar  yaavarum,  avanidaththi’rkuppoay,  thangga'l  paavangga'lai  a'rikkaiyittu,  yoarthaan  nathiyil  avanaal  gnaanasnaanam  pet’raarga'l.  (maa’rku  1:5)

யோவான்  ஒட்டகமயிர்  உடையைத்  தரித்து,  தன்  அரையில்  வார்க்கச்சையைக்  கட்டிக்கொண்டவனாயும்,  வெட்டுக்கிளியையும்  காட்டுத்தேனையும்  புசிக்கிறவனாயும்  இருந்தான்.  (மாற்கு  1:6)

yoavaan  ottagamayir  udaiyaith  thariththu,  than  araiyil  vaarkkachchaiyaik  kattikko'ndavanaayum,  vettukki'liyaiyum  kaattuththeanaiyum  pusikki'ravanaayum  irunthaan.  (maa’rku  1:6)

அவன்:  என்னிலும்  வல்லவர்  ஒருவர்  எனக்குப்பின்  வருகிறார்,  அவருடைய  பாதரட்சைகளின்  வாரைக்  குனிந்து  அவிழ்க்கிறதற்கும்  நான்  பாத்திரன்  அல்ல.  (மாற்கு  1:7)

avan:  ennilum  vallavar  oruvar  enakkuppin  varugi'raar,  avarudaiya  paatharadchaiga'lin  vaaraik  kuninthu  avizhkki'ratha’rkum  naan  paaththiran  alla.  (maa’rku  1:7)

நான்  ஜலத்தினால்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுத்தேன்;  அவரோ  பரிசுத்த  ஆவியினால்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுப்பார்  என்று  பிரசங்கித்தான்.  (மாற்கு  1:8)

naan  jalaththinaal  ungga'lukku  gnaanasnaanam  koduththean;  avaroa  parisuththa  aaviyinaal  ungga'lukku  gnaanasnaanam  koduppaar  en'ru  pirasanggiththaan.  (maa’rku  1:8)

அந்த  நாட்களில்,  இயேசு  கலிலேயாவிலுள்ள  நாசரேத்தூரிலிருந்து  வந்து,  யோர்தான்  நதியில்  யோவானால்  ஞானஸ்நானம்  பெற்றார்.  (மாற்கு  1:9)

antha  naadka'lil,  iyeasu  kalileayaavilu'l'la  naasareaththoorilirunthu  vanthu,  yoarthaan  nathiyil  yoavaanaal  gnaanasnaanam  pet'raar.  (maa’rku  1:9)

அவர்  ஜலத்திலிருந்து  கரையேறினவுடனே,  வானம்  திறக்கப்பட்டதையும்,  ஆவியானவர்  புறாவைப்போல்  தம்மேல்  இறங்குகிறதையும்  கண்டார்.  (மாற்கு  1:10)

avar  jalaththilirunthu  karaiyea'rinavudanea,  vaanam  thi'rakkappattathaiyum,  aaviyaanavar  pu'raavaippoal  thammeal  i'ranggugi'rathaiyum  ka'ndaar.  (maa’rku  1:10)

அன்றியும்,  நீர்  என்னுடைய  நேசகுமாரன்,  உம்மில்  பிரியமாயிருக்கிறேன்  என்று,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாயிற்று.  (மாற்கு  1:11)

an'riyum,  neer  ennudaiya  neasakumaaran,  ummil  piriyamaayirukki'rean  en'ru,  vaanaththilirunthu  oru  saththam  u'ndaayit’ru.  (maa’rku  1:11)

உடனே  ஆவியானவர்  அவரை  வனாந்தரத்திற்குப்  போகும்படி  ஏவினார்.  (மாற்கு  1:12)

udanea  aaviyaanavar  avarai  vanaantharaththi’rkup  poagumpadi  eavinaar.  (maa’rku  1:12)

அவர்  வனாந்தரத்திலே  நாற்பதுநாள்  இருந்து,  சாத்தானால்  சோதிக்கப்பட்டு,  அங்கே  காட்டுமிருகங்களின்  நடுவிலே  சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.  தேவதூதர்கள்  அவருக்கு  ஊழியஞ்செய்தார்கள்.  (மாற்கு  1:13)

avar  vanaantharaththilea  naa’rpathunaa'l  irunthu,  saaththaanaal  soathikkappattu,  anggea  kaattumirugangga'lin  naduvilea  sagnchariththukko'ndirunthaar.  theavathootharga'l  avarukku  oozhiyagnseythaarga'l.  (maa’rku  1:13)

யோவான்  காவலில்  வைக்கப்பட்ட  பின்பு,  இயேசு  கலிலேயாவிலே  வந்து,  தேவனுடைய  ராஜ்யத்தின்  சுவிசேஷத்தைப்  பிரசங்கித்து:  (மாற்கு  1:14)

yoavaan  kaavalil  vaikkappatta  pinbu,  iyeasu  kalileayaavilea  vanthu,  theavanudaiya  raajyaththin  suviseashaththaip  pirasanggiththu:  (maa’rku  1:14)

காலம்  நிறைவேறிற்று,  தேவனுடைய  ராஜ்யம்  சமீபமாயிற்று;  மனந்திரும்பி,  சுவிசேஷத்தை  விசுவாசியுங்கள்  என்றார்.  (மாற்கு  1:15)

kaalam  ni'raivea'rit'ru,  theavanudaiya  raajyam  sameebamaayit'ru;  mananthirumbi,  suviseashaththai  visuvaasiyungga'l  en'raar.  (maa’rku  1:15)

அவர்  கலிலேயாக்  கடலோரமாய்  நடந்துபோகையில்,  மீன்பிடிக்கிறவர்களாயிருந்த  சீமோனும்,  அவன்  சகோதரன்  அந்திரேயாவும்  கடலில்  வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது  அவர்களைக்  கண்டார்.  (மாற்கு  1:16)

avar  kalileayaak  kadaloaramaay  nadanthupoagaiyil,  meenpidikki'ravarga'laayiruntha  seemoanum,  avan  sagoatharan  anthireayaavum  kadalil  valaipoattukko'ndirukki'rapoathu  avarga'laik  ka'ndaar.  (maa’rku  1:16)

இயேசு  அவர்களை  நோக்கி:  என்  பின்னே  வாருங்கள்,  உங்களை  மனுஷரைப்  பிடிக்கிறவர்களாக்குவேன்  என்றார்.  (மாற்கு  1:17)

iyeasu  avarga'lai  noakki:  en  pinnea  vaarungga'l,  ungga'lai  manusharaip  pidikki'ravarga'laakkuvean  en'raar.  (maa’rku  1:17)

உடனே  அவர்கள்  தங்கள்  வலைகளை  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (மாற்கு  1:18)

udanea  avarga'l  thangga'l  valaiga'lai  vittu,  avarukkup  pinsen'raarga'l.  (maa’rku  1:18)

அவர்  அவ்விடம்  விட்டுச்  சற்று  அப்புறம்  போனபோது,  செபெதேயுவின்  குமாரன்  யாக்கோபும்  அவன்  சகோதரன்  யோவானும்  படவிலே  வலைகளைப்  பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக்  கண்டு,  (மாற்கு  1:19)

avar  avvidam  vittuch  sat'ru  appu'ram  poanapoathu,  sebetheayuvin  kumaaran  yaakkoabum  avan  sagoatharan  yoavaanum  padavilea  valaiga'laip  pazhuthupaarththukko'ndirukki'rathaik  ka'ndu,  (maa’rku  1:19)

உடனே  அவர்களையும்  அழைத்தார்;  அப்பொழுது  அவர்கள்  தங்கள்  தகப்பனாகிய  செபெதேயுவைக்  கூலியாட்களோடு  படவிலே  விட்டு,  அவருக்குப்  பின்சென்றார்கள்.  (மாற்கு  1:20)

udanea  avarga'laiyum  azhaiththaar;  appozhuthu  avarga'l  thangga'l  thagappanaagiya  sebetheayuvaik  kooliyaadka'loadu  padavilea  vittu,  avarukkup  pinsen'raarga'l.  (maa’rku  1:20)

பின்பு  கப்பர்நகூமுக்குப்  போனார்கள்.  உடனே  அவர்  ஓய்வுநாளில்  ஜெபஆலயத்திலே  பிரவேசித்து,  போதகம்  பண்ணினார்.  (மாற்கு  1:21)

pinbu  kapparnahoomukkup  poanaarga'l.  udanea  avar  oayvunaa'lil  jebaaalayaththilea  piraveasiththu,  poathagam  pa'n'ninaar.  (maa’rku  1:21)

அவர்  வேதபாரகரைப்போலப்  போதியாமல்,  அதிகாரமுடையவராய்  அவர்களுக்குப்  போதித்தபடியினால்,  அவருடைய  போதகத்தைக்குறித்து  ஜனங்கள்  ஆச்சரியப்பட்டார்கள்.  (மாற்கு  1:22)

avar  veathapaaragaraippoalap  poathiyaamal,  athigaaramudaiyavaraay  avarga'lukkup  poathiththapadiyinaal,  avarudaiya  poathagaththaikku'riththu  janangga'l  aachchariyappattaarga'l.  (maa’rku  1:22)

அவர்களுடைய  ஜெபஆலயத்திலே  அசுத்த  ஆவியுள்ள  ஒரு  மனுஷன்  இருந்தான்.  (மாற்கு  1:23)

avarga'ludaiya  jebaaalayaththilea  asuththa  aaviyu'l'la  oru  manushan  irunthaan.  (maa’rku  1:23)

அவன்:  ஐயோ!  நசரேயனாகிய  இயேசுவே,  எங்களுக்கும்  உமக்கும்  என்ன?  எங்களைக்  கெடுக்கவா  வந்தீர்?  உம்மை  இன்னார்  என்று  அறிவேன்,  நீர்  தேவனுடைய  பரிசுத்தர்  என்று  சத்தமிட்டான்.  (மாற்கு  1:24)

avan:  aiyoa!  nasareayanaagiya  iyeasuvea,  engga'lukkum  umakkum  enna?  engga'laik  kedukkavaa  vantheer?  ummai  innaar  en'ru  a'rivean,  neer  theavanudaiya  parisuththar  en'ru  saththamittaan.  (maa’rku  1:24)

அதற்கு  இயேசு:  நீ  பேசாமல்  இவனை  விட்டுப்  புறப்பட்டுப்போ  என்று  அதை  அதட்டினார்.  (மாற்கு  1:25)

atha’rku  iyeasu:  nee  peasaamal  ivanai  vittup  pu'rappattuppoa  en'ru  athai  athattinaar.  (maa’rku  1:25)

உடனே  அந்த  அசுத்த  ஆவி  அவனை  அலைக்கழித்து,  மிகுந்த  சத்தமிட்டு,  அவனைவிட்டுப்  போய்விட்டது.  (மாற்கு  1:26)

udanea  antha  asuththa  aavi  avanai  alaikkazhiththu,  miguntha  saththamittu,  avanaivittup  poayvittathu.  (maa’rku  1:26)

எல்லாரும்  ஆச்சரியப்பட்டு:  இது  என்ன?  இந்தப்  புதிய  உபதேசம்  எப்படிப்பட்டது?  இவர்  அதிகாரத்தோடே  அசுத்த  ஆவிகளுக்கும்  கட்டளையிடுகிறார்,  அவைகள்  இவருக்குக்  கீழ்ப்படிகிறதே  என்று  தங்களுக்குள்ளே  ஒருவரோடொருவர்  சொல்லிக்கொண்டார்கள்.  (மாற்கு  1:27)

ellaarum  aachchariyappattu:  ithu  enna?  inthap  puthiya  ubatheasam  eppadippattathu?  ivar  athigaaraththoadea  asuththa  aaviga'lukkum  katta'laiyidugi'raar,  avaiga'l  ivarukkuk  keezhppadigi'rathea  en'ru  thangga'lukku'l'lea  oruvaroadoruvar  sollikko'ndaarga'l.  (maa’rku  1:27)

அதுமுதல்  அவருடைய  கீர்த்தி  கலிலேயா  நாடெங்கும்  பிரசித்தமாயிற்று.  (மாற்கு  1:28)

athumuthal  avarudaiya  keerththi  kalileayaa  naadenggum  pirasiththamaayit'ru.  (maa’rku  1:28)

உடனே  அவர்கள்  ஜெபஆலயத்தை  விட்டுப்  புறப்பட்டு,  யாக்கோபோடும்  யோவானோடுங்கூட,  சீமோன்  அந்திரேயா  என்பவர்களுடைய  வீட்டில்  பிரவேசித்தார்கள்.  (மாற்கு  1:29)

udanea  avarga'l  jebaaalayaththai  vittup  pu'rappattu,  yaakkoaboadum  yoavaanoadungkooda,  seemoan  anthireayaa  enbavarga'ludaiya  veettil  piraveasiththaarga'l.  (maa’rku  1:29)

அங்கே  சீமோனுடைய  மாமி  ஜுரமாய்க்  கிடந்தாள்;  உடனே  அவர்கள்  அவளைக்குறித்து  அவருக்குச்  சொன்னார்கள்.  (மாற்கு  1:30)

anggea  seemoanudaiya  maami  juramaayk  kidanthaa'l;  udanea  avarga'l  ava'laikku'riththu  avarukkuch  sonnaarga'l.  (maa’rku  1:30)

அவர்  கிட்டப்போய்,  அவள்  கையைப்  பிடித்து,  அவளைத்  தூக்கிவிட்டார்;  உடனே  ஜுரம்  அவளை  விட்டு  நீங்கிற்று;  அப்பொழுது  அவள்  அவர்களுக்குப்  பணிவிடைசெய்தாள்.  (மாற்கு  1:31)

avar  kittappoay,  ava'l  kaiyaip  pidiththu,  ava'laith  thookkivittaar;  udanea  juram  ava'lai  vittu  neenggit'ru;  appozhuthu  ava'l  avarga'lukkup  pa'nividaiseythaa'l.  (maa’rku  1:31)

சாயங்காலமாகிச்  சூரியன்  அஸ்தமித்தபோது,  சகல  பிணியாளிகளையும்,  பிசாசுபிடித்தவர்களையும்,  அவரிடத்தில்  கொண்டுவந்தார்கள்.  (மாற்கு  1:32)

saayanggaalamaagich  sooriyan  asthamiththapoathu,  sagala  pi'niyaa'liga'laiyum,  pisaasupidiththavarga'laiyum,  avaridaththil  ko'nduvanthaarga'l.  (maa’rku  1:32)

பட்டணத்தார்  எல்லாரும்  வீட்டு  வாசலுக்கு  முன்பாகக்  கூடிவந்தார்கள்.  (மாற்கு  1:33)

patta'naththaar  ellaarum  veettu  vaasalukku  munbaagak  koodivanthaarga'l.  (maa’rku  1:33)

பலவிதமான  வியாதிகளினால்  உபத்திரவப்பட்டிருந்த  அநேகரை  அவர்  சொஸ்தமாக்கி,  அநேகம்  பிசாசுகளையும்  துரத்திவிட்டார்;  அந்தப்  பிசாசுகள்  தம்மை  அறிந்திருந்தபடியால்,  அவைகள்  பேசுகிறதற்கு  அவர்  இடங்கொடுக்கவில்லை.  (மாற்கு  1:34)

palavithamaana  viyaathiga'linaal  ubaththiravappattiruntha  aneagarai  avar  sosthamaakki,  aneagam  pisaasuga'laiyum  thuraththivittaar;  anthap  pisaasuga'l  thammai  a'rinthirunthapadiyaal,  avaiga'l  peasugi'ratha’rku  avar  idangkodukkavillai.  (maa’rku  1:34)

அவர்  அதிகாலையில்,  இருட்டோடே  எழுந்து  புறப்பட்டு,  வனாந்தரமான  ஓரிடத்திற்குப்போய்,  அங்கே  ஜெபம்பண்ணினார்.  (மாற்கு  1:35)

avar  athikaalaiyil,  iruttoadea  ezhunthu  pu'rappattu,  vanaantharamaana  oaridaththi’rkuppoay,  anggea  jebampa'n'ninaar.  (maa’rku  1:35)

சீமோனும்  அவனோடே  இருந்தவர்களும்  அவரைப்  பின்தொடர்ந்துபோய்,  (மாற்கு  1:36)

seemoanum  avanoadea  irunthavarga'lum  avaraip  pinthodarnthupoay,  (maa’rku  1:36)

அவரைக்  கண்டபோது:  உம்மை  எல்லாரும்  தேடுகிறார்கள்  என்று  சொன்னார்கள்.  (மாற்கு  1:37)

avaraik  ka'ndapoathu:  ummai  ellaarum  theadugi'raarga'l  en'ru  sonnaarga'l.  (maa’rku  1:37)

அவர்களை  அவர்  நோக்கி:  அடுத்த  ஊர்களிலும்  நான்  பிரசங்கம்பண்ண  வேண்டுமாதலால்,  அவ்விடங்களுக்குப்  போவோம்  வாருங்கள்;  இதற்காகவே  புறப்பட்டுவந்தேன்  என்று  சொல்லி;  (மாற்கு  1:38)

avarga'lai  avar  noakki:  aduththa  oorga'lilum  naan  pirasanggampa'n'na  vea'ndumaathalaal,  avvidangga'lukkup  poavoam  vaarungga'l;  itha’rkaagavea  pu'rappattuvanthean  en'ru  solli;  (maa’rku  1:38)

கலிலேயா  நாடெங்கும்  அவர்களுடைய  ஜெபஆலயங்களில்  அவர்  பிரசங்கம்  பண்ணிக்கொண்டும்,  பிசாசுகளைத்  துரத்திக்கொண்டும்  இருந்தார்.  (மாற்கு  1:39)

kalileayaa  naadenggum  avarga'ludaiya  jebaaalayangga'lil  avar  pirasanggam  pa'n'nikko'ndum,  pisaasuga'laith  thuraththikko'ndum  irunthaar.  (maa’rku  1:39)

அப்பொழுது  குஷ்டரோகி  ஒருவன்  அவரிடத்தில்  வந்து,  அவர்  முன்பாக  முழங்கால்படியிட்டு:  உமக்குச்  சித்தமானால்  என்னைச்  சுத்தமாக்க  உம்மால்  ஆகும்  என்று  வேண்டிக்கொண்டான்.  (மாற்கு  1:40)

appozhuthu  kushdaroagi  oruvan  avaridaththil  vanthu,  avar  munbaaga  muzhangkaalpadiyittu:  umakkuch  siththamaanaal  ennaich  suththamaakka  ummaal  aagum  en'ru  vea'ndikko'ndaan.  (maa’rku  1:40)

இயேசு  மனதுருகி,  கையை  நீட்டி,  அவனைத்  தொட்டு:  எனக்குச்  சித்தமுண்டு,  சுத்தமாகு  என்றார்.  (மாற்கு  1:41)

iyeasu  manathurugi,  kaiyai  neetti,  avanaith  thottu:  enakkuch  siththamu'ndu,  suththamaagu  en'raar.  (maa’rku  1:41)

இப்படி  அவர்  சொன்னவுடனே,  குஷ்டரோகம்  அவனை  விட்டு  நீங்கிற்று,  அவன்  சுத்தமானான்.  (மாற்கு  1:42)

ippadi  avar  sonnavudanea,  kushdaroagam  avanai  vittu  neenggit'ru,  avan  suththamaanaan.  (maa’rku  1:42)

அப்பொழுது  அவர்  அவனை  நோக்கி:  நீ  இதை  ஒருவருக்கும்  சொல்லாதபடிக்கு  எச்சரிக்கையாயிரு;  (மாற்கு  1:43)

appozhuthu  avar  avanai  noakki:  nee  ithai  oruvarukkum  sollaathapadikku  echcharikkaiyaayiru;  (maa’rku  1:43)

ஆயினும்  நீ  போய்,  ஆசாரியனுக்கு  உன்னைக்  காண்பித்து,  நீ  சுத்தமானதினிமித்தம்,  மோசே  கட்டளையிட்டிருக்கிறவைகளை  அவர்களுக்குச்  சாட்சியாகச்  செலுத்து  என்று  கண்டிப்பாய்ச்  சொல்லி,  உடனே  அவனை  அனுப்பிவிட்டார்.  (மாற்கு  1:44)

aayinum  nee  poay,  aasaariyanukku  unnaik  kaa'nbiththu,  nee  suththamaanathinimiththam,  moasea  katta'laiyittirukki'ravaiga'lai  avarga'lukkuch  saadchiyaagach  seluththu  en'ru  ka'ndippaaych  solli,  udanea  avanai  anuppivittaar.  (maa’rku  1:44)

அவனோ  புறப்பட்டுப்போய்,  இந்தச்  சங்கதி  எங்கும்  விளங்கும்படியாகப்  பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்.  அதினால்  அவர்  வெளியரங்கமாய்ப்  பட்டணத்தில்  பிரவேசிக்கக்கூடாமல்,  வெளியே  வனாந்தரமான  இடங்களில்  தங்கியிருந்தார்;  எத்திசையிலுமிருந்து  ஜனங்கள்  அவரிடத்திற்கு  வந்தார்கள்.  (மாற்கு  1:45)

avanoa  pu'rappattuppoay,  inthach  sanggathi  enggum  vi'langgumpadiyaagap  pirasiththampa'n'naththodangginaan.  athinaal  avar  ve'liyaranggamaayp  patta'naththil  piraveasikkakkoodaamal,  ve'liyea  vanaantharamaana  idangga'lil  thanggiyirunthaar;  eththisaiyilumirunthu  janangga'l  avaridaththi’rku  vanthaarga'l.  (maa’rku  1:45)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!