Tuesday, April 12, 2016

Appoasthalar 1 | அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 | Acts 1


தெயோப்பிலுவே,  இயேசுவானவர்  தாம்  தெரிந்துகொண்ட  அப்போஸ்தலருக்குப்  பரிசுத்தஆவியினாலே  கட்டளையிட்ட  பின்பு,  (அப்போஸ்தலர்  1:1)

theyoappiluvea,  iyeasuvaanavar  thaam  therinthuko'nda  appoasthalarukkup  parisuththaaaviyinaalea  katta'laiyitta  pinbu,  (appoasthalar  1:1)

அவர்  எடுத்துக்கொள்ளப்பட்ட  நாள்வரைக்கும்  செய்யவும்  உபதேசிக்கவும்  தொடங்கின  எல்லாவற்றையுங்குறித்து,  முதலாம்  பிரபந்தத்தை  உண்டுபண்ணினேன்.  (அப்போஸ்தலர்  1:2)

avar  eduththukko'l'lappatta  naa'lvaraikkum  seyyavum  ubatheasikkavum  thodanggina  ellaavat’raiyungku'riththu,  muthalaam  pirabanthaththai  u'ndupa'n'ninean.  (appoasthalar  1:2)

அவர்  பாடுபட்டபின்பு,  நாற்பது  நாளளவும்  அப்போஸ்தலருக்குத்  தரிசனமாகி,  தேவனுடைய  ராஜ்யத்துக்குரியவைகளை  அவர்களுடனே  பேசி,  அநேகம்  தெளிவான  திருஷ்டாந்தங்களினாலே  அவர்களுக்குத்  தம்மை  உயிரோடிருக்கிறவராகக்  காண்பித்தார்.  (அப்போஸ்தலர்  1:3)

avar  paadupattapinbu,  naa’rpathu  naa'la'lavum  appoasthalarukkuth  tharisanamaagi,  theavanudaiya  raajyaththukkuriyavaiga'lai  avarga'ludanea  peasi,  aneagam  the'livaana  thirushdaanthangga'linaalea  avarga'lukkuth  thammai  uyiroadirukki'ravaraagak  kaa'nbiththaar.  (appoasthalar  1:3)

அன்றியும்,  அவர்  அவர்களுடனே  கூடிவந்திருக்கும்போது,  அவர்களை  நோக்கி:  யோவான்  ஜலத்தினாலே  ஞானஸ்நானங்  கொடுத்தான்;  நீங்கள்  சில  நாளுக்குள்ளே  பரிசுத்தஆவியினாலே  ஞானஸ்நானம்  பெறுவீர்கள்.  (அப்போஸ்தலர்  1:4)

an'riyum,  avar  avarga'ludanea  koodivanthirukkumpoathu,  avarga'lai  noakki:  yoavaan  jalaththinaalea  gnaanasnaanang  koduththaan;  neengga'l  sila  naa'lukku'l'lea  parisuththaaaviyinaalea  gnaanasnaanam  pe'ruveerga'l.  (appoasthalar  1:4)

ஆகையால்  நீங்கள்  எருசலேமை  விட்டுப்  போகாமல்  என்னிடத்தில்  கேள்விப்பட்ட  பிதாவின்  வாக்குத்தத்தம்  நிறைவேறக்  காத்திருங்கள்  என்று  கட்டளையிட்டார்.  (அப்போஸ்தலர்  1:5)

aagaiyaal  neengga'l  erusaleamai  vittup  poagaamal  ennidaththil  kea'lvippatta  pithaavin  vaakkuththaththam  ni'raivea'rak  kaaththirungga'l  en'ru  katta'laiyittaar.  (appoasthalar  1:5)

அப்பொழுது  கூடிவந்திருந்தவர்கள்  அவரை  நோக்கி:  ஆண்டவரே,  இக்காலத்திலா  ராஜ்யத்தை  இஸ்ரவேலுக்குத்  திரும்பக்  கொடுப்பீர்  என்று  கேட்டார்கள்.  (அப்போஸ்தலர்  1:6)

appozhuthu  koodivanthirunthavarga'l  avarai  noakki:  aa'ndavarea,  ikkaalaththilaa  raajyaththai  isravealukkuth  thirumbak  koduppeer  en'ru  keattaarga'l.  (appoasthalar  1:6)

அதற்கு  அவர்:  பிதாவானவர்  தம்முடைய  ஆதீனத்திலே  வைத்திருக்கிற  காலங்களையும்  வேளைகளையும்  அறிகிறது  உங்களுக்கு  அடுத்ததல்ல.  (அப்போஸ்தலர்  1:7)

atha’rku  avar:  pithaavaanavar  thammudaiya  aatheenaththilea  vaiththirukki'ra  kaalangga'laiyum  vea'laiga'laiyum  a'rigi'rathu  ungga'lukku  aduththathalla.  (appoasthalar  1:7)

பரிசுத்தஆவி  உங்களிடத்தில்  வரும்போது  நீங்கள்  பெலனடைந்து,  எருசலேமிலும்,  யூதேயா  முழுவதிலும்,  சமாரியாவிலும்,  பூமியின்  கடைசிபரியந்தமும்,  எனக்குச்  சாட்சிகளாயிருப்பீர்கள்  என்றார்.  (அப்போஸ்தலர்  1:8)

parisuththaaavi  ungga'lidaththil  varumpoathu  neengga'l  belanadainthu,  erusaleamilum,  yootheayaa  muzhuvathilum,  samaariyaavilum,  boomiyin  kadaisipariyanthamum,  enakkuch  saadchiga'laayiruppeerga'l  en'raar.  (appoasthalar  1:8)

இவைகளை  அவர்  சொன்னபின்பு,  அவர்கள்  பார்த்துக்கொண்டிருக்கையில்,  உயர  எடுத்துக்கொள்ளப்பட்டார்;  அவர்கள்  கண்களுக்கு  மறைவாக  ஒரு  மேகம்  அவரை  எடுத்துக்கொண்டது.  (அப்போஸ்தலர்  1:9)

ivaiga'lai  avar  sonnapinbu,  avarga'l  paarththukko'ndirukkaiyil,  uyara  eduththukko'l'lappattaar;  avarga'l  ka'nga'lukku  ma'raivaaga  oru  meagam  avarai  eduththukko'ndathu.  (appoasthalar  1:9)

அவர்  போகிறபோது  அவர்கள்  வானத்தை  அண்ணாந்து  பார்த்துக்கொண்டிருக்கையில்,  இதோ,  வெண்மையான  வஸ்திரந்தரித்தவர்கள்  இரண்டுபேர்  அவர்களருகே  நின்று:  (அப்போஸ்தலர்  1:10)

avar  poagi'rapoathu  avarga'l  vaanaththai  a'n'naanthu  paarththukko'ndirukkaiyil,  ithoa,  ve'nmaiyaana  vasthiranthariththavarga'l  ira'ndupear  avarga'larugea  nin'ru:  (appoasthalar  1:10)

கலிலேயராகிய  மனுஷரே,  நீங்கள்  ஏன்  வானத்தை  அண்ணாந்துபார்த்து  நிற்கிறீர்கள்?  உங்களிடத்தினின்று  வானத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட  இந்த  இயேசுவானவர்  எப்படி  உங்கள்  கண்களுக்கு  முன்பாக  வானத்துக்கு  எழுந்தருளிப்போனாரோ,  அப்படியே  மறுபடியும்  வருவார்  என்றார்கள்.  (அப்போஸ்தலர்  1:11)

kalileayaraagiya  manusharea,  neengga'l  ean  vaanaththai  a'n'naanthupaarththu  ni’rki'reerga'l?  ungga'lidaththinin'ru  vaanaththukku  eduththukko'l'lappatta  intha  iyeasuvaanavar  eppadi  ungga'l  ka'nga'lukku  munbaaga  vaanaththukku  ezhuntharu'lippoanaaroa,  appadiyea  ma'rupadiyum  varuvaar  en'raarga'l.  (appoasthalar  1:11)

அப்பொழுது  அவர்கள்  எருசலேமுக்குச்  சமீபமாய்  ஒரு  ஓய்வுநாள்  பிரயாண  தூரத்திலிருக்கிற  ஒலிவமலை  என்னப்பட்ட  மலையிலிருந்து  எருசலேமுக்குத்  திரும்பிப்போனார்கள்.  (அப்போஸ்தலர்  1:12)

appozhuthu  avarga'l  erusaleamukkuch  sameebamaay  oru  oayvunaa'l  pirayaa'na  thooraththilirukki'ra  olivamalai  ennappatta  malaiyilirunthu  erusaleamukkuth  thirumbippoanaarga'l.  (appoasthalar  1:12)

அவர்கள்  அங்கே  வந்தபோது  மேல்வீட்டில்  ஏறினார்கள்;  அதில்  பேதுருவும்,  யாக்கோபும்,  யோவானும்,  அந்திரேயாவும்,  பிலிப்பும்,  தோமாவும்,  பற்தொலொமேயும்,  மத்தேயும்,  அல்பேயுவின்  குமாரனாகிய  யாக்கோபும்,  செலோத்தே  என்னப்பட்ட  சீமோனும்,  யாக்கோபின்  சகோதரனாகிய  யூதாவும்  தங்கியிருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  1:13)

avarga'l  anggea  vanthapoathu  mealveettil  ea'rinaarga'l;  athil  peathuruvum,  yaakkoabum,  yoavaanum,  anthireayaavum,  pilippum,  thoamaavum,  ba'rtholomeayum,  maththeayum,  alpeayuvin  kumaaranaagiya  yaakkoabum,  seloaththea  ennappatta  seemoanum,  yaakkoabin  sagoatharanaagiya  yoothaavum  thanggiyirunthaarga'l.  (appoasthalar  1:13)

அங்கே  இவர்களெல்லாரும்,  ஸ்திரீகளோடும்  இயேசுவின்  தாயாகிய  மரியாளோடும்,  அவருடைய  சகோதரரோடுங்கூட  ஒருமனப்பட்டு,  ஜெபத்திலும்  வேண்டுதலிலும்  தரித்திருந்தார்கள்.  (அப்போஸ்தலர்  1:14)

anggea  ivarga'lellaarum,  sthireega'loadum  iyeasuvin  thaayaagiya  mariyaa'loadum,  avarudaiya  sagoathararoadungkooda  orumanappattu,  jebaththilum  vea'nduthalilum  thariththirunthaarga'l.  (appoasthalar  1:14)

அந்நாட்களிலே,  சீஷர்களில்  ஏறக்குறைய  நூற்றிருபதுபேர்  கூடியிருந்தபோது,  அவர்கள்  நடுவிலே  பேதுரு  எழுந்து  நின்று:  (அப்போஸ்தலர்  1:15)

annaadka'lilea,  seesharga'lil  ea'rakku'raiya  noot’rirubathupear  koodiyirunthapoathu,  avarga'l  naduvilea  peathuru  ezhunthu  nin'ru:  (appoasthalar  1:15)

சகோதரரே,  இயேசுவைப்  பிடித்தவர்களுக்கு  வழிகாட்டின  யூதாசைக்குறித்துப்  பரிசுத்தஆவி  தாவீதின்  வாக்கினால்  முன்  சொன்ன  வேதவாக்கியம்  நிறைவேற  வேண்டியதாயிருந்தது.  (அப்போஸ்தலர்  1:16)

sagoathararea,  iyeasuvaip  pidiththavarga'lukku  vazhikaattina  yoothaasaikku'riththup  parisuththaaavi  thaaveethin  vaakkinaal  mun  sonna  veathavaakkiyam  ni'raivea'ra  vea'ndiyathaayirunthathu.  (appoasthalar  1:16)

அவன்  எங்களில்  ஒருவனாக  எண்ணப்பட்டு,  இந்த  ஊழியத்திலே  பங்கு  பெற்றவனாயிருந்தான்.  (அப்போஸ்தலர்  1:17)

avan  engga'lil  oruvanaaga  e'n'nappattu,  intha  oozhiyaththilea  panggu  pet'ravanaayirunthaan.  (appoasthalar  1:17)

அநீதத்தின்  கூலியினால்  அவன்  ஒரு  நிலத்தைச்  சம்பாதித்து,  தலைகீழாக  விழுந்தான்;  அவன்  வயிறுவெடித்து,  குடல்களெல்லாம்  சரிந்துபோயிற்று.  (அப்போஸ்தலர்  1:18)

aneethaththin  kooliyinaal  avan  oru  nilaththaich  sambaathiththu,  thalaikeezhaaga  vizhunthaan;  avan  vayi'ruvediththu,  kudalga'lellaam  sarinthupoayit’ru.  (appoasthalar  1:18)

இது  எருசலேமிலுள்ள  குடிகள்  யாவருக்கும்  தெரிந்திருக்கிறது;  அதினாலே  அந்த  நிலம்  அவர்களுடைய  பாஷையிலே  இரத்தநிலம்  என்று  அர்த்தங்கொள்ளும்  அக்கெல்தமா  என்னப்பட்டிருக்கிறது.  (அப்போஸ்தலர்  1:19)

ithu  erusaleamilu'l'la  kudiga'l  yaavarukkum  therinthirukki'rathu;  athinaalea  antha  nilam  avarga'ludaiya  baashaiyilea  iraththanilam  en'ru  arththangko'l'lum  akkelthamaa  ennappattirukki'rathu.  (appoasthalar  1:19)

சங்கீத  புஸ்தகத்திலே:  அவனுடைய  வாசஸ்தலம்  பாழாகக்கடவது,  ஒருவனும்  அதில்  வாசம்பண்ணாதிருப்பானாக  என்றும்;  அவனுடைய  கண்காணிப்பை  வேறொருவன்  பெறக்கடவன்  என்றும்  எழுதியிருக்கிறது.  (அப்போஸ்தலர்  1:20)

sanggeetha  pusthagaththilea:  avanudaiya  vaasasthalam  paazhaagakkadavathu,  oruvanum  athil  vaasampa'n'naathiruppaanaaga  en'rum;  avanudaiya  ka'nkaa'nippai  vea'roruvan  pe'rakkadavan  en'rum  ezhuthiyirukki'rathu.  (appoasthalar  1:20)

ஆதலால்,  யோவான்  ஞானஸ்நானங்கொடுத்த  நாள்முதற்கொண்டு,  கர்த்தராகிய  இயேசுவானவர்  நம்மிடத்திலிருந்து  உயர  எடுத்துக்கொள்ளப்பட்ட  நாள்வரைக்கும்,  (அப்போஸ்தலர்  1:21)

aathalaal,  yoavaan  gnaanasnaanangkoduththa  naa'lmutha’rko'ndu,  karththaraagiya  iyeasuvaanavar  nammidaththilirunthu  uyara  eduththukko'l'lappatta  naa'lvaraikkum,  (appoasthalar  1:21)

அவர்  நம்மிடத்தில்  சஞ்சரித்திருந்த  காலங்களிலெல்லாம்  எங்களுடனேகூட  இருந்த  மனுஷர்களில்  ஒருவன்  அவர்  உயிரோடெழுந்ததைக்குறித்து,  எங்களுடனேகூடச்  சாட்சியாக  ஏற்படுத்தப்படவேண்டும்  என்றான்.  (அப்போஸ்தலர்  1:22)

avar  nammidaththil  sagnchariththiruntha  kaalangga'lilellaam  engga'ludaneakooda  iruntha  manusharga'lil  oruvan  avar  uyiroadezhunthathaikku'riththu,  engga'ludaneakoodach  saadchiyaaga  ea’rpaduththappadavea'ndum  en'raan.  (appoasthalar  1:22)

அப்பொழுது  அவர்கள்  யுஸ்து  என்னும்  மறுநாமமுள்ள  பர்சபா  என்னப்பட்ட  யோசேப்பும்  மத்தியாவும்  ஆகிய  இவ்விரண்டுபேரையும்  நிறுத்தி:  (அப்போஸ்தலர்  1:23)

appozhuthu  avarga'l  yusthu  ennum  ma'runaamamu'l'la  barsabaa  ennappatta  yoaseappum  maththiyaavum  aagiya  ivvira'ndupearaiyum  ni'ruththi:  (appoasthalar  1:23)

எல்லாருடைய  இருதயங்களையும்  அறிந்திருக்கிற  கர்த்தாவே,  யூதாஸ்  என்பவன்  தனக்குரிய  இடத்துக்குப்  போகும்படி  இழந்துபோன  இந்த  ஊழியத்திலும்  இந்த  அப்போஸ்தலப்பட்டத்திலும்  பங்கு  பெறுவதற்காக,  (அப்போஸ்தலர்  1:24)

ellaarudaiya  iruthayangga'laiyum  a'rinthirukki'ra  karththaavea,  yoothaas  enbavan  thanakkuriya  idaththukkup  poagumpadi  izhanthupoana  intha  oozhiyaththilum  intha  appoasthalappattaththilum  panggu  pe'ruvatha’rkaaga,  (appoasthalar  1:24)

இவ்விரண்டு  பேரில்  தேவரீர்  தெரிந்துகொண்டவனை  எங்களுக்குக்  காண்பித்தருளும்  என்று  ஜெபம்பண்ணி;  (அப்போஸ்தலர்  1:25)

ivvira'ndu  pearil  theavareer  therinthuko'ndavanai  engga'lukkuk  kaa'nbiththaru'lum  en'ru  jebampa'n'ni;  (appoasthalar  1:25)

பின்பு,  அவர்களைக்குறித்துச்  சீட்டுப்போட்டார்கள்;  சீட்டு  மத்தியாவின்பேருக்கு  விழுந்தது;  அப்பொழுது  அவன்  பதினொரு  அப்போஸ்தலருடனே  சேர்த்துக்கொள்ளப்பட்டான்.  (அப்போஸ்தலர்  1:26)

pinbu,  avarga'laikku'riththuch  seettuppoattaarga'l;  seettu  maththiyaavinpearukku  vizhunthathu;  appozhuthu  avan  pathinoru  appoasthalarudanea  searththukko'l'lappattaan.  (appoasthalar  1:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!