Monday, April 11, 2016

1 Korinthiyar 15 | 1 கொரிந்தியர் 15 | 1 Corinthians 15

அன்றியும்,  சகோதரரே,  நான்  உங்களுக்குப்  பிரசங்கித்த  சுவிசேஷத்தை  மறுபடியும்  உங்களுக்குத்  தெரியப்படுத்துகிறேன்;  நீங்களும்  அதை  ஏற்றுக்கொண்டு,  அதிலே  நிலைத்திருக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  15:1)

an'riyum,  sagoathararea,  naan  ungga'lukkup  pirasanggiththa  suviseashaththai  ma'rupadiyum  ungga'lukkuth  theriyappaduththugi'rean;  neengga'lum  athai  eat’rukko'ndu,  athilea  nilaiththirukki'reerga'l.  (1korinthiyar    15:1)

நான்  உங்களுக்குப்  பிரசங்கித்தபிரகாரமாய்,  நீங்கள்  அதைக்  கைக்கொண்டிருந்தால்,  அதினாலே  நீங்கள்  இரட்சிக்கப்படுவீர்கள்;  மற்றப்படி  உங்கள்  விசுவாசம்  விருதாவாயிருக்குமே.  (1கொரிந்தியர்  15:2)

naan  ungga'lukkup  pirasanggiththapiragaaramaay,  neengga'l  athaik  kaikko'ndirunthaal,  athinaalea  neengga'l  iradchikkappaduveerga'l;  mat’rappadi  ungga'l  visuvaasam  viruthaavaayirukkumea.  (1korinthiyar    15:2)

நான்  அடைந்ததும்  உங்களுக்குப்  பிரதானமாக  ஒப்புவித்ததும்  என்னவென்றால்,  கிறிஸ்துவானவர்  வேதவாக்கியங்களின்படி  நமது  பாவங்களுக்காக  மரித்து,  (1கொரிந்தியர்  15:3)

naan  adainthathum  ungga'lukkup  pirathaanamaaga  oppuviththathum  ennaven'raal,  ki'risthuvaanavar  veathavaakkiyangga'linpadi  namathu  paavangga'lukkaaga  mariththu,  (1korinthiyar    15:3)

அடக்கம்பண்ணப்பட்டு,  வேதவாக்கியங்களின்படி  மூன்றாம்  நாளில்  உயிர்த்தெழுந்து,  (1கொரிந்தியர்  15:4)

adakkampa'n'nappattu,  veathavaakkiyangga'linpadi  moon'raam  naa'lil  uyirththezhunthu,  (1korinthiyar    15:4)

கேபாவுக்கும்,  பின்பு  பன்னிருவருக்கும்  தரிசனமானார்.  (1கொரிந்தியர்  15:5)

keapaavukkum,  pinbu  panniruvarukkum  tharisanamaanaar.  (1korinthiyar    15:5)

அதன்பின்பு  அவர்  ஐந்நூறுபேருக்கு  அதிகமான  சகோதரருக்கும்  ஒரேவேளையில்  தரிசனமானார்;  அவர்களில்  அநேகர்  இந்நாள்வரைக்கும்  இருக்கிறார்கள்,  சிலர்  மாத்திரம்  நித்திரையடைந்தார்கள்.  (1கொரிந்தியர்  15:6)

athanpinbu  avar  ainnoo'rupearukku  athigamaana  sagoathararukkum  oreavea'laiyil  tharisanamaanaar;  avarga'lil  aneagar  innaa'lvaraikkum  irukki'raarga'l,  silar  maaththiram  niththiraiyadainthaarga'l.  (1korinthiyar    15:6)

பின்பு  யாக்கோபுக்கும்,  அதன்பின்பு  அப்போஸ்தலரெல்லாருக்கும்  தரிசனமானார்.  (1கொரிந்தியர்  15:7)

pinbu  yaakkoabukkum,  athanpinbu  appoasthalarellaarukkum  tharisanamaanaar.  (1korinthiyar    15:7)

எல்லாருக்கும்  பின்பு,  அகாலப்பிறவிபோன்ற  எனக்கும்  தரிசனமானார்.  (1கொரிந்தியர்  15:8)

ellaarukkum  pinbu,  agaalappi'ravipoan'ra  enakkum  tharisanamaanaar.  (1korinthiyar    15:8)

நான்  அப்போஸ்தலரெல்லாரிலும்  சிறியவனாயிருக்கிறேன்;  தேவனுடைய  சபையைத்  துன்பப்படுத்தினதினாலே,  நான்  அப்போஸ்தலனென்று  பேர்பெறுவதற்கும்  பாத்திரன்  அல்ல.  (1கொரிந்தியர்  15:9)

naan  appoasthalarellaarilum  si'riyavanaayirukki'rean;  theavanudaiya  sabaiyaith  thunbappaduththinathinaalea,  naan  appoasthalanen'ru  pearpe'ruvatha’rkum  paaththiran  alla.  (1korinthiyar    15:9)

ஆகிலும்  நான்  இருக்கிறது  தேவகிருபையினாலே  இருக்கிறேன்;  அவர்  எனக்கு  அருளிய  கிருபை  விருதாவாயிருக்கவில்லை;  அவர்களெல்லாரிலும்  நான்  அதிகமாய்ப்  பிரயாசப்பட்டேன்;  ஆகிலும்  நான்  அல்ல,  என்னுடனே  இருக்கிற  தேவகிருபையே  அப்படிச்  செய்தது.  (1கொரிந்தியர்  15:10)

aagilum  naan  irukki'rathu  theavakirubaiyinaalea  irukki'rean;  avar  enakku  aru'liya  kirubai  viruthaavaayirukkavillai;  avarga'lellaarilum  naan  athigamaayp  pirayaasappattean;  aagilum  naan  alla,  ennudanea  irukki'ra  theavakirubaiyea  appadich  seythathu.  (1korinthiyar    15:10)

ஆகையால்  நானாகிலும்  அவர்களாகிலும்  இப்படியே  பிரசங்கித்துவருகிறோம்,  நீங்களும்  இப்படியே  விசுவாசித்திருக்கிறீர்கள்.  (1கொரிந்தியர்  15:11)

aagaiyaal  naanaagilum  avarga'laagilum  ippadiyea  pirasanggiththuvarugi'roam,  neengga'lum  ippadiyea  visuvaasiththirukki'reerga'l.  (1korinthiyar    15:11)

கிறிஸ்து  மரித்தோரிலிருந்து  எழுந்தாரென்று  பிரசங்கிக்கப்பட்டிருக்க,  மரித்தோரின்  உயிர்த்தெழுதலில்லையென்று  உங்களில்  சிலர்  எப்படிச்  சொல்லலாம்?  (1கொரிந்தியர்  15:12)

ki'risthu  mariththoarilirunthu  ezhunthaaren'ru  pirasanggikkappattirukka,  mariththoarin  uyirththezhuthalillaiyen'ru  ungga'lil  silar  eppadich  sollalaam?  (1korinthiyar    15:12)

மரித்தோரின்  உயிர்த்தெழுதல்  இல்லாவிட்டால்,  கிறிஸ்துவும்  எழுந்திருக்கவில்லையே.  (1கொரிந்தியர்  15:13)

mariththoarin  uyirththezhuthal  illaavittaal,  ki'risthuvum  ezhunthirukkavillaiyea.  (1korinthiyar    15:13)

கிறிஸ்து  எழுந்திருக்கவில்லையென்றால்,  எங்கள்  பிரசங்கமும்  விருதா,  உங்கள்  விசுவாசமும்  விருதா.  (1கொரிந்தியர்  15:14)

ki'risthu  ezhunthirukkavillaiyen'raal,  engga'l  pirasanggamum  viruthaa,  ungga'l  visuvaasamum  viruthaa.  (1korinthiyar    15:14)

மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  தேவன்  எழுப்பாத  கிறிஸ்துவை  அவர்  எழுப்பினாரென்று  நாங்கள்  தேவனைக்குறித்துச்  சாட்சிசொன்னதினாலே,  தேவனுக்காகப்  பொய்ச்சாட்சி  சொல்லுகிறவர்களாகவும்  காணப்படுவோமே.  (1கொரிந்தியர்  15:15)

mariththoar  uyirththezhaavittaal,  theavan  ezhuppaatha  ki'risthuvai  avar  ezhuppinaaren'ru  naangga'l  theavanaikku'riththuch  saadchisonnathinaalea,  theavanukkaagap  poychsaadchi  sollugi'ravarga'laagavum  kaa'nappaduvoamea.  (1korinthiyar    15:15)

மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  கிறிஸ்துவும்  எழுந்திருக்கவில்லை.  (1கொரிந்தியர்  15:16)

mariththoar  uyirththezhaavittaal,  ki'risthuvum  ezhunthirukkavillai.  (1korinthiyar    15:16)

கிறிஸ்து  எழுந்திராவிட்டால்,  உங்கள்  விசுவாசம்  வீணாயிருக்கும்;  நீங்கள்  இன்னும்  உங்கள்  பாவங்களில்  இருப்பீர்கள்.  (1கொரிந்தியர்  15:17)

ki'risthu  ezhunthiraavittaal,  ungga'l  visuvaasam  vee'naayirukkum;  neengga'l  innum  ungga'l  paavangga'lil  iruppeerga'l.  (1korinthiyar    15:17)

கிறிஸ்துவுக்குள்  நித்திரையடைந்தவர்களும்  கெட்டிருப்பார்களே.  (1கொரிந்தியர்  15:18)

ki'risthuvukku'l  niththiraiyadainthavarga'lum  kettiruppaarga'lea.  (1korinthiyar    15:18)

இம்மைக்காகமாத்திரம்  நாம்  கிறிஸ்துவின்மேல்  நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால்,  எல்லா  மனுஷரைப்பார்க்கிலும்  பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.  (1கொரிந்தியர்  15:19)

immaikkaagamaaththiram  naam  ki'risthuvinmeal  nambikkaiyu'l'lavarga'laayirunthaal,  ellaa  manusharaippaarkkilum  parithabikkappadaththakkavarga'laayiruppoam.  (1korinthiyar    15:19)

கிறிஸ்துவோ  மரித்தோரிலிருந்தெழுந்து,  நித்திரையடைந்தவர்களில்  முதற்பலனானார்.  (1கொரிந்தியர்  15:20)

ki'risthuvoa  mariththoarilirunthezhunthu,  niththiraiyadainthavarga'lil  mutha’rpalanaanaar.  (1korinthiyar    15:20)

மனுஷனால்  மரணம்  உண்டானபடியால்,  மனுஷனால்  மரித்தோரின்  உயிர்த்தெழுதலும்  உண்டாயிற்று.  (1கொரிந்தியர்  15:21)

manushanaal  mara'nam  u'ndaanapadiyaal,  manushanaal  mariththoarin  uyirththezhuthalum  u'ndaayit'ru.  (1korinthiyar    15:21)

ஆதாமுக்குள்  எல்லாரும்  மரிக்கிறதுபோல,  கிறிஸ்துவுக்குள்  எல்லாரும்  உயிர்ப்பிக்கப்படுவார்கள்.  (1கொரிந்தியர்  15:22)

aathaamukku'l  ellaarum  marikki'rathupoala,  ki'risthuvukku'l  ellaarum  uyirppikkappaduvaarga'l.  (1korinthiyar    15:22)

அவனவன்  தன்தன்  வரிசையிலே  உயிர்ப்பிக்கப்படுவான்,  முதற்பலனானவர்  கிறிஸ்து;  பின்பு  அவர்  வருகையில்  அவருடையவர்கள்  உயிர்ப்பிக்கப்படுவார்கள்.  (1கொரிந்தியர்  15:23)

avanavan  thanthan  varisaiyilea  uyirppikkappaduvaan,  mutha’rpalanaanavar  ki'risthu;  pinbu  avar  varugaiyil  avarudaiyavarga'l  uyirppikkappaduvaarga'l.  (1korinthiyar    15:23)

அதன்பின்பு  முடிவு  உண்டாகும்;  அப்பொழுது  அவர்  சகல  துரைத்தனத்தையும்  சகல  அதிகாரத்தையும்  வல்லமையையும்  பரிகரித்து,  தேவனும்  பிதாவுமாயிருக்கிறவருக்கு  ராஜ்யத்தை  ஒப்புக்கொடுப்பார்.  (1கொரிந்தியர்  15:24)

athanpinbu  mudivu  u'ndaagum;  appozhuthu  avar  sagala  thuraiththanaththaiyum  sagala  athigaaraththaiyum  vallamaiyaiyum  parigariththu,  theavanum  pithaavumaayirukki'ravarukku  raajyaththai  oppukkoduppaar.  (1korinthiyar    15:24)

எல்லாச்  சத்துருக்களையும்  தமது  பாதத்திற்குக்  கீழாக்கிப்போடும்வரைக்கும்,  அவர்  ஆளுகைசெய்யவேண்டியது.  (1கொரிந்தியர்  15:25)

ellaach  saththurukka'laiyum  thamathu  paathaththi’rkuk  keezhaakkippoadumvaraikkum,  avar  aa'lugaiseyyavea'ndiyathu.  (1korinthiyar    15:25)

பரிகரிக்கப்படுங்  கடைசிச்  சத்துரு  மரணம்.  (1கொரிந்தியர்  15:26)

parigarikkappadung  kadaisich  saththuru  mara'nam.  (1korinthiyar    15:26)

சகலத்தையும்  அவருடைய  பாதத்திற்குக்  கீழ்ப்படுத்தினாரே;  ஆகிலும்  சகலமும்  அவருக்குக்  கீழ்ப்படுத்தப்பட்டதென்று  சொல்லியிருக்கும்போது,  சகலத்தையும்  அவருக்குக்  கீழ்ப்படுத்தினவர்  கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது  வெளியரங்கமாயிருக்கிறது.  (1கொரிந்தியர்  15:27)

sagalaththaiyum  avarudaiya  paathaththi’rkuk  keezhppaduththinaarea;  aagilum  sagalamum  avarukkuk  keezhppaduththappattathen'ru  solliyirukkumpoathu,  sagalaththaiyum  avarukkuk  keezhppaduththinavar  keezhppaduththappadavillaiyenbathu  ve'liyaranggamaayirukki'rathu.  (1korinthiyar    15:27)

சகலமும்  அவருக்குக்  கீழ்ப்பட்டிருக்கும்போது,  தேவனே  சகலத்திலும்  சகலமுமாயிருப்பதற்கு,  குமாரன்  தாமும்  தமக்குச்  சகலத்தையும்  கீழ்ப்படுத்தினவருக்குக்  கீழ்ப்பட்டிருப்பார்.  (1கொரிந்தியர்  15:28)

sagalamum  avarukkuk  keezhppattirukkumpoathu,  theavanea  sagalaththilum  sagalamumaayiruppatha’rku,  kumaaran  thaamum  thamakkuch  sagalaththaiyum  keezhppaduththinavarukkuk  keezhppattiruppaar.  (1korinthiyar    15:28)

மேலும்  மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  மரித்தவர்களுக்காக  ஞானஸ்நானம்  பெறுகிறவர்கள்  என்ன  செய்வார்கள்?  மரித்தவர்களுக்காக  ஏன்  ஞானஸ்நானம்  பெறுகிறார்கள்?  (1கொரிந்தியர்  15:29)

mealum  mariththoar  uyirththezhaavittaal,  mariththavarga'lukkaaga  gnaanasnaanam  pe'rugi'ravarga'l  enna  seyvaarga'l?  mariththavarga'lukkaaga  ean  gnaanasnaanam  pe'rugi'raarga'l?  (1korinthiyar    15:29)

நாங்களும்  ஏன்  எந்நேரமும்  நாசமோசத்திற்கு  ஏதுவாயிருக்கிறோம்?  (1கொரிந்தியர்  15:30)

naangga'lum  ean  ennearamum  naasamoasaththi’rku  eathuvaayirukki'roam?  (1korinthiyar    15:30)

நான்  அநுதினமும்  சாகிறேன்;  அதை  நம்முடைய  கர்த்தராகிய  கிறிஸ்து  இயேசுவினால்  உங்களைக்குறித்து,  நான்  பாராட்டுகிற  மேன்மையைக்கொண்டு  சத்தியமாய்ச்  சொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  15:31)

naan  anuthinamum  saagi'rean;  athai  nammudaiya  karththaraagiya  ki'risthu  iyeasuvinaal  ungga'laikku'riththu,  naan  paaraattugi'ra  meanmaiyaikko'ndu  saththiyamaaych  sollugi'rean.  (1korinthiyar    15:31)

நான்  எபேசுவிலே  துஷ்டமிருகங்களுடனே  போராடினேனென்று  மனுஷர்  வழக்கமாய்ச்  சொல்லுகிறேன்;  அப்படிப்  போராடினதினாலே  எனக்குப்  பிரயோஜனமென்ன?  மரித்தோர்  உயிர்த்தெழாவிட்டால்,  புசிப்போம்  குடிப்போம்,  நாளைக்குச்  சாவோம்  என்று  சொல்லலாமே?  (1கொரிந்தியர்  15:32)

naan  ebeasuvilea  thushdamirugangga'ludanea  poaraadineanen'ru  manushar  vazhakkamaaych  sollugi'rean;  appadip  poaraadinathinaalea  enakkup  pirayoajanamenna?  mariththoar  uyirththezhaavittaal,  pusippoam  kudippoam,  naa'laikkuch  saavoam  en'ru  sollalaamea?  (1korinthiyar    15:32)

மோசம்போகாதிருங்கள்;  ஆகாத  சம்பாஷணைகள்  நல்லொழுக்கங்களைக்  கெடுக்கும்.  (1கொரிந்தியர்  15:33)

moasampoagaathirungga'l;  aagaatha  sambaasha'naiga'l  nallozhukkangga'laik  kedukkum.  (1korinthiyar    15:33)

நீங்கள்  பாவஞ்செய்யாமல்  நீதிக்கேற்க  விழித்துக்கொண்டு,  தெளிந்தவர்களாயிருங்கள்;  சிலர்  தேவனைப்பற்றி  அறிவில்லாதிருக்கிறார்களே;  உங்களுக்கு  வெட்கமுண்டாக  இதைச்  சொல்லுகிறேன்.  (1கொரிந்தியர்  15:34)

neengga'l  paavagnseyyaamal  neethikkea’rka  vizhiththukko'ndu,  the'linthavarga'laayirungga'l;  silar  theavanaippat’ri  a'rivillaathirukki'raarga'lea;  ungga'lukku  vedkamu'ndaaga  ithaich  sollugi'rean.  (1korinthiyar    15:34)

ஆகிலும்,  மரித்தோர்  எப்படி  எழுந்திருப்பார்கள்,  எப்படிப்பட்ட  சரீரத்தோடே  வருவார்களென்று  ஒருவன்  சொல்வானாகில்,  (1கொரிந்தியர்  15:35)

aagilum,  mariththoar  eppadi  ezhunthiruppaarga'l,  eppadippatta  sareeraththoadea  varuvaarga'len'ru  oruvan  solvaanaagil,  (1korinthiyar    15:35)

புத்தியீனனே,  நீ  விதைக்கிற  விதை  செத்தாலொழிய  உயிர்க்கமாட்டாதே.  (1கொரிந்தியர்  15:36)

buththiyeenanea,  nee  vithaikki'ra  vithai  seththaalozhiya  uyirkkamaattaathea.  (1korinthiyar    15:36)

நீ  விதைக்கிறபோது,  இனி  உண்டாகும்  மேனியை  விதையாமல்,  கோதுமை,  அல்லது  மற்றொரு  தானியத்தினுடைய  வெறும்  விதையையே  விதைக்கிறாய்.  (1கொரிந்தியர்  15:37)

nee  vithaikki'rapoathu,  ini  u'ndaagum  meaniyai  vithaiyaamal,  koathumai,  allathu  mat’roru  thaaniyaththinudaiya  ve'rum  vithaiyaiyea  vithaikki'raay.  (1korinthiyar    15:37)

அதற்குத்  தேவன்  தமது  சித்தத்தின்படியே  மேனியைக்  கொடுக்கிறார்;  விதை  வகைகள்  ஒவ்வொன்றிற்கும்  அததற்கேற்ற  மேனியையே  கொடுக்கிறார்.  (1கொரிந்தியர்  15:38)

atha’rkuth  theavan  thamathu  siththaththinpadiyea  meaniyaik  kodukki'raar;  vithai  vagaiga'l  ovvon'ri’rkum  athatha’rkeat’ra  meaniyaiyea  kodukki'raar.  (1korinthiyar    15:38)

எல்லா  மாம்சமும்  ஒரேவிதமான  மாம்சமல்ல;  மனுஷருடைய  மாம்சம்  வேறே,  மிருகங்களுடைய  மாம்சம்  வேறே,  மச்சங்களுடைய  மாம்சம்  வேறே,  பறவைகளுடைய  மாம்சம்  வேறே.  (1கொரிந்தியர்  15:39)

ellaa  maamsamum  oreavithamaana  maamsamalla;  manusharudaiya  maamsam  vea'rea,  mirugangga'ludaiya  maamsam  vea'rea,  machchangga'ludaiya  maamsam  vea'rea,  pa'ravaiga'ludaiya  maamsam  vea'rea.  (1korinthiyar    15:39)

வானத்துக்குரிய  மேனிகளுமுண்டு,  பூமிக்குரிய  மேனிகளுமுண்டு;  வானத்துக்குரிய  மேனிகளுடைய  மகிமையும்  வேறே,  பூமிக்குரிய  மேனிகளுடைய  மகிமையும்  வேறே;  (1கொரிந்தியர்  15:40)

vaanaththukkuriya  meaniga'lumu'ndu,  boomikkuriya  meaniga'lumu'ndu;  vaanaththukkuriya  meaniga'ludaiya  magimaiyum  vea'rea,  boomikkuriya  meaniga'ludaiya  magimaiyum  vea'rea;  (1korinthiyar    15:40)

சூரியனுடைய  மகிமையும்  வேறே,  சந்திரனுடைய  மகிமையும்  வேறே,  நட்சத்திரங்களுடைய  மகிமையும்  வேறே;  மகிமையிலே  நட்சத்திரத்துக்கு  நட்சத்திரம்  விசேஷித்திருக்கிறது.  (1கொரிந்தியர்  15:41)

sooriyanudaiya  magimaiyum  vea'rea,  santhiranudaiya  magimaiyum  vea'rea,  nadchaththirangga'ludaiya  magimaiyum  vea'rea;  magimaiyilea  nadchaththiraththukku  nadchaththiram  viseashiththirukki'rathu.  (1korinthiyar    15:41)

மரித்தோரின்  உயிர்த்தெழுதலும்  அப்படியே  இருக்கும்.  அழிவுள்ளதாய்  விதைக்கப்படும்,  அழிவில்லாததாய்  எழுந்திருக்கும்;  (1கொரிந்தியர்  15:42)

mariththoarin  uyirththezhuthalum  appadiyea  irukkum.  azhivu'l'lathaay  vithaikkappadum,  azhivillaathathaay  ezhunthirukkum;  (1korinthiyar    15:42)

கனவீனமுள்ளதாய்  விதைக்கப்படும்,  மகிமையுள்ளதாய்  எழுந்திருக்கும்;  பலவீனமுள்ளதாய்  விதைக்கப்படும்,  பலமுள்ளதாய்  எழுந்திருக்கும்.  (1கொரிந்தியர்  15:43)

kanaveenamu'l'lathaay  vithaikkappadum,  magimaiyu'l'lathaay  ezhunthirukkum;  balaveenamu'l'lathaay  vithaikkappadum,  balamu'l'lathaay  ezhunthirukkum.  (1korinthiyar    15:43)

ஜென்மசரீரம்  விதைக்கப்படும்,  ஆவிக்குரிய  சரீரம்  எழுந்திருக்கும்;  ஜென்ம  சரீரமுமுண்டு,  ஆவிக்குரிய  சரீரமுமுண்டு.  (1கொரிந்தியர்  15:44)

jenmasareeram  vithaikkappadum,  aavikkuriya  sareeram  ezhunthirukkum;  jenma  sareeramumu'ndu,  aavikkuriya  sareeramumu'ndu.  (1korinthiyar    15:44)

அந்தப்படியே  முந்தின  மனுஷனாகிய  ஆதாம்  ஜீவாத்துமாவானான்  என்றெழுதியிருக்கிறது;  பிந்தின  ஆதாம்  உயிர்ப்பிக்கிற  ஆவியானார்.  (1கொரிந்தியர்  15:45)

anthappadiyea  munthina  manushanaagiya  aathaam  jeevaaththumaavaanaan  en'rezhuthiyirukki'rathu;  pinthina  aathaam  uyirppikki'ra  aaviyaanaar.  (1korinthiyar    15:45)

ஆகிலும்  ஆவிக்குரிய  சரீரம்  முந்தினதல்ல,  ஜென்மசரீரமே  முந்தினது;  ஆவிக்குரிய  சரீரம்  பிந்தினது.  (1கொரிந்தியர்  15:46)

aagilum  aavikkuriya  sareeram  munthinathalla,  jenmasareeramea  munthinathu;  aavikkuriya  sareeram  pinthinathu.  (1korinthiyar    15:46)

முந்தின  மனுஷன்  பூமியிலிருந்துண்டான  மண்ணானவன்;  இரண்டாம்  மனுஷன்  வானத்திலிருந்து  வந்த  கர்த்தர்.  (1கொரிந்தியர்  15:47)

munthina  manushan  boomiyilirunthu'ndaana  ma'n'naanavan;  ira'ndaam  manushan  vaanaththilirunthu  vantha  karththar.  (1korinthiyar    15:47)

மண்ணானவன்  எப்படிப்பட்டவனோ  மண்ணானவர்களும்  அப்படிப்பட்டவர்களே;  வானத்துக்குரியவர்  எப்படிப்பட்டவரோ,  வானத்துக்குரியவர்களும்  அப்படிப்பட்டவர்களே.  (1கொரிந்தியர்  15:48)

ma'n'naanavan  eppadippattavanoa  ma'n'naanavarga'lum  appadippattavarga'lea;  vaanaththukkuriyavar  eppadippattavaroa,  vaanaththukkuriyavarga'lum  appadippattavarga'lea.  (1korinthiyar    15:48)

மேலும்  மண்ணானவனுடைய  சாயலை  நாம்  அணிந்திருக்கிறதுபோல,  வானவருடைய  சாயலையும்  அணிந்துகொள்வோம்.  (1கொரிந்தியர்  15:49)

mealum  ma'n'naanavanudaiya  saayalai  naam  a'ninthirukki'rathupoala,  vaanavarudaiya  saayalaiyum  a'ninthuko'lvoam.  (1korinthiyar    15:49)

சகோதரரே,  நான்  சொல்லுகிறதென்னவெனில்,  மாம்சமும்  இரத்தமும்  தேவனுடைய  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கமாட்டாது;  அழிவுள்ளது  அழியாமையைச்  சுதந்தரிப்பதுமில்லை.  (1கொரிந்தியர்  15:50)

sagoathararea,  naan  sollugi'rathennavenil,  maamsamum  iraththamum  theavanudaiya  raajyaththaich  suthantharikkamaattaathu;  azhivu'l'lathu  azhiyaamaiyaich  suthantharippathumillai.  (1korinthiyar    15:50)

இதோ,  ஒரு  இரகசியத்தை  உங்களுக்கு  அறிவிக்கிறேன்;  நாமெல்லாரும்  நித்திரையடைவதில்லை;  ஆகிலும்  கடைசி  எக்காளம்  தொனிக்கும்போது,  ஒரு  நிமிஷத்திலே,  ஒரு  இமைப்பொழுதிலே,  நாமெல்லாரும்  மறுரூபமாக்கப்படுவோம்.  (1கொரிந்தியர்  15:51)

ithoa,  oru  iragasiyaththai  ungga'lukku  a'rivikki'rean;  naamellaarum  niththiraiyadaivathillai;  aagilum  kadaisi  ekkaa'lam  thonikkumpoathu,  oru  nimishaththilea,  oru  imaippozhuthilea,  naamellaarum  ma'ruroobamaakkappaduvoam.  (1korinthiyar    15:51)

எக்காளம்  தொனிக்கும்,  அப்பொழுது  மரித்தோர்  அழிவில்லாதவர்களாய்  எழுந்திருப்பார்கள்;  நாமும்  மறுரூபமாக்கப்படுவோம்.  (1கொரிந்தியர்  15:52)

ekkaa'lam  thonikkum,  appozhuthu  mariththoar  azhivillaathavarga'laay  ezhunthiruppaarga'l;  naamum  ma'ruroobamaakkappaduvoam.  (1korinthiyar    15:52)

அழிவுள்ளதாகிய  இது  அழியாமையையும்,  சாவுக்கேதுவாகிய  இது  சாவாமையையும்  தரித்துக்கொள்ளவேண்டும்.  (1கொரிந்தியர்  15:53)

azhivu'l'lathaagiya  ithu  azhiyaamaiyaiyum,  saavukkeathuvaagiya  ithu  saavaamaiyaiyum  thariththukko'l'lavea'ndum.  (1korinthiyar    15:53)

அழிவுள்ளதாகிய  இது  அழியாமையையும்,  சாவுக்கேதுவாகிய  இது  சாவாமையையும்  தரித்துக்கொள்ளும்போது,  மரணம்  ஜெயமாக  விழுங்கப்பட்டது  என்று  எழுதியிருக்கிற  வார்த்தை  நிறைவேறும்.  (1கொரிந்தியர்  15:54)

azhivu'l'lathaagiya  ithu  azhiyaamaiyaiyum,  saavukkeathuvaagiya  ithu  saavaamaiyaiyum  thariththukko'l'lumpoathu,  mara'nam  jeyamaaga  vizhunggappattathu  en'ru  ezhuthiyirukki'ra  vaarththai  ni'raivea'rum.  (1korinthiyar    15:54)

மரணமே!  உன்  கூர்  எங்கே?  பாதாளமே!  உன்  ஜெயம்  எங்கே?  (1கொரிந்தியர்  15:55)

mara'namea!  un  koor  enggea?  paathaa'lamea!  un  jeyam  enggea?  (1korinthiyar    15:55)

மரணத்தின்  கூர்  பாவம்,  பாவத்தின்  பெலன்  நியாயப்பிரமாணம்.  (1கொரிந்தியர்  15:56)

mara'naththin  koor  paavam,  paavaththin  belan  niyaayappiramaa'nam.  (1korinthiyar    15:56)

நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவினாலே  நமக்கு  ஜெயங்கொடுக்கிற  தேவனுக்கு  ஸ்தோத்திரம்.  (1கொரிந்தியர்  15:57)

nammudaiya  karththaraagiya  iyeasuki'risthuvinaalea  namakku  jeyangkodukki'ra  theavanukku  sthoaththiram.  (1korinthiyar    15:57)

ஆகையால்,  எனக்குப்  பிரியமான  சகோதரரே,  கர்த்தருக்குள்  நீங்கள்  படுகிற  பிரயாசம்  விருதாவாயிராதென்று  அறிந்து,  நீங்கள்  உறுதிப்பட்டவர்களாயும்,  அசையாதவர்களாயும்,  கர்த்தருடைய  கிரியையிலே  எப்பொழுதும்  பெருகுகிறவர்களாயும்  இருப்பீர்களாக.  (1கொரிந்தியர்  15:58)

aagaiyaal,  enakkup  piriyamaana  sagoathararea,  karththarukku'l  neengga'l  padugi'ra  pirayaasam  viruthaavaayiraathen'ru  a'rinthu,  neengga'l  u'ruthippattavarga'laayum,  asaiyaathavarga'laayum,  karththarudaiya  kiriyaiyilea  eppozhuthum  perugugi'ravarga'laayum  iruppeerga'laaga.  (1korinthiyar    15:58)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!