Wednesday, March 23, 2016

Pirasanggi 9 | பிரசங்கி 9 | Ecclesiastes 9


இவை  எல்லாவற்றையும்  நான்  என்  மனதிலே  வகையறுக்கும்படிக்குச்  சிந்தித்தேன்;  நீதிமான்களும்  ஞானிகளும்,  தங்கள்  கிரியைகளுடன்,  தேவனுடைய  கைவசமாயிருக்கிறார்கள்;  தனக்குமுன்  இருக்கிறவர்களைக்கொண்டு  ஒருவனும்  விருப்பையாவது  வெறுப்பையாவது  அறியான்.  (பிரசங்கி  9:1)

ivai  ellaavat’raiyum  naan  en  manathilea  vagaiya'rukkumpadikkuch  sinthiththean;  neethimaanga'lum  gnaaniga'lum,  thangga'l  kiriyaiga'ludan,  theavanudaiya  kaivasamaayirukki'raarga'l;  thanakkumun  irukki'ravarga'laikko'ndu  oruvanum  viruppaiyaavathu  ve'ruppaiyaavathu  a'riyaan.  (pirasanggi  9:1)

எல்லாருக்கும்  எல்லாம்  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கும்;  சன்மார்க்கனுக்கும்  துன்மார்க்கனுக்கும்,  நற்குணமும்  சுத்தமுமுள்ளவனுக்கும்  சுத்தமில்லாதவனுக்கும்,  பலியிடுகிறவனுக்கும்  பலியிடாதவனுக்கும்,  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கும்;  நல்லவனுக்கு  எப்படியோ  பொல்லாதவனுக்கும்  அப்படியே;  ஆணையிடுகிறவனுக்கும்  ஆணையிடப்  பயப்படுகிறவனுக்கும்  சமமாய்ச்  சம்பவிக்கும்.  (பிரசங்கி  9:2)

ellaarukkum  ellaam  oreavithamaaych  sambavikkum;  sanmaarkkanukkum  thunmaarkkanukkum,  na’rku'namum  suththamumu'l'lavanukkum  suththamillaathavanukkum,  baliyidugi'ravanukkum  baliyidaathavanukkum,  oreavithamaaych  sambavikkum;  nallavanukku  eppadiyoa  pollaathavanukkum  appadiyea;  aa'naiyidugi'ravanukkum  aa'naiyidap  bayappadugi'ravanukkum  samamaaych  sambavikkum.  (pirasanggi  9:2)

எல்லாருக்கும்  ஒரேவிதமாய்ச்  சம்பவிக்கிறது  சூரியனுக்குக்  கீழே  நடக்கிறதெல்லாவற்றிலும்  விசேஷித்த  தீங்காம்;  ஆதலால்  மனுபுத்திரரின்  இருதயம்  தீமையினால்  நிறைந்திருக்கிறது;  அவர்கள்  உயிரோடிருக்கும்  நாளளவும்  அவர்கள்  இருதயம்  பைத்தியங்கொண்டிருந்து,  பின்பு  அவர்கள்  செத்தவர்களிடத்திற்குப்  போகிறார்கள்.  (பிரசங்கி  9:3)

ellaarukkum  oreavithamaaych  sambavikki'rathu  sooriyanukkuk  keezhea  nadakki'rathellaavat’rilum  viseashiththa  theenggaam;  aathalaal  manupuththirarin  iruthayam  theemaiyinaal  ni'rainthirukki'rathu;  avarga'l  uyiroadirukkum  naa'la'lavum  avarga'l  iruthayam  paiththiyangko'ndirunthu,  pinbu  avarga'l  seththavarga'lidaththi’rkup  poagi'raarga'l.  (pirasanggi  9:3)

இதற்கு  நீங்கலாயிருக்கிறவன்  யார்?  உயிரோடிருக்கிற  அனைவரிடத்திலும்  நம்பிக்கையுண்டு;  செத்த  சிங்கத்தைப்பார்க்கிலும்  உயிருள்ள  நாய்  வாசி.  (பிரசங்கி  9:4)

itha’rku  neenggalaayirukki'ravan  yaar?  uyiroadirukki'ra  anaivaridaththilum  nambikkaiyu'ndu;  seththa  singgaththaippaarkkilum  uyiru'l'la  naay  vaasi.  (pirasanggi  9:4)

உயிரோடிருக்கிறவர்கள்  தாங்கள்  மரிப்பதை  அறிவார்களே,  மரித்தவர்கள்  ஒன்றும்  அறியார்கள்;  இனி  அவர்களுக்கு  ஒரு  பலனுமில்லை,  அவர்கள்  பேர்முதலாய்  மறக்கப்பட்டிருக்கிறது.  (பிரசங்கி  9:5)

uyiroadirukki'ravarga'l  thaangga'l  marippathai  a'rivaarga'lea,  mariththavarga'l  on'rum  a'riyaarga'l;  ini  avarga'lukku  oru  palanumillai,  avarga'l  pearmuthalaay  ma'rakkappattirukki'rathu.  (pirasanggi  9:5)

அவர்கள்  சிநேகமும்,  அவர்கள்  பகையும்,  அவர்கள்  பொறாமையும்  எல்லாம்  ஒழிந்துபோயிற்று;  சூரியனுக்குக்  கீழே  செய்யப்படுகிறதொன்றிலும்  அவர்களுக்கு  இனி  என்றைக்கும்  பங்கில்லை.  (பிரசங்கி  9:6)

avarga'l  sineagamum,  avarga'l  pagaiyum,  avarga'l  po'raamaiyum  ellaam  ozhinthupoayit’ru;  sooriyanukkuk  keezhea  seyyappadugi'rathon'rilum  avarga'lukku  ini  en'raikkum  panggillai.  (pirasanggi  9:6)

நீ  போய்,  உன்  ஆகாரத்தைச்  சந்தோஷத்துடன்  புசித்து,  உன்  திராட்சரசத்தை  மனமகிழ்ச்சியுடன்  குடி;  தேவன்  உன்  கிரியைகளை  அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.  (பிரசங்கி  9:7)

nee  poay,  un  aagaaraththaich  santhoashaththudan  pusiththu,  un  thiraadcharasaththai  manamagizhchchiyudan  kudi;  theavan  un  kiriyaiga'lai  anggeegaarampa'n'niyirukki'raar.  (pirasanggi  9:7)

உன்  வஸ்திரங்கள்  எப்பொழுதும்  வெள்ளையாயும்,  உன்  தலைக்கு  எண்ணெய்  குறையாததாயும்  இருப்பதாக.  (பிரசங்கி  9:8)

un  vasthirangga'l  eppozhuthum  ve'l'laiyaayum,  un  thalaikku  e'n'ney  ku'raiyaathathaayum  iruppathaaga.  (pirasanggi  9:8)

சூரியனுக்குக்கீழே  தேவன்  உனக்கு  நியமித்திருக்கிற  மாயையான  நாட்களிலெல்லாம்  நீ  நேசிக்கிற  மனைவியோடே  நிலையில்லாத  இந்த  ஜீவவாழ்வை  அநுபவி;  இந்த  ஜீவனுக்குரிய  வாழ்விலும்,  நீ  சூரியனுக்குக்கீழே  படுகிற  பிரயாசத்திலும்  பங்கு  இதுவே.  (பிரசங்கி  9:9)

sooriyanukkukkeezhea  theavan  unakku  niyamiththirukki'ra  maayaiyaana  naadka'lilellaam  nee  neasikki'ra  manaiviyoadea  nilaiyillaatha  intha  jeevavaazhvai  anubavi;  intha  jeevanukkuriya  vaazhvilum,  nee  sooriyanukkukkeezhea  padugi'ra  pirayaasaththilum  panggu  ithuvea.  (pirasanggi  9:9)

செய்யும்படி  உன்  கைக்கு  நேரிடுகிறது  எதுவோ,  அதை  உன்  பெலத்தோடே  செய்;  நீ  போகிற  பாதாளத்திலே  செய்கையும்  வித்தையும்  அறிவும்  ஞானமும்  இல்லையே.  (பிரசங்கி  9:10)

seyyumpadi  un  kaikku  nearidugi'rathu  ethuvoa,  athai  un  belaththoadea  sey;  nee  poagi'ra  paathaa'laththilea  seygaiyum  viththaiyum  a'rivum  gnaanamum  illaiyea.  (pirasanggi  9:10)

நான்  திரும்பிக்கொண்டு  சூரியனுக்குக்  கீழே  கண்டதாவது:  ஓடுகிறதற்கு  வேகமுள்ளவர்களின்  வேகமும்,  யுத்தத்துக்குச்  சவுரியவான்களின்  சவுரியமும்  போதாது;  பிழைப்புக்கு  ஞானமுள்ளவர்களின்  ஞானமும்  போதாது;  ஐசுவரியம்  அடைகிறதற்குப்  புத்திமான்களின்  புத்தியும்  போதாது;  தயவு  அடைகிறதற்கு  வித்துவான்களின்  அறிவும்  போதாது;  அவர்களெல்லாருக்கும்  சமயமும்  தேவச்செயலும்  நேரிடவேண்டும்.  (பிரசங்கி  9:11)

naan  thirumbikko'ndu  sooriyanukkuk  keezhea  ka'ndathaavathu:  oadugi'ratha’rku  veagamu'l'lavarga'lin  veagamum,  yuththaththukkuch  savuriyavaanga'lin  savuriyamum  poathaathu;  pizhaippukku  gnaanamu'l'lavarga'lin  gnaanamum  poathaathu;  aisuvariyam  adaigi'ratha’rkup  buththimaanga'lin  buththiyum  poathaathu;  thayavu  adaigi'ratha’rku  viththuvaanga'lin  a'rivum  poathaathu;  avarga'lellaarukkum  samayamum  theavachseyalum  nearidavea'ndum.  (pirasanggi  9:11)

தன்  காலத்தை  மனுஷன்  அறியான்;  மச்சங்கள்  கொடிய  வலையில்  அகப்படுவதுபோலவும்,  குருவிகள்  கண்ணியில்  பிடிபடுவதுபோலவும்,  மனுபுத்திரர்  பொல்லாத  காலத்திலே  சடிதியில்  தங்களுக்கு  நேரிடும்  ஆபத்தில்  அகப்படுவார்கள்.  (பிரசங்கி  9:12)

than  kaalaththai  manushan  a'riyaan;  machchangga'l  kodiya  valaiyil  agappaduvathupoalavum,  kuruviga'l  ka'n'niyil  pidipaduvathupoalavum,  manupuththirar  pollaatha  kaalaththilea  sadithiyil  thangga'lukku  nearidum  aabaththil  agappaduvaarga'l.  (pirasanggi  9:12)

சூரியனுக்குக்  கீழே  ஞானமுள்ள  காரியத்தையும்  கண்டேன்;  அது  என்  பார்வைக்குப்  பெரிதாய்த்  தோன்றிற்று.  (பிரசங்கி  9:13)

sooriyanukkuk  keezhea  gnaanamu'l'la  kaariyaththaiyum  ka'ndean;  athu  en  paarvaikkup  perithaayth  thoan'rit’ru.  (pirasanggi  9:13)

ஒரு  சிறு  பட்டணம்  இருந்தது,  அதிலே  இருந்த  குடிகள்  கொஞ்ச  மனிதர்;  அதற்கு  விரோதமாய்  ஒரு  பெரிய  ராஜா  வந்து,  அதை  வளைந்துகொண்டு,  அதற்கு  எதிராகப்  பெரிய  கொத்தளங்களைக்  கட்டினான்.  (பிரசங்கி  9:14)

oru  si'ru  patta'nam  irunthathu,  athilea  iruntha  kudiga'l  kogncha  manithar;  atha’rku  viroathamaay  oru  periya  raajaa  vanthu,  athai  va'lainthuko'ndu,  atha’rku  ethiraagap  periya  koththa'langga'laik  kattinaan.  (pirasanggi  9:14)

அதிலே  ஞானமுள்ள  ஒரு  ஏழை  மனிதன்  இருந்தான்;  அவன்  தன்  ஞானத்தினாலே  அந்தப்  பட்டணத்தை  விடுவித்தான்;  ஆனாலும்  அந்த  ஏழை  மனிதனை  ஒருவரும்  நினைக்கவில்லை.  (பிரசங்கி  9:15)

athilea  gnaanamu'l'la  oru  eazhai  manithan  irunthaan;  avan  than  gnaanaththinaalea  anthap  patta'naththai  viduviththaan;  aanaalum  antha  eazhai  manithanai  oruvarum  ninaikkavillai.  (pirasanggi  9:15)

ஆகையால்  ஏழையின்  ஞானம்  அசட்டைபண்ணப்பட்டு,  அவன்  வார்த்தைகள்  கேட்கப்படாமற்போனாலும்,  பெலத்தைப்பார்க்கிலும்  ஞானமே  உத்தமம்  என்றேன்.  (பிரசங்கி  9:16)

aagaiyaal  eazhaiyin  gnaanam  asattaipa'n'nappattu,  avan  vaarththaiga'l  keadkappadaama’rpoanaalum,  belaththaippaarkkilum  gnaanamea  uththamam  en'rean.  (pirasanggi  9:16)

மூடரை  ஆளும்  அதிபதியின்  கூக்குரலைப்பார்க்கிலும்  ஞானிகளுடைய  அமரிக்கையான  வார்த்தைகளே  கேட்கப்படத்தக்கவைகள்.  (பிரசங்கி  9:17)

moodarai  aa'lum  athibathiyin  kookkuralaippaarkkilum  gnaaniga'ludaiya  amarikkaiyaana  vaarththaiga'lea  keadkappadaththakkavaiga'l.  (pirasanggi  9:17)

யுத்த  ஆயுதங்களைப்பார்க்கிலும்  ஞானமே  நலம்;  பாவியான  ஒருவன்  மிகுந்த  நன்மையைக்  கெடுப்பான்.  (பிரசங்கி  9:18)

yuththa  aayuthangga'laippaarkkilum  gnaanamea  nalam;  paaviyaana  oruvan  miguntha  nanmaiyaik  keduppaan.  (pirasanggi  9:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!