Tuesday, March 22, 2016

Pirasanggi 7 | பிரசங்கி 7 | Ecclesiastes 7


பரிமளதைலத்தைப்பார்க்கிலும்  நற்கீர்த்தியும்,  ஒருவனுடைய  ஜநநநாளைப்பார்க்கிலும்  மரணநாளும்  நல்லது.  (பிரசங்கி  7:1)

parima'lathailaththaippaarkkilum  na’rkeerththiyum,  oruvanudaiya  janananaa'laippaarkkilum  mara'nanaa'lum  nallathu.  (pirasanggi  7:1)

விருந்துவீட்டுக்குப்  போவதிலும்  துக்கவீட்டுக்குப்  போவது  நலம்;  இதிலே  எல்லா  மனுஷரின்  முடிவும்  காணப்படும்;  உயிரோடிருக்கிறவன்  இதைத்  தன்  மனதிலே  சிந்திப்பான்.  (பிரசங்கி  7:2)

virunthuveettukkup  poavathilum  thukkaveettukkup  poavathu  nalam;  ithilea  ellaa  manusharin  mudivum  kaa'nappadum;  uyiroadirukki'ravan  ithaith  than  manathilea  sinthippaan.  (pirasanggi  7:2)

நகைப்பைப்  பார்க்கிலும்  துக்கிப்பு  நலம்;  முகதுக்கத்தினாலே  இருதயம்  சீர்ப்படும்.  (பிரசங்கி  7:3)

nagaippaip  paarkkilum  thukkippu  nalam;  mugathukkaththinaalea  iruthayam  seerppadum.  (pirasanggi  7:3)

ஞானிகளின்  இருதயம்  துக்கவீட்டிலே  இருக்கும்;  மூடரின்  இருதயம்  களிப்புவீட்டிலே  இருக்கும்.  (பிரசங்கி  7:4)

gnaaniga'lin  iruthayam  thukkaveettilea  irukkum;  moodarin  iruthayam  ka'lippuveettilea  irukkum.  (pirasanggi  7:4)

ஒருவன்  மூடரின்  பாட்டைக்  கேட்பதிலும்,  ஞானியின்  கடிந்துகொள்ளுதலைக்  கேட்பது  நலம்.  (பிரசங்கி  7:5)

oruvan  moodarin  paattaik  keadpathilum,  gnaaniyin  kadinthuko'l'luthalaik  keadpathu  nalam.  (pirasanggi  7:5)

மூடனின்  நகைப்பு  பானையின்கீழ்  எரிகிற  முள்ளுகளின்  படபடப்பைப்போலிருக்கும்;  இதுவும்  மாயையே.  (பிரசங்கி  7:6)

moodanin  nagaippu  paanaiyinkeezh  erigi'ra  mu'l'luga'lin  padapadappaippoalirukkum;  ithuvum  maayaiyea.  (pirasanggi  7:6)

இடுக்கணானது  ஞானியையும்  பைத்தியக்காரனாக்கும்;  பரிதானம்  இருதயத்தைக்  கெடுக்கும்.  (பிரசங்கி  7:7)

idukka'naanathu  gnaaniyaiyum  paiththiyakkaaranaakkum;  parithaanam  iruthayaththaik  kedukkum.  (pirasanggi  7:7)

ஒரு  காரியத்தின்  துவக்கத்தைப்பார்க்கிலும்  அதின்  முடிவு  நல்லது;  பெருமையுள்ளவனைப்பார்க்கிலும்  பொறுமையுள்ளவன்  உத்தமன்.  (பிரசங்கி  7:8)

oru  kaariyaththin  thuvakkaththaippaarkkilum  athin  mudivu  nallathu;  perumaiyu'l'lavanaippaarkkilum  po'rumaiyu'l'lavan  uththaman.  (pirasanggi  7:8)

உன்  மனதில்  சீக்கிரமாய்க்  கோபங்கொள்ளாதே;  மூடரின்  நெஞ்சிலே  கோபம்  குடிகொள்ளும்.  (பிரசங்கி  7:9)

un  manathil  seekkiramaayk  koabangko'l'laathea;  moodarin  negnchilea  koabam  kudiko'l'lum.  (pirasanggi  7:9)

இந்நாட்களைப்பார்க்கிலும்  முன்நாட்கள்  நலமாயிருந்தது  என்று  சொல்லாதே;  நீ  இதைக்குறித்துக்  கேட்பது  ஞானமல்ல.  (பிரசங்கி  7:10)

innaadka'laippaarkkilum  munnaadka'l  nalamaayirunthathu  en'ru  sollaathea;  nee  ithaikku'riththuk  keadpathu  gnaanamalla.  (pirasanggi  7:10)

சுதந்தரத்தோடே  ஞானம்  நல்லது;  சூரியனைக்  காண்கிறவர்களுக்கு  இதினாலே  பிரயோஜனமுண்டு.  (பிரசங்கி  7:11)

suthantharaththoadea  gnaanam  nallathu;  sooriyanaik  kaa'ngi'ravarga'lukku  ithinaalea  pirayoajanamu'ndu.  (pirasanggi  7:11)

ஞானம்  கேடகம்,  திரவியமும்  கேடகம்;  ஞானம்  தன்னை  உடையவர்களுக்கு  ஜீவனைத்  தரும்;  இதுவே  அறிவின்  மேன்மை.  (பிரசங்கி  7:12)

gnaanam  keadagam,  thiraviyamum  keadagam;  gnaanam  thannai  udaiyavarga'lukku  jeevanaith  tharum;  ithuvea  a'rivin  meanmai.  (pirasanggi  7:12)

தேவனுடைய  செயலைக்  கவனித்துப்பார்;  அவர்  கோணலாக்கினதை  நேர்மையாக்கத்தக்கவன்  யார்?  (பிரசங்கி  7:13)

theavanudaiya  seyalaik  kavaniththuppaar;  avar  koa'nalaakkinathai  nearmaiyaakkaththakkavan  yaar?  (pirasanggi  7:13)

வாழ்வுகாலத்தில்  நன்மையை  அநுபவித்திரு,  தாழ்வுகாலத்தில்  சிந்தனைசெய்;  மனுஷன்  தனக்குப்பின்  வருவதொன்றையும்  கண்டுபிடியாதபடிக்குத்  தேவன்  இவ்விரண்டையும்  ஒன்றுக்கொன்று  எதிரிடையாக  வைத்திருக்கிறார்.  (பிரசங்கி  7:14)

vaazhvukaalaththil  nanmaiyai  anubaviththiru,  thaazhvukaalaththil  sinthanaisey;  manushan  thanakkuppin  varuvathon'raiyum  ka'ndupidiyaathapadikkuth  theavan  ivvira'ndaiyum  on'rukkon'ru  ethiridaiyaaga  vaiththirukki'raar.  (pirasanggi  7:14)

இவை  எல்லாவற்றையும்  என்  மாயையின்  நாட்களில்  கண்டேன்;  தன்  நீதியிலே  கெட்டுப்போகிற  நீதிமானுமுண்டு,  தன்  பாவத்திலே  நீடித்திருக்கிற  பாவியுமுண்டு.  (பிரசங்கி  7:15)

ivai  ellaavat’raiyum  en  maayaiyin  naadka'lil  ka'ndean;  than  neethiyilea  kettuppoagi'ra  neethimaanumu'ndu,  than  paavaththilea  neediththirukki'ra  paaviyumu'ndu.  (pirasanggi  7:15)

மிஞ்சின  நீதிமானாயிராதே,  உன்னை  அதிக  ஞானியுமாக்காதே;  உன்னை  நீ  ஏன்  கெடுத்துக்கொள்ளவேண்டும்?  (பிரசங்கி  7:16)

mignchina  neethimaanaayiraathea,  unnai  athiga  gnaaniyumaakkaathea;  unnai  nee  ean  keduththukko'l'lavea'ndum?  (pirasanggi  7:16)

மிஞ்சின  துஷ்டனாயிராதே,  அதிக  பேதையுமாயிராதே;  உன்  காலத்துக்குமுன்னே  நீ  ஏன்  சாகவேண்டும்?  (பிரசங்கி  7:17)

mignchina  thushdanaayiraathea,  athiga  peathaiyumaayiraathea;  un  kaalaththukkumunnea  nee  ean  saagavea'ndum?  (pirasanggi  7:17)

நீ  இதைப்  பற்றிக்கொள்வதும்  அதைக்  கைவிடாதிருப்பதும்  நலம்;  தேவனுக்குப்  பயப்படுகிறவன்  இவைகள்  எல்லாவற்றினின்றும்  காக்கப்படுவான்.  (பிரசங்கி  7:18)

nee  ithaip  pat’rikko'lvathum  athaik  kaividaathiruppathum  nalam;  theavanukkup  bayappadugi'ravan  ivaiga'l  ellaavat’rinin'rum  kaakkappaduvaan.  (pirasanggi  7:18)

நகரத்திலுள்ள  பத்து  அதிபதிகளைப்பார்க்கிலும்,  ஞானம்  ஞானியை  அதிக  பெலவானாக்கும்.  (பிரசங்கி  7:19)

nagaraththilu'l'la  paththu  athibathiga'laippaarkkilum,  gnaanam  gnaaniyai  athiga  belavaanaakkum.  (pirasanggi  7:19)

ஒரு  பாவமும்  செய்யாமல்,  நன்மையே  செய்யத்தக்க  நீதிமான்  பூமியிலில்லை.  (பிரசங்கி  7:20)

oru  paavamum  seyyaamal,  nanmaiyea  seyyaththakka  neethimaan  boomiyilillai.  (pirasanggi  7:20)

சொல்லப்படும்  எல்லா  வார்த்தைகளையும்  கவனியாதே;  கவனித்தால்  உன்  வேலைக்காரன்  உன்னை  நிந்திப்பதைக்  கேள்விப்படவேண்டியதாகும்.  (பிரசங்கி  7:21)

sollappadum  ellaa  vaarththaiga'laiyum  kavaniyaathea;  kavaniththaal  un  vealaikkaaran  unnai  ninthippathaik  kea'lvippadavea'ndiyathaagum.  (pirasanggi  7:21)

அநேகந்தரம்  நீயும்  பிறரை  நிந்தித்தாயென்று,  உன்  மனதுக்குத்  தெரியுமே.  (பிரசங்கி  7:22)

aneagantharam  neeyum  pi'rarai  ninthiththaayen'ru,  un  manathukkuth  theriyumea.  (pirasanggi  7:22)

இவை  எல்லாவற்றையும்  ஞானத்தினால்  சோதித்துப்பார்த்தேன்:  நான்  ஞானவானாவேன்  என்றேன்,  அது  எனக்குத்  தூரமாயிற்று.  (பிரசங்கி  7:23)

ivai  ellaavat'raiyum  gnaanaththinaal  soathiththuppaarththean:  naan  gnaanavaanaavean  en'rean,  athu  enakkuth  thooramaayit’ru.  (pirasanggi  7:23)

தூரமும்  மகா  ஆழமுமாயிருக்கிறதைக்  கண்டடைகிறவன்  யார்?  (பிரசங்கி  7:24)

thooramum  mahaa  aazhamumaayirukki'rathaik  ka'ndadaigi'ravan  yaar?  (pirasanggi  7:24)

ஞானத்தையும்,  காரணகாரியத்தையும்  விசாரித்து  ஆராய்ந்து  அறியவும்,  மதிகேட்டின்  ஆகாமியத்தையும்  புத்திமயக்கத்தின்  பைத்தியத்தையும்  அறியவும்  என்  மனதைச்  செலுத்தினேன்.  (பிரசங்கி  7:25)

gnaanaththaiyum,  kaara'nakaariyaththaiyum  visaariththu  aaraaynthu  a'riyavum,  mathikeattin  aagaamiyaththaiyum  buththimayakkaththin  paiththiyaththaiyum  a'riyavum  en  manathaich  seluththinean.  (pirasanggi  7:25)

கண்ணிகளும்  வலைகளுமாகிய  நெஞ்சமும்,  கயிறுகளுமாகிய  கைகளுமுடைய  ஸ்திரீயானவள்,  சாவிலும்  அதிக  கசப்புள்ளவளென்று  கண்டேன்;  தேவனுக்கு  முன்பாகச்  சற்குணனாயிருக்கிறவன்  அவளுக்குத்  தப்புவான்;  பாவியோ  அவளால்  பிடிபடுவான்.  (பிரசங்கி  7:26)

ka'n'niga'lum  valaiga'lumaagiya  negnchamum,  kayi'ruga'lumaagiya  kaiga'lumudaiya  sthireeyaanava'l,  saavilum  athiga  kasappu'l'lava'len'ru  ka'ndean;  theavanukku  munbaagach  sa’rku'nanaayirukki'ravan  ava'lukkuth  thappuvaan;  paaviyoa  ava'laal  pidipaduvaan.  (pirasanggi  7:26)

காரியத்தை  அறியும்படிக்கு  ஒவ்வொன்றாய்  விசாரணைபண்ணி,  இதோ,  இதைக்  கண்டுபிடித்தேன்  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்:  (பிரசங்கி  7:27)

kaariyaththai  a'riyumpadikku  ovvon'raay  visaara'naipa'n'ni,  ithoa,  ithaik  ka'ndupidiththean  en'ru  pirasanggi  sollugi'raan:  (pirasanggi  7:27)

என்  மனம்  இன்னும்  ஒன்றைத்  தேடுகிறது,  அதை  நான்  கண்டுபிடிக்கவில்லை;  ஆயிரம்பேருக்குள்ளே  ஒரு  புருஷனைக்  கண்டேன்;  இவர்களெல்லாருக்குள்ளும்  ஒரு  ஸ்திரீயை  நான்  காணவில்லை.  (பிரசங்கி  7:28)

en  manam  innum  on'raith  theadugi'rathu,  athai  naan  ka'ndupidikkavillai;  aayirampearukku'l'lea  oru  purushanaik  ka'ndean;  ivarga'lellaarukku'l'lum  oru  sthireeyai  naan  kaa'navillai.  (pirasanggi  7:28)

இதோ,  தேவன்  மனுஷனைச்  செம்மையானவனாக  உண்டாக்கினார்;  அவர்களோ  அநேக  உபாயதந்திரங்களைத்  தேடிக்கொண்டார்கள்;  இதைமாத்திரம்  கண்டேன்.  (பிரசங்கி  7:29)

ithoa,  theavan  manushanaich  semmaiyaanavanaaga  u'ndaakkinaar;  avarga'loa  aneaga  ubaayathanthirangga'laith  theadikko'ndaarga'l;  ithaimaaththiram  ka'ndean.  (pirasanggi  7:29)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!