Tuesday, March 22, 2016

Pirasanggi 6 | பிரசங்கி 6 | Ecclesiastes 6

சூரியனுக்குக்  கீழே  நான்  கண்ட  வேறொரு  தீங்குமுண்டு;  அது  மனுஷருக்குள்ளே  பெரும்பாலும்  நடந்துவருகிறது.  (பிரசங்கி  6:1)

sooriyanukkuk  keezhea  naan  ka'nda  vea'roru  theenggumu'ndu;  athu  manusharukku'l'lea  perumbaalum  nadanthuvarugi'rathu.  (pirasanggi  6:1)

அதாவது,  ஒருவனுக்குத்  தேவன்  செல்வத்தையும்  சம்பத்தையும்  கனத்தையும்  கொடுக்கிறார்;  அவன்  என்ன  இச்சித்தாலும்  அதெல்லாம்  அவனுக்குக்  குறைவில்லாமல்  கிடைக்கும்;  ஆனாலும்  அவைகளை  அநுபவிக்கும்  சக்தியைத்  தேவன்  அவனுக்குக்  கொடுக்கவில்லை;  அந்நிய  மனுஷன்  அதை  அநுபவிக்கிறான்;  இதுவும்  மாயையும்,  கொடிய  நோயுமானது.  (பிரசங்கி  6:2)

athaavathu,  oruvanukkuth  theavan  selvaththaiyum  sambaththaiyum  kanaththaiyum  kodukki'raar;  avan  enna  ichchiththaalum  athellaam  avanukkuk  ku'raivillaamal  kidaikkum;  aanaalum  avaiga'lai  anubavikkum  sakthiyaith  theavan  avanukkuk  kodukkavillai;  anniya  manushan  athai  anubavikki'raan;  ithuvum  maayaiyum,  kodiya  noayumaanathu.  (pirasanggi  6:2)

ஒருவன்  நூறு  பிள்ளைகளைப்  பெற்று,  அநேகம்  வருஷம்  ஜீவித்து,  தீர்க்காயுசை  அடைந்திருந்தாலும்,  அவன்  ஆத்துமா  அந்தச்  செல்வத்தால்  திருப்தியடையாமலும்,  அவனுக்குப்  பிரேதக்கல்லறை  முதலாய்  இல்லாமலும்  போகுமானால்,  அவனைப்பார்க்கிலும்  கருவழிந்த  பிண்டம்  வாசி  என்கிறேன்.  (பிரசங்கி  6:3)

oruvan  noo'ru  pi'l'laiga'laip  pet’ru,  aneagam  varusham  jeeviththu,  theerkkaayusai  adainthirunthaalum,  avan  aaththumaa  anthach  selvaththaal  thirupthiyadaiyaamalum,  avanukkup  pireathakkalla'rai  muthalaay  illaamalum  poagumaanaal,  avanaippaarkkilum  karuvazhintha  pi'ndam  vaasi  engi'rean.  (pirasanggi  6:3)

அது  மாயையாய்த்  தோன்றி  இருளிலே  மறைந்துபோய்விடுகிறது;  அதின்  பேர்  அந்தகாரத்தால்  மூடப்படும்.  (பிரசங்கி  6:4)

athu  maayaiyaayth  thoan'ri  iru'lilea  ma'rainthupoayvidugi'rathu;  athin  pear  anthagaaraththaal  moodappadum.  (pirasanggi  6:4)

அது  சூரியனைக்  கண்டதுமில்லை,  ஒன்றையும்  அறிந்ததுமில்லை;  அவனுக்கு  இல்லாத  அமைச்சல்  அதற்கு  உண்டு.  (பிரசங்கி  6:5)

athu  sooriyanaik  ka'ndathumillai,  on'raiyum  a'rinthathumillai;  avanukku  illaatha  amaichchal  atha’rku  u'ndu.  (pirasanggi  6:5)

அவன்  இரண்டாயிரம்  வருஷம்  பிழைத்திருந்தாலும்  ஒரு  நன்மையையும்  காண்பதில்லை;  எல்லாரும்  ஒரே  இடத்துக்குப்  போகிறார்கள்  அல்லவா?  (பிரசங்கி  6:6)

avan  ira'ndaayiram  varusham  pizhaiththirunthaalum  oru  nanmaiyaiyum  kaa'nbathillai;  ellaarum  orea  idaththukkup  poagi'raarga'l  allavaa?  (pirasanggi  6:6)

மனுஷன்  படும்  பிரயாசமெல்லாம்  அவன்  வாய்க்காகத்தானே;  அவன்  மனதுக்கோ  திருப்தியில்லை.  (பிரசங்கி  6:7)

manushan  padum  pirayaasamellaam  avan  vaaykkaagaththaanea;  avan  manathukkoa  thirupthiyillai.  (pirasanggi  6:7)

இப்படியிருக்க,  மூடனைப்பார்க்கிலும்  ஞானிக்கு  உண்டாகும்  மேன்மை  என்ன?  ஜீவனுள்ளோருக்கு  முன்பாக  நடந்துகொள்ளும்படி  அறிந்த  ஏழைக்கும்  உண்டாகும்  மேன்மை  என்ன?  (பிரசங்கி  6:8)

ippadiyirukka,  moodanaippaarkkilum  gnaanikku  u'ndaagum  meanmai  enna?  jeevanu'l'loarukku  munbaaga  nadanthuko'l'lumpadi  a'rintha  eazhaikkum  u'ndaagum  meanmai  enna?  (pirasanggi  6:8)

ஆசையானது  அலைந்துதேடுகிறதைப்  பார்க்கிலும்  கண்  கண்டதே  நலம்;  இதுவும்  மாயையும்,  மனதைச்  சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது.  (பிரசங்கி  6:9)

aasaiyaanathu  alainthutheadugi'rathaip  paarkkilum  ka'n  ka'ndathea  nalam;  ithuvum  maayaiyum,  manathaich  sagnchalappaduththugi'rathumaayirukki'rathu.  (pirasanggi  6:9)

இருக்கிறவன்  எவனும்  தோன்றுமுன்னமே  பேரிடப்பட்டிருக்கிறான்;  அவன்  மனுஷனென்று  தெரிந்திருக்கிறது;  தன்னிலும்  பலத்தவரோடே  போராட  அவனால்  கூடாது.  (பிரசங்கி  6:10)

irukki'ravan  evanum  thoan'rumunnamea  pearidappattirukki'raan;  avan  manushanen'ru  therinthirukki'rathu;  thannilum  balaththavaroadea  poaraada  avanaal  koodaathu.  (pirasanggi  6:10)

மாயையைப்  பெருகப்பண்ணுகிற  அநேக  விசேஷங்கள்  உண்டாயிருக்கிறபடியால்  அதினாலே  மனுஷருக்குப்  பிரயோஜனமென்ன?  (பிரசங்கி  6:11)

maayaiyaip  perugappa'n'nugi'ra  aneaga  viseashangga'l  u'ndaayirukki'rapadiyaal  athinaalea  manusharukkup  pirayoajanamenna?  (pirasanggi  6:11)

நிழலைப்போன்ற  மாயையான  தன்  ஜீவகாலத்தைப்  போக்கும்  மனுஷனுக்கு  இந்த  ஜீவனில்  நன்மை  இன்னதென்று  அறிந்தவன்  யார்?  தனக்குப்பின்பு  சூரியனுக்குக்  கீழே  சம்பவிக்குங்காரியம்  இன்னதென்று  மனுஷனுக்கு  அறிவிப்பவன்  யார்?  (பிரசங்கி  6:12)

nizhalaippoan'ra  maayaiyaana  than  jeevakaalaththaip  poakkum  manushanukku  intha  jeevanil  nanmai  innathen'ru  a'rinthavan  yaar?  thanakkuppinbu  sooriyanukkuk  keezhea  sambavikkungkaariyam  innathen'ru  manushanukku  a'rivippavan  yaar?  (pirasanggi  6:12)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!