Tuesday, March 22, 2016

Pirasanggi 5 | பிரசங்கி 5 | Ecclesiastes 5


நீ  தேவாலயத்துக்குப்  போகும்போது  உன்  நடையைக்  காத்துக்கொள்;  மூடர்  பலியிடுவதுபோலப்  பலியிடுவதைப்பார்க்கிலும்  செவிகொடுக்கச்  சேர்வதே  நலம்.  தாங்கள்  செய்கிறது  தீமையென்று  அறியாதிருக்கிறார்கள்.  (பிரசங்கி  5:1)

nee  theavaalayaththukkup  poagumpoathu  un  nadaiyaik  kaaththukko'l;  moodar  baliyiduvathupoalap  baliyiduvathaippaarkkilum  sevikodukkach  searvathea  nalam.  thaangga'l  seygi'rathu  theemaiyen'ru  a'riyaathirukki'raarga'l.  (pirasanggi  5:1)

தேவசமுகத்தில்  நீ  துணிகரமாய்  உன்  வாயினால்  பேசாமலும்,  மனம்பதறி  ஒரு  வார்த்தையையும்  சொல்லாமலும்  இரு;  தேவன்  வானத்திலிருக்கிறார்;  நீ  பூமியிலிருக்கிறாய்,  ஆதலால்  உன்  வார்த்தைகள்  சுருக்கமாயிருப்பதாக.  (பிரசங்கி  5:2)

theavasamugaththil  nee  thu'nigaramaay  un  vaayinaal  peasaamalum,  manampatha'ri  oru  vaarththaiyaiyum  sollaamalum  iru;  theavan  vaanaththilirukki'raar;  nee  boomiyilirukki'raay,  aathalaal  un  vaarththaiga'l  surukkamaayiruppathaaga.  (pirasanggi  5:2)

தொல்லையின்  திரட்சியினால்  சொப்பனம்  பிறக்கிறதுபோல,  வார்த்தைகளின்  திரட்சியினால்  மூடனுடைய  சத்தம்  பிறக்கும்.  (பிரசங்கி  5:3)

thollaiyin  thiradchiyinaal  soppanam  pi'rakki'rathupoala,  vaarththaiga'lin  thiradchiyinaal  moodanudaiya  saththam  pi'rakkum.  (pirasanggi  5:3)

நீ  தேவனுக்கு  ஒரு  பொருத்தனை  பண்ணிக்கொண்டால்,  அதைச்  செலுத்தத்  தாமதியாதே;  அவர்  மூடரில்  பிரியப்படுகிறதில்லை;  நீ  நேர்ந்துகொண்டதைச்  செய்.  (பிரசங்கி  5:4)

nee  theavanukku  oru  poruththanai  pa'n'nikko'ndaal,  athaich  seluththath  thaamathiyaathea;  avar  moodaril  piriyappadugi'rathillai;  nee  nearnthuko'ndathaich  sey.  (pirasanggi  5:4)

நீ  நேர்ந்துகொண்டதைச்  செய்யாமற்போவதைப்பார்க்கிலும்,  நேர்ந்துகொள்ளாதிருப்பதே  நலம்.  (பிரசங்கி  5:5)

nee  nearnthuko'ndathaich  seyyaama’rpoavathaippaarkkilum,  nearnthuko'l'laathiruppathea  nalam.  (pirasanggi  5:5)

உன்  மாம்சத்தைப்  பாவத்துக்குள்ளாக்க  உன்  வாய்க்கு  இடங்கொடாதே;  அது  புத்திபிசகினால்  செய்தது  என்று  தூதனுக்குமுன்  சொல்லாதே;  தேவன்  உன்  வார்த்தைகளினாலே  கோபங்கொண்டு,  உன்  கைகளின்  கிரியையை  அழிப்பானேன்?  (பிரசங்கி  5:6)

un  maamsaththaip  paavaththukku'l'laakka  un  vaaykku  idangkodaathea;  athu  buththipisaginaal  seythathu  en'ru  thoothanukkumun  sollaathea;  theavan  un  vaarththaiga'linaalea  koabangko'ndu,  un  kaiga'lin  kiriyaiyai  azhippaanean?  (pirasanggi  5:6)

அநேக  சொப்பனங்கள்  மாயையாயிருப்பதுபோல,  அநேக  வார்த்தைகளும்  வியர்த்தமாயிருக்கும்;  ஆகையால்  நீ  தேவனுக்குப்  பயந்திரு.  (பிரசங்கி  5:7)

aneaga  soppanangga'l  maayaiyaayiruppathupoala,  aneaga  vaarththaiga'lum  viyarththamaayirukkum;  aagaiyaal  nee  theavanukkup  bayanthiru.  (pirasanggi  5:7)

ஒரு  தேசத்தில்  ஏழைகள்  ஒடுக்கப்படுகிறதையும்,  நியாயமும்  நீதியும்  புரட்டப்படுகிறதையும்  நீ  காண்பாயானால்,  அதைக்குறித்து  ஆச்சரியப்படாதே;  உயர்ந்தவன்மேல்  உயர்ந்தவன்  காவலாளியாயிருக்கிறான்;  அவர்கள்மேல்  உயர்ந்தவரும்  ஒருவருண்டு.  (பிரசங்கி  5:8)

oru  theasaththil  eazhaiga'l  odukkappadugi'rathaiyum,  niyaayamum  neethiyum  purattappadugi'rathaiyum  nee  kaa'nbaayaanaal,  athaikku'riththu  aachchariyappadaathea;  uyarnthavanmeal  uyarnthavan  kaavalaa'liyaayirukki'raan;  avarga'lmeal  uyarnthavarum  oruvaru'ndu.  (pirasanggi  5:8)

பூமியில்  விளையும்  பலன்  யாவருக்குமுரியது;  ராஜாவும்  வயலின்  பலனால்  ஆதரிக்கப்படுகிறான்.  (பிரசங்கி  5:9)

boomiyil  vi'laiyum  palan  yaavarukkumuriyathu;  raajaavum  vayalin  palanaal  aatharikkappadugi'raan.  (pirasanggi  5:9)

பணப்பிரியன்  பணத்தினால்  திருப்தியடைவதில்லை;  செல்வப்பிரியன்  செல்வப்பெருக்கினால்  திருப்தியடைவதில்லை;  இதுவும்  மாயையே.  (பிரசங்கி  5:10)

pa'nappiriyan  pa'naththinaal  thirupthiyadaivathillai;  selvappiriyan  selvapperukkinaal  thirupthiyadaivathillai;  ithuvum  maayaiyea.  (pirasanggi  5:10)

பொருள்  பெருகினால்  அதைத்  தின்கிறவர்களும்  பெருகுகிறார்கள்;  அதை  உடையவர்கள்  தங்கள்  கண்களினால்  அதைக்  காண்பதேயன்றி  அவர்களுக்குப்  பிரயோஜனம்  என்ன?  (பிரசங்கி  5:11)

poru'l  peruginaal  athaith  thingi'ravarga'lum  perugugi'raarga'l;  athai  udaiyavarga'l  thangga'l  ka'nga'linaal  athaik  kaa'nbatheayan'ri  avarga'lukkup  pirayoajanam  enna?  (pirasanggi  5:11)

வேலைசெய்கிறவன்  கொஞ்சமாய்ப்  புசித்தாலும்  அதிகமாய்ப்  புசித்தாலும்  அவன்  நித்திரை  இன்பமாயிருக்கும்;  செல்வனுடைய  பெருக்கோ  அவனைத்  தூங்கவொட்டாது.  (பிரசங்கி  5:12)

vealaiseygi'ravan  kognchamaayp  pusiththaalum  athigamaayp  pusiththaalum  avan  niththirai  inbamaayirukkum;  selvanudaiya  perukkoa  avanaith  thoonggavottaathu.  (pirasanggi  5:12)

சூரியனுக்குக்  கீழே  நான்  கண்ட  வேறொரு  கொடிய  தீங்குமுண்டு;  அதாவது,  ஐசுவரியமானது  அதை  உடையவர்களுக்கே  கேடுண்டாகும்படி  சேகரித்து  வைக்கப்படுவதாம்.  (பிரசங்கி  5:13)

sooriyanukkuk  keezhea  naan  ka'nda  vea'roru  kodiya  theenggumu'ndu;  athaavathu,  aisuvariyamaanathu  athai  udaiyavarga'lukkea  keadu'ndaagumpadi  seagariththu  vaikkappaduvathaam.  (pirasanggi  5:13)

அந்த  ஐசுவரியம்  விக்கினத்தால்  அழிந்துபோகிறது;  அவன்  ஒரு  புத்திரனைப்  பெறுகிறான்,  அவன்  கையில்  யாதொன்றும்  இல்லை.  (பிரசங்கி  5:14)

antha  aisuvariyam  vikkinaththaal  azhinthupoagi'rathu;  avan  oru  puththiranaip  pe'rugi'raan,  avan  kaiyil  yaathon'rum  illai.  (pirasanggi  5:14)

தன்  தாயின்  கர்ப்பத்திலிருந்து  நிர்வாணியாய்  வந்தான்;  வந்ததுபோலவே  நிர்வாணியாய்த்  திரும்பப்போவான்;  அவன்  தன்  பிரயாசத்தினால்  உண்டான  பலனொன்றையும்  தன்  கையிலே  எடுத்துக்கொண்டுபோவதில்லை.  (பிரசங்கி  5:15)

than  thaayin  karppaththilirunthu  nirvaa'niyaay  vanthaan;  vanthathupoalavea  nirvaa'niyaayth  thirumbappoavaan;  avan  than  pirayaasaththinaal  u'ndaana  palanon'raiyum  than  kaiyilea  eduththukko'ndupoavathillai.  (pirasanggi  5:15)

அவன்  வந்தபிரகாரமே  போகிறான்,  இதுவும்  கொடுமையான  தீங்கு;  அவன்  காற்றுக்குப்  பிரயாசப்பட்டதினால்  அவனுக்கு  லாபம்  என்ன?  (பிரசங்கி  5:16)

avan  vanthapiragaaramea  poagi'raan,  ithuvum  kodumaiyaana  theenggu;  avan  kaat’rukkup  pirayaasappattathinaal  avanukku  laabam  enna?  (pirasanggi  5:16)

அவன்  தன்  நாட்களிலெல்லாம்  இருளிலே  புசித்து,  மிகவும்  சலித்து,  நோயும்  துன்பமும்  அடைகிறான்.  (பிரசங்கி  5:17)

avan  than  naadka'lilellaam  iru'lilea  pusiththu,  migavum  saliththu,  noayum  thunbamum  adaigi'raan.  (pirasanggi  5:17)

இதோ,  உயிரோடிருக்கும்படி  தேவன்  அருளிச்செய்த  நாளெல்லாம்  மனுஷன்  புசித்துக்  குடித்து,  சூரியனுக்குக்  கீழே  தான்  படும்  பிரயாசம்  அனைத்தின்  பலனையும்  அநுபவிப்பதே  நலமும்  உத்தமுமான  காரியமென்று  நான்  கண்டேன்,  இதுவே  அவன்  பங்கு.  (பிரசங்கி  5:18)

ithoa,  uyiroadirukkumpadi  theavan  aru'lichseytha  naa'lellaam  manushan  pusiththuk  kudiththu,  sooriyanukkuk  keezhea  thaan  padum  pirayaasam  anaiththin  palanaiyum  anubavippathea  nalamum  uththamumaana  kaariyamen'ru  naan  ka'ndean,  ithuvea  avan  panggu.  (pirasanggi  5:18)

தேவன்  ஐசுவரியத்தையும்  சம்பத்தையும்  எவனுக்குக்  கொடுத்திருக்கிறாரோ,  அவன்  அதிலே  புசிக்கவும்,  தன்  பங்கைப்  பெறவும்,  தன்  பிரயாசத்திலே  மகிழ்ச்சியாயிருக்கவும்  அவனுக்கு  அதிகாரம்  அளிப்பது  தேவனுடைய  அநுக்கிரகம்.  (பிரசங்கி  5:19)

theavan  aisuvariyaththaiyum  sambaththaiyum  evanukkuk  koduththirukki'raaroa,  avan  athilea  pusikkavum,  than  panggaip  pe'ravum,  than  pirayaasaththilea  magizhchchiyaayirukkavum  avanukku  athigaaram  a'lippathu  theavanudaiya  anukkiragam.  (pirasanggi  5:19)

அவனுடைய  இருதயத்திலே  மகிழும்படி  தேவன்  அவனுக்கு  அநுக்கிரகம்  பண்ணுகிறபடியினால்,  அவன்  தன்  ஜீவனுள்ள  நாட்களை  அதிகமாய்  நினையான்.  (பிரசங்கி  5:20)

avanudaiya  iruthayaththilea  magizhumpadi  theavan  avanukku  anukkiragam  pa'n'nugi'rapadiyinaal,  avan  than  jeevanu'l'la  naadka'lai  athigamaay  ninaiyaan.  (pirasanggi  5:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!