Wednesday, March 23, 2016

Pirasanggi 11 | பிரசங்கி 11 | Ecclesiastes 11

உன்  ஆகாரத்தைத்  தண்ணீர்கள்மேல்  போடு;  அநேக  நாட்களுக்குப்  பின்பு  அதின்  பலனைக்  காண்பாய்.  (பிரசங்கி  11:1)

un  aagaaraththaith  tha'n'neerga'lmeal  poadu;  aneaga  naadka'lukkup  pinbu  athin  palanaik  kaa'nbaay.  (pirasanggi  11:1)

ஏழுபேருக்கும்  எட்டுபேருக்கும்  பங்கிட்டுக்கொடு;  பூமியின்மேல்  என்ன  ஆபத்து  நேரிடுமோ  உனக்குத்  தெரியாது.  (பிரசங்கி  11:2)

eazhupearukkum  ettupearukkum  panggittukkodu;  boomiyinmeal  enna  aabaththu  nearidumoa  unakkuth  theriyaathu.  (pirasanggi  11:2)

மேகங்கள்  நிறைந்திருந்தால்  மழையைப்  பூமியின்மேல்  பொழியும்;  மரமானது  தெற்கே  விழுந்தாலும்  வடக்கே  விழுந்தாலும்,  விழுந்த  இடத்திலேயே  மரம்  கிடக்கும்.  (பிரசங்கி  11:3)

meagangga'l  ni'rainthirunthaal  mazhaiyaip  boomiyinmeal  pozhiyum;  maramaanathu  the’rkea  vizhunthaalum  vadakkea  vizhunthaalum,  vizhuntha  idaththileayea  maram  kidakkum.  (pirasanggi  11:3)

காற்றைக்  கவனிக்கிறவன்  விதைக்கமாட்டான்;  மேகங்களை  நோக்குகிறவன்  அறுக்கமாட்டான்.  (பிரசங்கி  11:4)

kaat’raik  kavanikki'ravan  vithaikkamaattaan;  meagangga'lai  noakkugi'ravan  a'rukkamaattaan.  (pirasanggi  11:4)

ஆவியின்  வழி  இன்னதென்றும்,  கர்ப்பவதியின்  வயிற்றில்  எலும்புகள்  உருவாகும்  விதம்  இன்னதென்றும்  நீ  அறியாதிருக்கிறதுபோலவே,  எல்லாவற்றையும்  செய்கிற  தேவனுடைய  செயல்களையும்  நீ  அறியாய்.  (பிரசங்கி  11:5)

aaviyin  vazhi  innathen'rum,  karppavathiyin  vayit’ril  elumbuga'l  uruvaagum  vitham  innathen'rum  nee  a'riyaathirukki'rathupoalavea,  ellaavat’raiyum  seygi'ra  theavanudaiya  seyalga'laiyum  nee  a'riyaay.  (pirasanggi  11:5)

காலையிலே  உன்  விதையை  விதை;  மாலையிலே  உன்  கையை  நெகிழவிடாதே;  அதுவோ,  இதுவோ,  எது  வாய்க்குமோ  என்றும்,  இரண்டும்  சரியாய்ப்  பயன்படுமோ  என்றும்  நீ  அறியாயே.  (பிரசங்கி  11:6)

kaalaiyilea  un  vithaiyai  vithai;  maalaiyilea  un  kaiyai  negizhavidaathea;  athuvoa,  ithuvoa,  ethu  vaaykkumoa  en'rum,  ira'ndum  sariyaayp  payanpadumoa  en'rum  nee  a'riyaayea.  (pirasanggi  11:6)

வெளிச்சம்  இன்பமும்,  சூரியனைக்  காண்பது  கண்களுக்குப்  பிரியமுமாமே.  (பிரசங்கி  11:7)

ve'lichcham  inbamum,  sooriyanaik  kaa'nbathu  ka'nga'lukkup  piriyamumaamea.  (pirasanggi  11:7)

மனுஷன்  அநேக  வருஷம்  ஜீவித்து,  அவைகளிலெல்லாம்  மகிழ்ச்சியாயிருந்தாலும்,  அவன்  இருளின்  நாட்களையும்  நினைக்கவேண்டும்;  அவைகள்  அநேகமாயிருக்கும்;  வந்து  சம்பவிப்பதெல்லாம்  மாயையே.  (பிரசங்கி  11:8)

manushan  aneaga  varusham  jeeviththu,  avaiga'lilellaam  magizhchchiyaayirunthaalum,  avan  iru'lin  naadka'laiyum  ninaikkavea'ndum;  avaiga'l  aneagamaayirukkum;  vanthu  sambavippathellaam  maayaiyea.  (pirasanggi  11:8)

வாலிபனே!  உன்  இளமையிலே  சந்தோஷப்படு,  உன்  வாலிப  நாட்களிலே  உன்  இருதயம்  உன்னைப்  பூரிப்பாக்கட்டும்;  உன்  நெஞ்சின்  வழிகளிலும்,  உன்  கண்ணின்  காட்சிகளிலும்  நட;  ஆனாலும்  இவையெல்லாவற்றினிமித்தமும்  தேவன்  உன்னை  நியாயத்திலே  கொண்டுவந்து  நிறுத்துவார்  என்று  அறி.  (பிரசங்கி  11:9)

vaalibanea!  un  i'lamaiyilea  santhoashappadu,  un  vaaliba  naadka'lilea  un  iruthayam  unnaip  poorippaakkattum;  un  negnchin  vazhiga'lilum,  un  ka'n'nin  kaadchiga'lilum  nada;  aanaalum  ivaiyellaavat'rinimiththamum  theavan  unnai  niyaayaththilea  ko'nduvanthu  ni'ruththuvaar  en'ru  a'ri.  (pirasanggi  11:9)

நீ  உன்  இருதயத்திலிருந்து  சஞ்சலத்தையும்,  உன்  மாம்சத்திலிருந்து  தீங்கையும்  நீக்கிப்போடு;  இளவயதும்  வாலிபமும்  மாயையே.  (பிரசங்கி  11:10)

nee  un  iruthayaththilirunthu  sagnchalaththaiyum,  un  maamsaththilirunthu  theenggaiyum  neekkippoadu;  i'lavayathum  vaalibamum  maayaiyea.  (pirasanggi  11:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!