Wednesday, March 23, 2016

Pirasanggi 10 | பிரசங்கி 10 | Ecclesiastes 10


செத்த  ஈக்கள்  தைலக்காரனுடைய  பரிமளதைலத்தை  நாறிக்  கெட்டுப்போகப்பண்ணும்;  ஞானத்திலும்  கனத்திலும்  பேர்பெற்றவனைச்  சொற்ப  மதியீனமும்  அப்படியே  செய்யும்.  (பிரசங்கி  10:1)

seththa  eekka'l  thailakkaaranudaiya  parima'lathailaththai  naa'rik  kettuppoagappa'n'num;  gnaanaththilum  kanaththilum  pearpet'ravanaich  so’rpa  mathiyeenamum  appadiyea  seyyum.  (pirasanggi  10:1)

ஞானியின்  இருதயம்  வலதுகையிலும்,  மூடனின்  இருதயமோ  இடதுகையிலும்  இருக்கும்.  (பிரசங்கி  10:2)

gnaaniyin  iruthayam  valathukaiyilum,  moodanin  iruthayamoa  idathukaiyilum  irukkum.  (pirasanggi  10:2)

மூடன்  வழியிலே  நடக்கிறபோதும்  மதிகெட்டவனாயிருக்கிறான்;  தான்  மூடனென்று  அவன்  எல்லாருக்கும்  சொல்லுகிறான்.  (பிரசங்கி  10:3)

moodan  vazhiyilea  nadakki'rapoathum  mathikettavanaayirukki'raan;  thaan  moodanen'ru  avan  ellaarukkum  sollugi'raan.  (pirasanggi  10:3)

அதிபதியின்  கோபம்  உன்மேல்  எழும்பினால்  உன்  ஸ்தானத்தை  விட்டு  விலகாதே;  இணங்குதல்  பெரிய  குற்றங்களையும்  அமர்த்திப்போடும்.  (பிரசங்கி  10:4)

athibathiyin  koabam  unmeal  ezhumbinaal  un  sthaanaththai  vittu  vilagaathea;  i'nangguthal  periya  kut'rangga'laiyum  amarththippoadum.  (pirasanggi  10:4)

நான்  சூரியனுக்குக்கீழே  கண்ட  ஒரு  தீங்குண்டு,  அது  அதிபதியினிடத்தில்  தோன்றும்  தப்பிதமே.  (பிரசங்கி  10:5)

naan  sooriyanukkukkeezhea  ka'nda  oru  theenggu'ndu,  athu  athibathiyinidaththil  thoan'rum  thappithamea.  (pirasanggi  10:5)

மூடர்  மகா  உயர்ந்த  நிலையில்  வைக்கப்படுகிறார்கள்;  சீமான்களோ  தாழ்ந்த  நிலையில்  உட்கார்ந்திருக்கிறார்கள்.  (பிரசங்கி  10:6)

moodar  mahaa  uyarntha  nilaiyil  vaikkappadugi'raarga'l;  seemaanga'loa  thaazhntha  nilaiyil  udkaarnthirukki'raarga'l.  (pirasanggi  10:6)

வேலைக்காரர்  குதிரைகள்மேல்  ஏறிப்போகிறதையும்,  பிரபுக்கள்  வேலைக்காரர்போல்  தரையிலே  நடக்கிறதையும்  கண்டேன்.  (பிரசங்கி  10:7)

vealaikkaarar  kuthiraiga'lmeal  ea'rippoagi'rathaiyum,  pirabukka'l  vealaikkaararpoal  tharaiyilea  nadakki'rathaiyum  ka'ndean.  (pirasanggi  10:7)

படுகுழியை  வெட்டுகிறவன்  அதிலே  விழுவான்;  அடைப்பைப்  பிடுங்குகிறவனைப்  பாம்பு  கடிக்கும்.  (பிரசங்கி  10:8)

padukuzhiyai  vettugi'ravan  athilea  vizhuvaan;  adaippaip  pidunggugi'ravanaip  paambu  kadikkum.  (pirasanggi  10:8)

கல்லுகளைப்  பேர்க்கிறவன்  அவைகளால்  காயப்படுவான்;  மரத்தைப்  பிளக்கிறவன்  அதினால்  மோசப்படுவான்.  (பிரசங்கி  10:9)

kalluga'laip  pearkki'ravan  avaiga'laal  kaayappaduvaan;  maraththaip  pi'lakki'ravan  athinaal  moasappaduvaan.  (pirasanggi  10:9)

இருப்பு  ஆயுதம்  மழுங்கலாயிருக்க,  அதை  ஒருவன்  தீட்டாமற்போனால்,  அதிகபலத்தைப்  பிரயோகம்பண்ணவேண்டியதாகும்;  ஆகையால்  ஒரு  காரியத்தைச்  செவ்வையாய்ச்  செய்வதற்கு  ஞானமே  பிரதானம்.  (பிரசங்கி  10:10)

iruppu  aayutham  mazhunggalaayirukka,  athai  oruvan  theettaama’rpoanaal,  athigabalaththaip  pirayoagampa'n'navea'ndiyathaagum;  aagaiyaal  oru  kaariyaththaich  sevvaiyaaych  seyvatha’rku  gnaanamea  pirathaanam.  (pirasanggi  10:10)

தடைகட்டப்படாத  பாம்பு  கடிக்குமே,  அலப்புவாயனும்  அதற்கு  ஒப்பானவன்.  (பிரசங்கி  10:11)

thadaikattappadaatha  paambu  kadikkumea,  alappuvaayanum  atha’rku  oppaanavan.  (pirasanggi  10:11)

ஞானியினுடைய  வாய்மொழிகள்  தயையுள்ளவைகள்;  மூடனுடைய  உதடுகளோ  அவனையே  விழுங்கும்.  (பிரசங்கி  10:12)

gnaaniyinudaiya  vaaymozhiga'l  thayaiyu'l'lavaiga'l;  moodanudaiya  uthaduga'loa  avanaiyea  vizhunggum.  (pirasanggi  10:12)

அவன்  வாய்மொழிகளின்  துவக்கம்  மதியீனமும்,  அவன்  வாக்கின்  முடிவு  கொடிய  பைத்தியமுமாம்.  (பிரசங்கி  10:13)

avan  vaaymozhiga'lin  thuvakkam  mathiyeenamum,  avan  vaakkin  mudivu  kodiya  paiththiyamumaam.  (pirasanggi  10:13)

மூடன்  மிகுதியாய்ப்  பேசுகிறான்,  நடக்கப்போகிறது  இன்னதென்று  மனுஷன்  அறியான்;  தனக்குப்பிற்பாடு  சம்பவிக்கப்போகிறதை  அவனுக்கு  அறிவிப்பவன்  யார்?  (பிரசங்கி  10:14)

moodan  miguthiyaayp  peasugi'raan,  nadakkappoagi'rathu  innathen'ru  manushan  a'riyaan;  thanakkuppi’rpaadu  sambavikkappoagi'rathai  avanukku  a'rivippavan  yaar?  (pirasanggi  10:14)

ஊருக்குப்  போகும்  வழியை  மூடன்  அறியாததினால்,  அவன்  தொல்லை  ஒவ்வொருவரையும்  இளைக்கப்பண்ணும்.  (பிரசங்கி  10:15)

oorukkup  poagum  vazhiyai  moodan  a'riyaathathinaal,  avan  thollai  ovvoruvaraiyum  i'laikkappa'n'num.  (pirasanggi  10:15)

ராஜா  சிறுபிள்ளையுமாய்,  பிரபுக்கள்  அதிகாலமே  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  உனக்கு  ஐயோ!  (பிரசங்கி  10:16)

raajaa  si'rupi'l'laiyumaay,  pirabukka'l  athikaalamea  u'ngi'ravarga'lumaayirukkappatta  theasamea,  unakku  aiyoa!  (pirasanggi  10:16)

ராஜா  குலமகனுமாய்,  பிரபுக்கள்  வெறிக்க  உண்ணாமல்  பெலன்கொள்ள  ஏற்றவேளையில்  உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட  தேசமே,  நீ  பாக்கியமுள்ளது.  (பிரசங்கி  10:17)

raajaa  kulamaganumaay,  pirabukka'l  ve'rikka  u'n'naamal  belanko'l'la  eat'ravea'laiyil  u'ngi'ravarga'lumaayirukkappatta  theasamea,  nee  baakkiyamu'l'lathu.  (pirasanggi  10:17)

மிகுந்த  சோம்பலினால்  மேல்மச்சுப்  பழுதாகும்;  கைகளின்  நெகிழ்வினாலே  வீடு  ஒழுக்காகும்.  (பிரசங்கி  10:18)

miguntha  soambalinaal  mealmachchup  pazhuthaagum;  kaiga'lin  negizhvinaalea  veedu  ozhukkaagum.  (pirasanggi  10:18)

விருந்து  சந்தோஷத்துக்கென்று  செய்யப்படும்;  திராட்சரசம்  ஜீவனுள்ளோரைக்  களிப்பாக்கும்;  பணமோ  எல்லாவற்றிற்கும்  உதவும்.  (பிரசங்கி  10:19)

virunthu  santhoashaththukken'ru  seyyappadum;  thiraadcharasam  jeevanu'l'loaraik  ka'lippaakkum;  pa'namoa  ellaavat’ri’rkum  uthavum.  (pirasanggi  10:19)

ராஜாவை  உன்  மனதிலும்  நிந்தியாதே,  ஐசுவரியவானை  உன்  படுக்கையிலும்  நிந்தியாதே;  ஆகாயத்துப்  பறவை  அந்தச்  சத்தத்தைக்  கொண்டுபோகும்,  செட்டைகளுள்ளது  அந்தச்  செய்தியை  அறிவிக்கும்.  (பிரசங்கி  10:20)

raajaavai  un  manathilum  ninthiyaathea,  aisuvariyavaanai  un  padukkaiyilum  ninthiyaathea;  aagaayaththup  pa'ravai  anthach  saththaththaik  ko'ndupoagum,  settaiga'lu'l'lathu  anthach  seythiyai  a'rivikkum.  (pirasanggi  10:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!