Monday, March 07, 2016

Pirasanggi 1 | பிரசங்கி 1 | Ecclesiastes 1

தாவீதின்  குமாரனும்  எருசலேமின்  ராஜாவுமாகிய  பிரசங்கியின்  வாக்கியங்கள்.  (பிரசங்கி  1:1)

thaaveethin  kumaaranum  erusaleamin  raajaavumaagiya  pirasanggiyin  vaakkiyangga'l.  (pirasanggi  1:1)

மாயை,  மாயை,  எல்லாம்  மாயை  என்று  பிரசங்கி  சொல்லுகிறான்.  (பிரசங்கி  1:2)

maayai,  maayai,  ellaam  maayai  en'ru  pirasanggi  sollugi'raan.  (pirasanggi  1:2)

சூரியனுக்குக்  கீழே  மனுஷன்  படுகிற  எல்லாப்  பிரயாசத்தினாலும்  அவனுக்குப்  பலன்  என்ன?  (பிரசங்கி  1:3)

sooriyanukkuk  keezhea  manushan  padugi'ra  ellaap  pirayaasaththinaalum  avanukkup  palan  enna?  (pirasanggi  1:3)

ஒரு  சந்ததி  போகிறது,  மறு  சந்ததி  வருகிறது;  பூமியோ  என்றைக்கும்  நிலைத்திருக்கிறது.  (பிரசங்கி  1:4)

oru  santhathi  poagi'rathu,  ma'ru  santhathi  varugi'rathu;  boomiyoa  en'raikkum  nilaiththirukki'rathu.  (pirasanggi  1:4)

சூரியன்  உதிக்கிறது,  சூரியன்  அஸ்தமிக்கிறது;  தான்  உதித்த  இடத்திற்கே  அது  திரும்பவும்  தீவிரிக்கிறது.  (பிரசங்கி  1:5)

sooriyan  uthikki'rathu,  sooriyan  asthamikki'rathu;  thaan  uthiththa  idaththi’rkea  athu  thirumbavum  theevirikki'rathu.  (pirasanggi  1:5)

காற்று  தெற்கே  போய்,  வடக்கேயுஞ்சுற்றி,  சுழன்று  சுழன்று  அடித்து,  தான்  சுற்றின  இடத்துக்கே  திரும்பவும்  வரும்.  (பிரசங்கி  1:6)

kaat’ru  the’rkea  poay,  vadakkeayugnsut’ri,  suzhan'ru  suzhan'ru  adiththu,  thaan  sut’rina  idaththukkea  thirumbavum  varum.  (pirasanggi  1:6)

எல்லா  நதிகளும்  சமுத்திரத்திலே  ஓடி  விழுந்தும்  சமுத்திரம்  நிரம்பாது;  தாங்கள்  உற்பத்தியான  இடத்திற்கே  நதிகள்  மறுபடியும்  திரும்பும்.  (பிரசங்கி  1:7)

ellaa  nathiga'lum  samuththiraththilea  oadi  vizhunthum  samuththiram  nirambaathu;  thaangga'l  u’rpaththiyaana  idaththi’rkea  nathiga'l  ma'rupadiyum  thirumbum.  (pirasanggi  1:7)

எல்லாம்  வருத்தத்தினால்  நிறைந்திருக்கிறது;  அது  மனுஷரால்  சொல்லிமுடியாது;  காண்கிறதினால்  கண்  திருப்தியாகிறதில்லை,  கேட்கிறதினால்  செவி  நிரப்பப்படுகிறதுமில்லை.  (பிரசங்கி  1:8)

ellaam  varuththaththinaal  ni'rainthirukki'rathu;  athu  manusharaal  sollimudiyaathu;  kaa'ngi'rathinaal  ka'n  thirupthiyaagi'rathillai,  keadki'rathinaal  sevi  nirappappadugi'rathumillai.  (pirasanggi  1:8)

முன்  இருந்ததே  இனிமேலும்  இருக்கும்;  முன்  செய்யப்பட்டதே  பின்னும்  செய்யப்படும்;  சூரியனுக்குக்  கீழே  நூதனமானது  ஒன்றுமில்லை.  (பிரசங்கி  1:9)

mun  irunthathea  inimealum  irukkum;  mun  seyyappattathea  pinnum  seyyappadum;  sooriyanukkuk  keezhea  noothanamaanathu  on'rumillai.  (pirasanggi  1:9)

இதைப்  பார்,  இது  நூதனம்  என்று  சொல்லப்படத்தக்க  காரியம்  ஒன்றுண்டோ?  அது  நமக்கு  முன்னுள்ள  பூர்வகாலங்களிலும்  இருந்ததே.  (பிரசங்கி  1:10)

ithaip  paar,  ithu  noothanam  en'ru  sollappadaththakka  kaariyam  on'ru'ndoa?  athu  namakku  munnu'l'la  poorvakaalangga'lilum  irunthathea.  (pirasanggi  1:10)

முன்  இருந்தவைகளைப்பற்றி  ஞாபகம்  இல்லை;  அப்படியே  பின்வரும்  காரியங்களைப்பற்றியும்  இனிமேலிருப்பவர்களுக்கு  ஞாபகம்  இராது.  (பிரசங்கி  1:11)

mun  irunthavaiga'laippat'ri  gnaabagam  illai;  appadiyea  pinvarum  kaariyangga'laippat'riyum  inimealiruppavarga'lukku  gnaabagam  iraathu.  (pirasanggi  1:11)

பிரசங்கியாகிய  நான்  எருசலேமில்  இஸ்ரவேலருக்கு  ராஜாவாயிருந்தேன்.  (பிரசங்கி  1:12)

pirasanggiyaagiya  naan  erusaleamil  isravealarukku  raajaavaayirunthean.  (pirasanggi  1:12)

வானத்தின்கீழ்  நடப்பதையெல்லாம்  ஞானமாய்  விசாரித்து  ஆராய்ச்சி  செய்கிறதற்கு  என்  மனதைப்  பிரயோகம்பண்ணினேன்;  மனுபுத்திரர்  இந்தக்  கடுந்தொல்லையில்  அடிபடும்படிக்குத்  தேவன்  அதை  அவர்களுக்கு  நியமித்திருக்கிறார்.  (பிரசங்கி  1:13)

vaanaththinkeezh  nadappathaiyellaam  gnaanamaay  visaariththu  aaraaychchi  seygi'ratha’rku  en  manathaip  pirayoagampa'n'ninean;  manupuththirar  inthak  kadunthollaiyil  adipadumpadikkuth  theavan  athai  avarga'lukku  niyamiththirukki'raar.  (pirasanggi  1:13)

சூரியனுக்குக்  கீழே  செய்யப்படுகிற  காரியங்களையெல்லாம்  கவனித்துப்  பார்த்தேன்;  இதோ,  எல்லாம்  மாயையும்,  மனதுக்குச்  சஞ்சலமுமாயிருக்கிறது.  (பிரசங்கி  1:14)

sooriyanukkuk  keezhea  seyyappadugi'ra  kaariyangga'laiyellaam  kavaniththup  paarththean;  ithoa,  ellaam  maayaiyum,  manathukkuch  sagnchalamumaayirukki'rathu.  (pirasanggi  1:14)

கோணலானதை  நேராக்கக்கூடாது;  குறைவானதை  எண்ணிமுடியாது.  (பிரசங்கி  1:15)

koa'nalaanathai  nearaakkakkoodaathu;  ku'raivaanathai  e'n'nimudiyaathu.  (pirasanggi  1:15)

இதோ,  நான்  பெரியவனாயிருந்து,  எனக்குமுன்  எருசலேமிலிருந்த  எல்லாரைப்பார்க்கிலும்  ஞானமடைந்து  தேறினேன்;  என்  மனம்  மிகுந்த  ஞானத்தையும்  அறிவையும்  கண்டறிந்தது  என்று  நான்  என்  உள்ளத்திலே  சொல்லிக்கொண்டேன்.  (பிரசங்கி  1:16)

ithoa,  naan  periyavanaayirunthu,  enakkumun  erusaleamiliruntha  ellaaraippaarkkilum  gnaanamadainthu  thea'rinean;  en  manam  miguntha  gnaanaththaiyum  a'rivaiyum  ka'nda'rinthathu  en'ru  naan  en  u'l'laththilea  sollikko'ndean.  (pirasanggi  1:16)

ஞானத்தை  அறிகிறதற்கும்,  பைத்தியத்தையும்  மதியீனத்தையும்  அறிகிறதற்கும்,  நான்  என்  மனதைப்  பிரயோகம்பண்ணினேன்;  இதுவும்  மனதுக்குச்  சஞ்சலமாயிருக்கிறதென்று  கண்டேன்.  (பிரசங்கி  1:17)

gnaanaththai  a'rigi'ratha’rkum,  paiththiyaththaiyum  mathiyeenaththaiyum  a'rigi'ratha’rkum,  naan  en  manathaip  pirayoagampa'n'ninean;  ithuvum  manathukkuch  sagnchalamaayirukki'rathen'ru  ka'ndean.  (pirasanggi  1:17)

அதிக  ஞானத்திலே  அதிக  சலிப்புண்டு;  அறிவுபெருத்தவன்  நோவுபெருத்தவன்.  (பிரசங்கி  1:18)

athiga  gnaanaththilea  athiga  salippu'ndu;  a'rivuperuththavan  noavuperuththavan.  (pirasanggi  1:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!