Wednesday, March 30, 2016

Maththeayu 3 | மத்தேயு 3 | Matthew 3

அந்நாட்களில்   யோவான்ஸ்நானன்  யூதேயாவின்  வனாந்தரத்தில்  வந்து:  (மத்தேயு  3:1)

annaadka'lil  yoavaansnaanan  yootheayaavin  vanaantharaththil  vanthu:  (maththeayu  3:1)

மனந்திரும்புங்கள்,  பரலோகராஜ்யம்  சமீபித்திருக்கிறது  என்று  பிரசங்கம்  பண்ணினான்.  (மத்தேயு  3:2)

mananthirumbungga'l,  paraloagaraajyam  sameebiththirukki'rathu  en'ru  pirasanggam  pa'n'ninaan.  (maththeayu  3:2)

கர்த்தருக்கு  வழியை  ஆயத்தப்படுத்துங்கள்;  அவருக்குப்  பாதைகளைச்  செவ்வைபண்ணுங்கள்  என்று  வனாந்தரத்திலே  கூப்பிடுகிறவனுடைய  சத்தம்  உண்டென்று,  ஏசாயா  தீர்க்கதரிசியினால்  சொல்லப்பட்டவன்  இவனே.  (மத்தேயு  3:3)

karththarukku  vazhiyai  aayaththappaduththungga'l;  avarukkup  paathaiga'laich  sevvaipa'n'nungga'l  en'ru  vanaantharaththilea  kooppidugi'ravanudaiya  saththam  u'nden'ru,  easaayaa  theerkkatharisiyinaal  sollappattavan  ivanea.  (maththeayu  3:3)

இந்த  யோவான்  ஒட்டகமயிர்  உடையைத்  தரித்து,  தன்  அரையில்  வார்க்கச்சையைக்  கட்டிக்கொண்டிருந்தான்;  வெட்டுக்கிளியும்  காட்டுத்  தேனும்  அவனுக்கு  ஆகாரமாயிருந்தது.  (மத்தேயு  3:4)

intha  yoavaan  ottagamayir  udaiyaith  thariththu,  than  araiyil  vaarkkachchaiyaik  kattikko'ndirunthaan;  vettukki'liyum  kaattuth  theanum  avanukku  aagaaramaayirunthathu.  (maththeayu  3:4)

அப்பொழுது,  எருசலேம்  நகரத்தாரும்,  யூதேயா  தேசத்தார்  அனைவரும்,  யோர்தானுக்கு  அடுத்த  சுற்றுப்புறத்தார்  யாவரும்  அவனிடத்திற்குப்  போய்,  (மத்தேயு  3:5)

appozhuthu,  erusaleam  nagaraththaarum,  yootheayaa  theasaththaar  anaivarum,  yoarthaanukku  aduththa  sut’ruppu'raththaar  yaavarum  avanidaththi’rkup  poay,  (maththeayu  3:5)

தங்கள்  பாவங்களை  அறிக்கையிட்டு,  யோர்தான்  நதியில்  அவனால்  ஞானஸ்நானம்  பெற்றார்கள்.  (மத்தேயு  3:6)

thangga'l  paavangga'lai  a'rikkaiyittu,  yoarthaan  nathiyil  avanaal  gnaanasnaanam  pet’raarga'l.  (maththeayu  3:6)

பரிசேயரிலும்  சதுசேயரிலும்  அநேகர்  தன்னிடத்தில்  ஞானஸ்நானம்  பெறும்படி  வருகிறதை  அவன்  கண்டு:  விரியன்  பாம்புக்  குட்டிகளே!  வருங்கோபத்துக்குத்  தப்பித்துக்கொள்ள  உங்களுக்கு  வகைகாட்டினவன்  யார்?  (மத்தேயு  3:7)

pariseayarilum  sathuseayarilum  aneagar  thannidaththil  gnaanasnaanam  pe'rumpadi  varugi'rathai  avan  ka'ndu:  viriyan  paambuk  kuttiga'lea!  varungkoabaththukkuth  thappiththukko'l'la  ungga'lukku  vagaikaattinavan  yaar?  (maththeayu  3:7)

மனந்திரும்புதலுக்கு  ஏற்ற  கனிகளைக்  கொடுங்கள்.  (மத்தேயு  3:8)

mananthirumbuthalukku  eat’ra  kaniga'laik  kodungga'l.  (maththeayu  3:8)

ஆபிரகாம்  எங்களுக்குத்  தகப்பன்  என்று  உங்களுக்குள்ளே  சொல்லிக்கொள்ள  நினையாதிருங்கள்;  தேவன்  இந்தக்  கல்லுகளினாலே  ஆபிரகாமுக்குப்  பிள்ளைகளை  உண்டுபண்ண  வல்லவராயிருக்கிறார்  என்று  உங்களுக்குச்  சொல்லுகிறேன்.  (மத்தேயு  3:9)

aabirahaam  engga'lukkuth  thagappan  en'ru  ungga'lukku'l'lea  sollikko'l'la  ninaiyaathirungga'l;  theavan  inthak  kalluga'linaalea  aabirahaamukkup  pi'l'laiga'lai  u'ndupa'n'na  vallavaraayirukki'raar  en'ru  ungga'lukkuch  sollugi'rean.  (maththeayu  3:9)

இப்பொழுதே  கோடரியானது  மரங்களின்  வேர்  அருகே  வைத்திருக்கிறது;  ஆகையால்,  நல்ல  கனிகொடாத  மரமெல்லாம்  வெட்டுண்டு  அக்கினியிலே  போடப்படும்.  (மத்தேயு  3:10)

ippozhuthea  koadariyaanathu  marangga'lin  vear  arugea  vaiththirukki'rathu;  aagaiyaal,  nalla  kanikodaatha  maramellaam  vettu'ndu  akkiniyilea  poadappadum.  (maththeayu  3:10)

மனந்திரும்புதலுக்கென்று  நான்  ஜலத்தினால்  உங்களுக்கு  ஞானஸ்நானங்  கொடுக்கிறேன்;  எனக்குப்பின்  வருகிறவரோ  என்னிலும்  வல்லவராயிருக்கிறார்,  அவருடைய  பாதரட்சைகளைச்  சுமக்கிறதற்கு  நான்  பாத்திரன்  அல்ல;  அவர்  பரிசுத்த  ஆவியினாலும்  அக்கினியினாலும்  உங்களுக்கு  ஞானஸ்நானம்  கொடுப்பார்.  (மத்தேயு  3:11)

mananthirumbuthalukken'ru  naan  jalaththinaal  ungga'lukku  gnaanasnaanang  kodukki'rean;  enakkuppin  varugi'ravaroa  ennilum  vallavaraayirukki'raar,  avarudaiya  paatharadchaiga'laich  sumakki'ratha’rku  naan  paaththiran  alla;  avar  parisuththa  aaviyinaalum  akkiniyinaalum  ungga'lukku  gnaanasnaanam  koduppaar.  (maththeayu  3:11)

தூற்றுக்கூடை  அவர்  கையில்  இருக்கிறது;  அவர்  தமது  களத்தை  நன்றாய்  விளக்கி,  தமது  கோதுமையைக்  களஞ்சியத்தில்  சேர்ப்பார்;  பதரையோ  அவியாத  அக்கினியினால்  சுட்டெரிப்பார்  என்றான்.  (மத்தேயு  3:12)

thoot'rukkoodai  avar  kaiyil  irukki'rathu;  avar  thamathu  ka'laththai  nan'raay  vi'lakki,  thamathu  koathumaiyaik  ka'lagnchiyaththil  searppaar;  patharaiyoa  aviyaatha  akkiniyinaal  sutterippaar  en'raan.  (maththeayu  3:12)

அப்பொழுது  யோவானால்  ஞானஸ்நானம்  பெறுவதற்கு  இயேசு  கலிலேயாவைவிட்டு  யோர்தானுக்கு  அருகே  அவனிடத்தில்  வந்தார்.  (மத்தேயு  3:13)

appozhuthu  yoavaanaal  gnaanasnaanam  pe'ruvatha’rku  iyeasu  kalileayaavaivittu  yoarthaanukku  arugea  avanidaththil  vanthaar.  (maththeayu  3:13)

யோவான்  அவருக்குத்  தடை  செய்து:  நான்  உம்மாலே  ஞானஸ்நானம்  பெறவேண்டியதாயிருக்க,  நீர்  என்னிடத்தில்  வரலாமா  என்றான்.  (மத்தேயு  3:14)

yoavaan  avarukkuth  thadai  seythu:  naan  ummaalea  gnaanasnaanam  pe'ravea'ndiyathaayirukka,  neer  ennidaththil  varalaamaa  en'raan.  (maththeayu  3:14)

இயேசு  அவனுக்குப்  பிரதியுத்தரமாக:  இப்பொழுது  இடங்கொடு,  இப்படி  எல்லா  நீதியையும்  நிறைவேற்றுவது  நமக்கு  ஏற்றதாயிருக்கிறது  என்றார்.  அப்பொழுது  அவருக்கு  இடங்கொடுத்தான்.  (மத்தேயு  3:15)

iyeasu  avanukkup  pirathiyuththaramaaga:  ippozhuthu  idangkodu,  ippadi  ellaa  neethiyaiyum  ni'raiveat'ruvathu  namakku  eat'rathaayirukki'rathu  en'raar.  appozhuthu  avarukku  idangkoduththaan.  (maththeayu  3:15)

இயேசு  ஞானஸ்நானம்  பெற்று,  ஜலத்திலிருந்து  கரையேறினவுடனே,  இதோ,  வானம்  அவருக்குத்  திறக்கப்பட்டது;  தேவ  ஆவி  புறாவைப்போல  இறங்கி,  தம்மேல்  வருகிறதைக்  கண்டார்.  (மத்தேயு  3:16)

iyeasu  gnaanasnaanam  pet'ru,  jalaththilirunthu  karaiyea'rinavudanea,  ithoa,  vaanam  avarukkuth  thi'rakkappattathu;  theava  aavi  pu'raavaippoala  i'ranggi,  thammeal  varugi'rathaik  ka'ndaar.  (maththeayu  3:16)

அன்றியும்,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகி:  இவர்  என்னுடைய  நேசகுமாரன்,  இவரில்  பிரியமாயிருக்கிறேன்  என்று  உரைத்தது.  (மத்தேயு  3:17)

an'riyum,  vaanaththilirunthu  oru  saththam  u'ndaagi:  ivar  ennudaiya  neasakumaaran,  ivaril  piriyamaayirukki'rean  en'ru  uraiththathu.  (maththeayu  3:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!