Tuesday, March 29, 2016

Maththeayu 2 | மத்தேயு 2 | Matthew 2

ஏரோதுராஜாவின்  நாட்களில்  யூதேயாவிலுள்ள  பெத்லெகேமிலே  இயேசு  பிறந்தபொழுது,  கிழக்கிலிருந்து  சாஸ்திரிகள்  எருசலேமுக்கு  வந்து,  (மத்தேயு  2:1)

earoathuraajaavin  naadka'lil  yootheayaavilu'l'la  bethleheamilea  iyeasu  pi'ranthapozhuthu,  kizhakkilirunthu  saasthiriga'l  erusaleamukku  vanthu,  (maththeayu  2:1)

யூதருக்கு  ராஜாவாகப்  பிறந்திருக்கிறவர்  எங்கே?  கிழக்கிலே  அவருடைய  நட்சத்திரத்தைக்  கண்டு,  அவரைப்  பணிந்துகொள்ள  வந்தோம்  என்றார்கள்.  (மத்தேயு  2:2)

yootharukku  raajaavaagap  pi'ranthirukki'ravar  enggea?  kizhakkilea  avarudaiya  nadchaththiraththaik  ka'ndu,  avaraip  pa'ninthuko'l'la  vanthoam  en'raarga'l.  (maththeayu  2:2)

ஏரோதுராஜா  அதைக்  கேட்டபொழுது,  அவனும்  அவனோடுகூட  எருசலேம்  நகரத்தார்  அனைவரும்  கலங்கினார்கள்.  (மத்தேயு  2:3)

earoathuraajaa  athaik  keattapozhuthu,  avanum  avanoadukooda  erusaleam  nagaraththaar  anaivarum  kalangginaarga'l.  (maththeayu  2:3)

அவன்  பிரதான  ஆசாரியர்  ஜனத்தின்  வேதபாரகர்  எல்லாரையும்  கூடிவரச்செய்து:  கிறிஸ்துவானவர்  எங்கே  பிறப்பாரென்று  அவர்களிடத்தில்  விசாரித்தான்.  (மத்தேயு  2:4)

avan  pirathaana  aasaariyar  janaththin  veathapaaragar  ellaaraiyum  koodivarachseythu:  ki'risthuvaanavar  enggea  pi'rappaaren'ru  avarga'lidaththil  visaariththaan.  (maththeayu  2:4)

அதற்கு  அவர்கள்:  யூதேயாவிலுள்ள  பெத்லெகேமிலே  பிறப்பார்;  அதேனென்றால்:  (மத்தேயு  2:5)

atha’rku  avarga'l:  yootheayaavilu'l'la  bethleheamilea  pi'rappaar;  atheanen'raal:  (maththeayu  2:5)

யூதேயா  தேசத்திலுள்ள  பெத்லெகேமே,  யூதாவின்  பிரபுக்களில்  நீ  சிறியதல்ல;  என்  ஜனமாகிய  இஸ்ரவேலை  ஆளும்  பிரபு  உன்னிடத்திலிருந்து  புறப்படுவார்  என்று,  தீர்க்கதரிசியினால்  எழுதப்பட்டிருக்கிறது  என்றார்கள்.  (மத்தேயு  2:6)

yootheayaa  theasaththilu'l'la  bethleheamea,  yoothaavin  pirabukka'lil  nee  si'riyathalla;  en  janamaagiya  isravealai  aa'lum  pirabu  unnidaththilirunthu  pu'rappaduvaar  en'ru,  theerkkatharisiyinaal  ezhuthappattirukki'rathu  en'raarga'l.  (maththeayu  2:6)

அப்பொழுது  ஏரோது,  சாஸ்திரிகளை  இரகசியமாய்  அழைத்து,  நட்சத்திரம்  காணப்பட்ட  காலத்தைக்குறித்து  அவர்களிடத்தில்  திட்டமாய்  விசாரித்து:  (மத்தேயு  2:7)

appozhuthu  earoathu,  saasthiriga'lai  iragasiyamaay  azhaiththu,  nadchaththiram  kaa'nappatta  kaalaththaikku'riththu  avarga'lidaththil  thittamaay  visaariththu:  (maththeayu  2:7)

நீங்கள்  போய்,  பிள்ளையைக்குறித்துத்  திட்டமாய்  விசாரியுங்கள்;  நீங்கள்  அதைக்  கண்டபின்பு,  நானும்  வந்து  அதைப்  பணிந்துகொள்ளும்படி  எனக்கு  அறிவியுங்கள்  என்று  சொல்லி,  அவர்களைப்  பெத்லெகேமுக்கு  அனுப்பினான்.  (மத்தேயு  2:8)

neengga'l  poay,  pi'l'laiyaikku'riththuth  thittamaay  visaariyungga'l;  neengga'l  athaik  ka'ndapinbu,  naanum  vanthu  athaip  pa'ninthuko'l'lumpadi  enakku  a'riviyungga'l  en'ru  solli,  avarga'laip  bethleheamukku  anuppinaan.  (maththeayu  2:8)

ராஜா  சொன்னதை  அவர்கள்  கேட்டுப்  போகையில்,  இதோ,  அவர்கள்  கிழக்கிலே  கண்ட  நட்சத்திரம்  பிள்ளை  இருந்த  ஸ்தலத்திற்குமேல்  வந்து  நிற்கும்வரைக்கும்  அவர்களுக்குமுன்  சென்றது.  (மத்தேயு  2:9)

raajaa  sonnathai  avarga'l  keattup  poagaiyil,  ithoa,  avarga'l  kizhakkilea  ka'nda  nadchaththiram  pi'l'lai  iruntha  sthalaththi’rkumeal  vanthu  ni’rkumvaraikkum  avarga'lukkumun  sen'rathu.  (maththeayu  2:9)

அவர்கள்  அந்த  நட்சத்திரத்தைக்  கண்டபோது,  மிகுந்த  ஆனந்த  சந்தோஷமடைந்தார்கள்.  (மத்தேயு  2:10)

avarga'l  antha  nadchaththiraththaik  ka'ndapoathu,  miguntha  aanantha  santhoashamadainthaarga'l.  (maththeayu  2:10)

அவர்கள்  அந்த  வீட்டுக்குள்  பிரவேசித்து,  பிள்ளையையும்  அதின்  தாயாகிய  மரியாளையும்  கண்டு,  சாஷ்டாங்கமாய்  விழுந்து  அதைப்  பணிந்துகொண்டு,  தங்கள்  பொக்கிஷங்களைத்  திறந்து,  பொன்னையும்  தூபவர்க்கத்தையும்  வெள்ளைப்போளத்தையும்  அதற்குக்  காணிக்கையாக  வைத்தார்கள்.  (மத்தேயு  2:11)

avarga'l  antha  veettukku'l  piraveasiththu,  pi'l'laiyaiyum  athin  thaayaagiya  mariyaa'laiyum  ka'ndu,  saashdaanggamaay  vizhunthu  athaip  pa'ninthuko'ndu,  thangga'l  pokkishangga'laith  thi'ranthu,  ponnaiyum  thoobavarkkaththaiyum  ve'l'laippoa'laththaiyum  atha’rkuk  kaa'nikkaiyaaga  vaiththaarga'l.  (maththeayu  2:11)

பின்பு,  அவர்கள்  ஏரோதினிடத்திற்குத்  திரும்பிப்  போகவேண்டாமென்று  சொப்பனத்தில்  தேவனால்  எச்சரிக்கப்பட்டு,  வேறு  வழியாய்த்  தங்கள்  தேசத்திற்குத்  திரும்பிப்போனார்கள்.  (மத்தேயு  2:12)

pinbu,  avarga'l  earoathinidaththi’rkuth  thirumbip  poagavea'ndaamen'ru  soppanaththil  theavanaal  echcharikkappattu,  vea'ru  vazhiyaayth  thangga'l  theasaththi’rkuth  thirumbippoanaarga'l.  (maththeayu  2:12)

அவர்கள்  போனபின்பு,  கர்த்தருடைய  தூதன்  சொப்பனத்தில்  யோசேப்புக்குக்  காணப்பட்டு:  ஏரோது  பிள்ளையைக்  கொலைசெய்யத்  தேடுவான்;  ஆதலால்  நீ  எழுந்து,  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு  எகிப்துக்கு  ஓடிப்போய்,  நான்  உனக்குச்  சொல்லும்வரைக்கும்  அங்கே  இரு  என்றான்.  (மத்தேயு  2:13)

avarga'l  poanapinbu,  karththarudaiya  thoothan  soppanaththil  yoaseappukkuk  kaa'nappattu:  earoathu  pi'l'laiyaik  kolaiseyyath  theaduvaan;  aathalaal  nee  ezhunthu,  pi'l'laiyaiyum  athin  thaayaiyum  koottikko'ndu  egipthukku  oadippoay,  naan  unakkuch  sollumvaraikkum  anggea  iru  en'raan.  (maththeayu  2:13)

அவன்  எழுந்து,  இரவிலே  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு,  எகிப்துக்குப்  புறப்பட்டுப்போய்,  (மத்தேயு  2:14)

avan  ezhunthu,  iravilea  pi'l'laiyaiyum  athin  thaayaiyum  koottikko'ndu,  egipthukkup  pu'rappattuppoay,  (maththeayu  2:14)

ஏரோதின்  மரணபரியந்தம்  அங்கே  இருந்தான்.  எகிப்திலிருந்து  என்னுடைய  குமாரனை  வரவழைத்தேன்  என்று,  தீர்க்கதரிசியின்  மூலமாய்க்  கர்த்தரால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  (மத்தேயு  2:15)

earoathin  mara'napariyantham  anggea  irunthaan.  egipthilirunthu  ennudaiya  kumaaranai  varavazhaiththean  en'ru,  theerkkatharisiyin  moolamaayk  karththaraal  uraikkappattathu  ni'raivea'rumpadi  ippadi  nadanthathu.  (maththeayu  2:15)

அப்பொழுது  ஏரோது  தான்  சாஸ்திரிகளால்  வஞ்சிக்கப்பட்டதைக்  கண்டு,  மிகுந்த  கோபமடைந்து,  ஆட்களை  அனுப்பி,  தான்  சாஸ்திரிகளிடத்தில்  திட்டமாய்  விசாரித்த  காலத்தின்படியே,  பெத்லெகேமிலும்  அதின்  சகல  எல்லைகளிலுமிருந்த  இரண்டு  வயதுக்குட்பட்ட  எல்லா  ஆண்பிள்ளைகளையும்  கொலைசெய்தான்.  (மத்தேயு  2:16)

appozhuthu  earoathu  thaan  saasthiriga'laal  vagnchikkappattathaik  ka'ndu,  miguntha  koabamadainthu,  aadka'lai  anuppi,  thaan  saasthiriga'lidaththil  thittamaay  visaariththa  kaalaththinpadiyea,  bethleheamilum  athin  sagala  ellaiga'lilumiruntha  ira'ndu  vayathukkudpatta  ellaa  aa'npi'l'laiga'laiyum  kolaiseythaan.  (maththeayu  2:16)

புலம்பலும்  அழுகையும்  மிகுந்த  துக்கங்கொண்டாடலுமாகிய  கூக்குரல்  ராமாவிலே  கேட்கப்பட்டது;  ராகேல்  தன்  பிள்ளைகளுக்காக  அழுது,  அவைகள்  இல்லாதபடியால்  ஆறுதலடையாதிருக்கிறாள்  என்று,  (மத்தேயு  2:17)

pulambalum  azhugaiyum  miguntha  thukkangko'ndaadalumaagiya  kookkural  raamaavilea  keadkappattathu;  raakeal  than  pi'l'laiga'lukkaaga  azhuthu,  avaiga'l  illaathapadiyaal  aa'ruthaladaiyaathirukki'raa'l  en'ru,  (maththeayu  2:17)

எரேமியா  தீர்க்கதரிசியினால்  உரைக்கப்பட்டது  அப்பொழுது  நிறைவேறிற்று.  (மத்தேயு  2:18)

ereamiyaa  theerkkatharisiyinaal  uraikkappattathu  appozhuthu  ni'raivea'rit’ru.  (maththeayu  2:18)

ஏரோது  இறந்தபின்பு,  கர்த்தருடைய  தூதன்  எகிப்திலே  யோசேப்புக்குச்  சொப்பனத்தில்  காணப்பட்டு:  (மத்தேயு  2:19)

earoathu  i'ranthapinbu,  karththarudaiya  thoothan  egipthilea  yoaseappukkuch  soppanaththil  kaa'nappattu:  (maththeayu  2:19)

நீ  எழுந்து,  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு,  இஸ்ரவேல்  தேசத்துக்குப்  போ;  பிள்ளையின்  பிராணனை  வாங்கத்தேடினவர்கள்  இறந்துபோனார்கள்  என்றான்.  (மத்தேயு  2:20)

nee  ezhunthu,  pi'l'laiyaiyum  athin  thaayaiyum  koottikko'ndu,  israveal  theasaththukkup  poa;  pi'l'laiyin  piraa'nanai  vaanggaththeadinavarga'l  i'ranthupoanaarga'l  en'raan.  (maththeayu  2:20)

அவன்  எழுந்து  பிள்ளையையும்  அதின்  தாயையும்  கூட்டிக்கொண்டு  இஸ்ரவேல்  தேசத்துக்கு  வந்தான்.  (மத்தேயு  2:21)

avan  ezhunthu  pi'l'laiyaiyum  athin  thaayaiyum  koottikko'ndu  israveal  theasaththukku  vanthaan.  (maththeayu  2:21)

ஆகிலும்,  அர்கெலாயு  தன்  தகப்பனாகிய  ஏரோதின்  பட்டத்துக்கு  வந்து,  யூதேயாவில்  அரசாளுகிறான்  என்று  கேள்விப்பட்டு,  அங்கே  போகப்  பயந்தான்.  அப்பொழுது,  அவன்  சொப்பனத்தில்  தேவனால்  எச்சரிக்கப்பட்டு,  கலிலேயா  நாட்டின்  புறங்களிலே  விலகிப்போய்,  (மத்தேயு  2:22)

aagilum,  arkelaayu  than  thagappanaagiya  earoathin  pattaththukku  vanthu,  yootheayaavil  arasaa'lugi'raan  en'ru  kea'lvippattu,  anggea  poagap  bayanthaan.  appozhuthu,  avan  soppanaththil  theavanaal  echcharikkappattu,  kalileayaa  naattin  pu'rangga'lilea  vilagippoay,  (maththeayu  2:22)

நாசரேத்து  என்னும்  ஊரிலே  வந்து  வாசம்பண்ணினான்.  நசரேயன்  என்னப்படுவார்  என்று,  தீர்க்கதரிசிகளால்  உரைக்கப்பட்டது  நிறைவேறும்படி  இப்படி  நடந்தது.  (மத்தேயு  2:23)

naasareaththu  ennum  oorilea  vanthu  vaasampa'n'ninaan.  nasareayan  ennappaduvaar  en'ru,  theerkkatharisiga'laal  uraikkappattathu  ni'raivea'rumpadi  ippadi  nadanthathu.  (maththeayu  2:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!