ஆபிரகாமின்
குமாரனாகிய தாவீதின் குமாரனான
இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு:
(மத்தேயு 1:1)
aabirahaamin kumaaranaagiya thaaveethin
kumaaranaana iyeasuki'risthuvinudaiya vamsa varalaa'ru: (maththeayu
1:1)
ஆபிரகாம்
ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு
யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு
யூதாவையும் அவன் சகோதரரையும்
பெற்றான்; (மத்தேயு 1:2)
aabirahaam eesaakkaip pet’raan; eesaakku yaakkoabaip pet’raan; yaakkoabu yoothaavaiyum
avan sagoathararaiyum pet’raan; (maththeayu
1:2)
யூதா பாரேசையும் சாராவையும்
தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ்
எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம்
ஆராமைப் பெற்றான்; (மத்தேயு
1:3)
yoothaa paareasaiyum saaraavaiyum thaamaarinidaththil pet’raan; paareas
esroamaip pet’raan; esroam aaraamaip
pet’raan;
(maththeayu 1:3)
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்;
அம்மினதாப் நகசோனைப் பெற்றான்;
நகசோன் சல்மோனைப் பெற்றான்;
(மத்தேயு 1:4)
aaraam amminathaabaip pet’raan; amminathaab nagasoanaip pet’raan; nagasoan salmoanaip pet’raan; (maththeayu
1:4)
சல்மோன்
போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்;
போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்;
ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
(மத்தேயு 1:5)
salmoan boavaasai raakaabinidaththil pet’raan; boavaas oabeathai rooththinidaththil pet’raan; oabeath eesaayaip pet’raan; (maththeayu
1:5)
ஈசாய் தாவீது ராஜாவைப்
பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப்
பெற்றான்; (மத்தேயு 1:6)
eesaay thaaveethu raajaavaip
pet’raan;
thaaveethu raajaa uriyaavin
manaiviyaayirunthava'lidaththil saalomoanaip pet’raan; (maththeayu 1:6)
சாலொமோன்
ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம்
அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
(மத்தேயு 1:7)
saalomoan regobeyaamaip pet’raan; regobeyaam abiyaavaip pet’raan; abiyaa aasaavaip pet’raan; (maththeayu 1:7)
ஆசா யோசபாத்தைப் பெற்றான்;
யோசபாத் யோராமைப் பெற்றான்;
யோராம் உசியாவைப் பெற்றான்;
(மத்தேயு 1:8)
aasaa yoasapaaththaip pet’raan; yoasapaath yoaraamaip
pet’raan;
yoaraam usiyaavaip pet’raan; (maththeayu
1:8)
உசியா யோதாமைப் பெற்றான்;
யோதாம் ஆகாசைப் பெற்றான்;
ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
(மத்தேயு 1:9)
usiyaa yoathaamaip pet’raan; yoathaam
aakaasaip pet’raan; aakaas eseakkiyaavaip pet’raan; (maththeayu
1:9)
எசேக்கியா
மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்;
ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
(மத்தேயு 1:10)
eseakkiyaa manaaseayaip pet’raan; manaasea aamoanaip pet’raan; aamoan
yoasiyaavaip pet’raan; (maththeayu
1:10)
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்
போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும்
அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
(மத்தேயு 1:11)
baabiloanukkuch si'raippattup poagungkaalaththil,
yoasiyaa
ekoniyaavaiyum avanudaiya sagoathararaiyum pet’raan. (maththeayu
1:11)
பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்
போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப்
பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப்
பெற்றான்; (மத்தேயு 1:12)
baabiloanukkuch si'raippattup poanapinbu, ekoniyaa salaaththiyealaip pet’raan; salaaththiyeal sorobaabealaip pet’raan; (maththeayu
1:12)
சொரொபாபேல்
அபியூதைப் பெற்றான்; அபியூத்
எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம்
ஆசோரைப் பெற்றான்; (மத்தேயு
1:13)
sorobaabeal abiyoothaip pet’raan; abiyooth eliyaakkeemaip pet’raan; eliyaakkeem
aasoaraip
pet’raan;
(maththeayu 1:13)
ஆசோர் சாதோக்கைப் பெற்றான்;
சாதோக்கு ஆகீமைப் பெற்றான்;
ஆகீம் எலியூதைப் பெற்றான்;
(மத்தேயு 1:14)
aasoar saathoakkaip pet’raan; saathoakku aakeemaip pet’raan; aakeem eliyoothaip pet’raan; (maththeayu
1:14)
எலியூத்
எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார்
மாத்தானைப் பெற்றான்; மாத்தான்
யாக்கோபைப் பெற்றான்; (மத்தேயு
1:15)
eliyooth eleyaasaaraip pet’raan; eleyaasaar maaththaanaip
pet’raan;
maaththaan yaakkoabaip pet’raan; (maththeayu 1:15)
யாக்கோபு
மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப்
பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து
என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
(மத்தேயு 1:16)
yaakkoabu mariyaa'ludaiya purushanaagiya yoaseappaip pet’raan; ava'lidaththil ki'risthu ennappadugi'ra iyeasu pi'ranthaar. (maththeayu
1:16)
இவ்விதமாய்
உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல்
தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்;
தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு
தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல்
கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (மத்தேயு
1:17)
ivvithamaay u'ndaana
thalaimu'raiga'lellaam aabirahaammuthal thaaveethuvaraikkum pathinaalu
thalaimu'raiga'lum; thaaveethumuthal baabiloanukkuch si'raippattuppoana kaalamvaraikkum pathinaalu
thalaimu'raiga'lum; baabiloanukkuch si'raippattuppoana kaalamuthal
ki'risthuvaraikkum pathinaalu
thalaimu'raiga'lumaam. (maththeayu
1:17)
இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின்
விவரமாவது: அவருடைய தாயாகிய
மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள்
கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த
ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (மத்தேயு
1:18)
iyeasuki'risthuvinudaiya jenanaththin
vivaramaavathu: avarudaiya thaayaagiya mariyaa'l
yoaseappukku niyamikkappattirukkaiyil, avarga'l koodivarumunnea, ava'l parisuththa aaviyinaalea karppavathiyaanaa'l en'ru kaa'nappattathu. (maththeayu
1:18)
அவள் புருஷனாகிய யோசேப்பு
நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத்
தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு
1:19)
ava'l purushanaagiya yoaseappu
neethimaanaayirunthu, ava'lai avamaanappaduththa manathillaamal, iragasiyamaay ava'laith
tha'l'livida yoasanaiyaayirunthaan.
(maththeayu 1:19)
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய
தூதன் சொப்பனத்தில் அவனுக்குக்
காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய
யோசேப்பே, உன் மனைவியாகிய
மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே;
அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த
ஆவியினால் உண்டானது. (மத்தேயு
1:20)
avan ippadich sinthiththukko'ndirukkaiyil, karththarudaiya thoothan
soppanaththil avanukkuk
kaa'nappattu: thaaveethin
kumaaranaagiya yoaseappea, un manaiviyaagiya mariyaa'laich searththukko'l'la
aiyappadaathea; ava'lidaththil u’rpaththiyaayirukki'rathu parisuththa aaviyinaal u'ndaanathu.
(maththeayu 1:20)
அவள் ஒரு குமாரனைப்
பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை
நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான். (மத்தேயு 1:21)
ava'l oru kumaaranaip pe'ruvaa'l, avarukku
iyeasu
en'ru
peariduvaayaaga; eanenil
avar thamathu janangga'lin paavangga'lai neekki
avarga'lai iradchippaar en'raan. (maththeayu
1:21)
தீர்க்கதரிசியின் மூலமாய்க்
கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இதெல்லாம் நடந்தது. (மத்தேயு
1:22)
theerkkatharisiyin moolamaayk karththaraalea uraikkappattathu ni'raivea'rumpadi ithellaam nadanthathu.
(maththeayu 1:22)
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி
ஒரு குமாரனைப் பெறுவாள்;
அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல்
என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். (மத்தேயு
1:23)
avan: ithoa,
oru kannigai karppavathiyaagi oru kumaaranaip
pe'ruvaa'l; avarukku
immaanuveal en'ru peariduvaarga'l en'ru sonnaan. immaanuveal enbatha’rkuth theavan nammoadirukki'raar en'ru arththamaam.
(maththeayu 1:23)
யோசேப்பு
நித்திரை தெளிந்து எழுந்து,
கர்த்தருடைய தூதன் தனக்குக்
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச்
சேர்த்துக்கொண்டு; (மத்தேயு 1:24)
yoaseappu niththirai
the'linthu ezhunthu, karththarudaiya thoothan
thanakkuk katta'laiyittapadiyea than manaiviyaich searththukko'ndu;
(maththeayu 1:24)
அவள் தன் முதற்பேறான
குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு
இயேசு என்று பேரிட்டான்.
(மத்தேயு 1:25)
ava'l than mutha’rpea'raana kumaaranaip
pe'ruma'lavum ava'lai
a'riyaathirunthu, avarukku
iyeasu
en'ru
pearittaan. (maththeayu
1:25)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!